Doctor Verified

Night Time Breastfeeding: இரவு நேர தாய்ப்பாலில் உள்ள நன்மைகளும், சிக்கல்களும். நிபுணர் கூறும் விளக்கம்

  • SHARE
  • FOLLOW
Night Time Breastfeeding: இரவு நேர தாய்ப்பாலில் உள்ள நன்மைகளும், சிக்கல்களும். நிபுணர் கூறும் விளக்கம்

இரவு நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்குப் பல்வேறு நன்மைகளைத் தரும் எனினும், சீர்குலைந்த தூக்க முறைகள், மன அழுத்தன் அதிகரிப்பது போன்றவை தாய்மார்களுக்கு சவாலாக இருக்கும். ஆஸ்டர் ஆர்.வி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் ஆலோசகர் டாக்டர் ஸ்மிருதி டி நாயக் அவர்கள் இரவு நேர தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சவால்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Stop Baby Hiccups: பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்த இப்படி முயற்சி செஞ்சி பாருங்க!

இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள்

  • குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைகளுக்குத் தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், குழந்தைகளுக்குத் தேவையான கலோரிகளைப் பெறுவதற்கு தாய்ப்பால் உதவுகிறது.
  • தாய்ப்பால் கொடுப்பது, தாய்க்கும் குழந்தைக்கும் வலுவான உணர்ச்சி ரீதியான பிணைப்பைத் தருகிறது.
  • இது குழந்தையின் சர்க்காடியன் தளத்தை நிறுவுவதுடன், குழந்தைகள் வயதாகும் போது நீண்ட தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
  • இரவில் உணவளிப்பது தாயின் ஆக்ஸிடாஸின் மற்றும் ப்ரோலாக்டின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது பால் உற்பத்தி மற்றும் தாயின் நல்வாழ்வுக்கு அவசியமானதாகும்.

இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சவால்கள்

குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதில், தாய்மார்கள் சில சவால்களைச் சந்திக்கின்றனர்.

நீடித்த தூக்கமின்மையால், தாய்மார்கள் சோர்வடையலாம்.

இது அவர்களின் மனநிலை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை பாதிக்கும். இரவு நேரத்தில் உணவளிக்கும் போது பாதுகாப்பான தூக்க சூழலை உறுதி செய்வது குறித்த பாதுகாப்பு கவலைகள் ஏற்படும்.

தீவிர குழந்தை இறப்பு நோய்க்குறியைத் தடுக்க படுக்கை பகிர்வைத் தவிர்ப்பது போன்றவை பெற்றோருக்குக் கவலையைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: Premature Baby Care Tips: குறைமாத குழந்தைகளைப் பராமரிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள்

இரவு நேர தாய்ப்பால் ஊட்டல் சிக்கல்களை சமாளிப்பது எப்படி

குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்கள் இருப்பினும், இதை சமாளிப்பதற்கான சில வழிகளைக் காணலாம்.

  • குழந்தையின் பகல்நேர தூக்கத்தைப் பயன்படுத்தி தாய்மார்கள் தூங்கலாம்.
  • தூக்கமின்மையைக் குறைக்க குழந்தை தூங்கும் நேரத்தில் எல்லாம், தூங்க முயற்சி செய்யலாம்.
  • இரவு நேரங்களில் துணை அல்லது உதவி செய்யும் நபரை ஈடுபடுத்தவும். அவர்கள் டயபர் மாற்றங்களுக்கு உதவலாம். குழந்தையை அமைதிப்படுத்தலாம் அல்லது குழந்தையை உங்களிடம் கொண்டு வந்து உணவளிக்க வைக்கலாம். இது தாய்மார்களுக்குக் கூடுதல் ஓய்வைத் தரும்.
  • இரைச்சல் குறைப்பு, மங்கலான வெளிச்சம் மற்றும் வசதியான படுக்கை மூலம் தூக்க இடத்தை முடிந்தவரை வசதியாக வைத்துக் கொள்ளலாம்.
  • பாலூட்டும் தாய்மார்களுக்கு போதுமான நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்து அவசியமாகும். ஊட்டச்சத்துடன் இருக்க இரவு நேரத்தில் உணவளிக்கும் போது தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான திண்பண்டங்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாதுகாப்பான படுக்கையைப் பகிர்ந்து கொள்வதைப் பயிற்சி செய்யலாம் மற்றும் ஒன்றாக தூங்குவதைக் கருத்தில் கொள்ளலாம்.
  • படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தேர்வு செய்தால், பாதுகாப்பான தூக்க வழிகாட்டுதல்கள் பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இந்த பதிவும் உதவலாம்: High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

    வசதியான இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதற்கான குறிப்புகள்

    • தாய்மார்கள் தங்களுக்கும், குழந்தைக்கும் ஆன ஒரு நிதானமான நிலையைக் கண்டறிய வேண்டும்.
    • பொதுவான நிலைகளில் கால்பந்து பிடிப்பு, தொட்டில் பிடிப்பு அல்லது உங்கள் பக்கத்தில் படுத்துக் கொள்வது போன்றவை அடங்கும்.
    • தாய்மார்கள் குழந்தைக்கு இரவு உணவளிக்கும் போது ஓய்வெடுக்க உதவும் வகையில், அமைதியான மற்றும் வசதியான சூழலை உருவாக்கலாம்.
    • தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டும் போது ஏற்படும் முலைக்காம்பு வலி அல்லது அசௌகரியத்தைத் தவிர்க்க, தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைக்கு சரியாக உணவளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • தாய்க்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கும் வேளையில், குழந்தைக்கும் போதுமான பால் கிடைக்க லாட்ச் உதவுகிறது.
    • அதே போல நீரேற்றமாக இருக்க, இரவு உணவளிக்கும் போது அருகில் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளலாம்.
    • தாய்மார்கள் முலைக்காம்பு புண் அல்லது வறட்சியை அனுபவித்தால், ஒவ்வொரு முறை உணவளித்த பின்னும் லானோலின் அடிப்படையிலான முலைக்காம்பு கிரீம் தடவலாம்.
    • வாயுவினால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைப்பதற்கும் மற்றும் செரிமானத்திற்கு உதவுவதற்கும் குழந்தைக்கு எப்போதும் மெதுவாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    இந்த பதிவும் உதவலாம்: Baby Skin Care: குழந்தையின் சரும பராமரிப்புக்கு பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்

    Image Source: Freepik

    Read Next

    Baby Constipation Home Remedies: குழந்தைக்கு மலச்சிக்கல் குணமாக உதவும் வீட்டு வைத்தியங்கள்

    Disclaimer