How to do kapalbhati pranayama step by step: யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சிறந்த பயிற்சியாகும். யோகா என்ற சொல்லிற்கு இணைத்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்பது பொருளாகும். இது ஒருவருடைய உடலை ஆன்மாவுடன் இணைக்கிறது. அவ்வாறு, யோகாவில் பல்வேறு ஆசனங்கள் உள்ளன. மேலும், யோகாவில் எட்டு வெவ்வேறு பகுதிகள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே ஞானத்தை அடைய உதவுகிறது. அதில் ஒன்றாகவே பிராணாயாமம் அமைகிறது.
பிராணாயாமம் என்பது யோகாவில் உள்ள மூச்சுக் கட்டுப்பாட்டின் பயிற்சியைக் குறிக்கிறது. பிராணா என்பதற்கு உயிர் அல்லது மூச்சு என்றும், அயமா என்பதற்கு கட்டுப்பாடு என்றும் பொருள். இவையே ஒன்றாக இணைக்கப்பட்டு மூச்சுக்கட்டுப்பாடு எனக் கூறப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மேலும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் கபால்பதி பிராணயாமா செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Breathing Exercise Benefits: தினமும் மூச்சுப்பயிற்சி செய்வதால் உங்களுக்குக் கிடைக்கும் அற்புத நன்மைகள்
கபால்பதி பிராணயாமா
பிராணயாமாக்களில் ஒன்றாகவே கபால்பதி பிராணயாமா அமைகிறது. கபால்பதி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான ‘கபால்’ என்பதிலிருந்து வந்தது. இந்த கபால்பதி பிராணயாமா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. முதலில் கபால்பதி பிராணயாமாவை எவ்வாறு சரியாக செய்வது என்பது குறித்துக் காணலாம்.
கபால்பதி பிராணயாமா செய்முறை
- முதலில் முதுகெலும்பை நிமிர்த்தி வசதியாக உட்கார வேண்டும். பிறகு கைகளை முழங்கால்களில் வானத்தை நோக்கிய உள்ளங்கைகளுடன் வைக்க வேண்டும்.
- பிறகு ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
- சுவாசிக்கும் போது, வயிற்றை உள்ளிழுக்க வேண்டும். இதில் முதுகெலும்பை நோக்கி தொப்புளை பின்னால் இழுக்கலாம். இதை முடிந்தவரை வசதியாக செய்ய வேண்டும்.
- வயிற்று தசைகள் சுருங்குவதை உணர வலது கையை வயிற்றில் வைத்திருக்கலாம்.
- தொப்புள் மற்றும் வயிற்றை தளர்த்தும் போது, சுவாசம் தானாகவே நுரையீரலில் பாய்கிறது.
- இந்த கபால்பதி பிராணயாமாவை ஒரு சுற்று முடிக்க, இது போன்ற 20 சுவாசங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு சுற்று முடிந்ததும், கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுக்கலாம். இந்நிலையில் உடலில் உள்ள உணர்வுகளைக் கவனிக்கலாம்.
- இதை மீண்டும் இரண்டு சுற்றுகள் செய்யலாம்.
கபால்பதி பிராணயாமா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமான மேம்பாட்டிற்கு
இந்த பிராணயாமா வயிற்று தசைகளை ஈடுபடுத்தி, உள் உறுப்புகளை மசாஜ் செய்கிறது. மேலும் இது செரிமான அமைப்பை தூண்டவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்பாடு மற்றும் சிறந்த செரிமானத்திற்கும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Breathing Exercises: உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் இதைச் செய்யுங்கள்!
சுவாச ஆரோக்கியத்திற்கு
கபால்பதி யோகாசனம் சுவாச செயல்திறனை மேம்படுத்துகிறது. இதன் மூலம் காலப்போக்கில் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
வயிற்று தசைகளை பலப்படுத்த
இந்த யோகாசனம் செய்வது அடிவயிற்றை வலுப்படுத்துகிறது. இது உடலின் தோரணையை மேம்படுத்தி, உடலின் ஒட்டுமொத்த உடற்தகுதியையும் ஆதரிக்கிறது.
உடல் நச்சுக்களை நீக்க
விரைவான சுவாச நுட்பத்தின் உதவியுடன் உடலிலிருந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற நச்சுகளை வெளியேற்றலாம். இதன் மூலம் சுவாச ஆரோக்கியத்தை பலப்படுத்தலாம்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க
இந்த சுவாச நுட்பமானது நரம்பு மண்டலத்தைத் தூண்ட உதவுகிறது. இதன் மூலம் மனதை தளர்வாக்கி, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம்.
கபால்பதி பிராணயாமாவை யார் தவிர்க்க வேண்டும்?
குடலிறக்கம், கால்-கை வலிப்பு, முதுகுவலி அல்லது சமீபத்தில் வயிற்று அறுவை சிகிச்சை செய்திருப்பின் இந்த சுவாச நுட்பத்தைப் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சுவாச நுட்பத்தைப் பயிற்சி செய்யக் கூடாது. ஏனெனில், இது தீவிரமான வயிறு அழுத்தங்களை உள்ளடக்கியதாகும்.
மேலும், இதய பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இந்த சுவாச நுட்பத்தை யோகா நிபுணரின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே செய்ய வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Breathing Exercise: இந்த வகை மூச்சுப் பயிற்சியை செய்து பாருங்க! டக்குனு எடை குறைஞ்சிடும்
Image Source: Freepik