$
Guava For Weight Loss: நம் அன்றாட வாழ்வில் கிடைக்கும் எளிய பழமாகவே கொய்யா இருக்கிறது. இந்த பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்றே பலர் அழைக்கின்றனர். இதை சிறிதயதாக வெட்டியும், சாலட் அல்லது வெறும் வாயில் எனவும் பல வகையில் உட்கொள்கின்றனர். கொய்யா சாப்பிடுவது குமட்டல் முதல் செரிமான பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
கொய்யா உடல் எடையை குறைக்க உதவுமா?
கொய்யா நல்ல சுவையான பழம் என்றே பலரும் நினைக்கின்றனர். இதன் நன்மைகளை பலரும் அறிந்திருப்பதில்லை. கொய்யா சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், கொய்யாவில் காணப்படும் அத்தியாவசிய பண்புகள் எடை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இதற்கு கொய்யாவை சரியாக உட்கொள்வது அவசியம். உடல் எடையை குறைக்க கொய்யாவை எப்படி உட்கொள்வது என்பது குறித்து இந்த பதிவை முழுமையாக படித்துத் தெரிந்துக் கொள்வோம்.
இதையும் படிங்க: Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!
எடை இழப்புக்கு உதவும் கொய்யா பழம்

கொய்யாவில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் அதிக கலோரிகள் பிரச்சனையை ஏற்படுத்தாது. ஒரு கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது தவிர, கொய்யாவை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது, இதன் காரணமாக எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
கொய்யாவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இதன் காரணமாக முழுமையாக ஜீரணிக்க நேரம் எடுக்கும் மற்றும் உங்களுக்கு பசி ஏற்படாது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடையைக் குறைக்க உதவுகிறது.
எடை இழப்புக்கு கொய்யாவை எப்படி சாப்பிட வேண்டும்?

கொய்யாவின் ஆரோக்கியத்தை முழுமையாக பெற அதை தோலுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் செரிமானத்திற்கு தேவையான அத்தியாவசிய பண்புகள் அதன் தோலில் காணப்படுகின்றன.
கொய்யா ஸ்மூத்தி
கொய்யா ஸ்மூத்தி குடிப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதற்கு 2 கொய்யாப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, இதனுடன் 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 கப் பால் சேர்த்து குடிக்கவும்.
கொய்யா மற்றும் புதினா சாறு
கொய்யா மற்றும் புதினா சாறு செய்ய ஒரு மிக்ஸி ஜாரில் 2 கொய்யாவை போடவும், அரை வெள்ளரி, சில புதினா இலைகள், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, பிளாக் சால்ட் ஆகியவற்றை சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து சாறு செய்து குடிக்கலாம்.
கொய்யா சட்னி
கொய்யா சட்னி தயார் செய்ய 250 கிராம் கொய்யாவை பொடியாக நறுக்கவும். இப்போது 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது கொத்தமல்லி இலைகள், 2 பச்சை மிளகாய் மற்றும் சுவைக்க ஏற்ப உப்பு சேர்க்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இப்போது உங்கள் சட்னி ரெடி.
இதையும் படிங்க: ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்
கொய்யாவில் இதுபோன்ற ஏணைய பண்புகள் நிறைந்துள்ளது. உங்கள் எடை இழப்பு செயல்முறையில் கொய்ய பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். ஆரோக்கிய நலன் தொடர்பான கூடுதல் தகவலுக்கு Onlymyhealth உடன் இணைந்திருங்கள்.
Image Source: FreePik