$
Fibromyalgia Symptoms Diagnosis And Treatment: ஃபைப்ரோமையால்ஜியா என்னும் நிலை ஒரு சிக்கலான நிலையாகும். அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வர்ம் இந்த ஃபைப்ரோமியால்ஜியா நாள்பட்ட மற்றும் குழப்பமான மருத்துவ நிலை ஆகும். இவை சோர்வு, தூக்கக் கலக்கம், அறிவாற்றல் குறைபாடு, தசைக்கூட்டு வலி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த ஃபைப்ரோமியால்ஜியா ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இதனைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது ஒரு சவாலான நிலை ஆகும்.
ஃபைப்ரோமியால்ஜியா நோயைக் கண்டறிதல்
குழப்ப நிலையை ஏற்படுத்தும் ஃபைப்ரோமியால்ஜியாவின் முதன்மையான சவால்களில் இந்த நோயைக் கண்டறிதலும் ஒன்றாகும். இதன் பன்முகத்தன்மையும், உறுதியான நோய்றிதல் சோதனைகளும் இல்லாததால் நோயை கண்டறிவதற்கு அதிக நேரம் தேவைப்படுகின்றன. எனினும், அமெரிக்க ருமாட்டாலஜி கல்லூரியானது ஃபைப்ரோமியால்ஜியாவைக் கண்டறிவதற்கான குறிப்பிட்ட அளவுகோல்களை நிறுவியுள்ளது. இதில் ஃபைப்ரோமியால்ஜியாவினால், உடல் முழுவதும் குறிப்பிட்ட புள்ளிகளில் பரவலான வலி ஏற்படுதலாகும். இருப்பினும் இந்த ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான சரியான நோய் கண்டறிதல் முறை இல்லாததால் தவறான நோயறிதல் அல்லது தாமதமான நோயறிதலுக்குக் காரணமாகிறது.

வலியை ஏற்படுத்தும் பகுதிகள்
ஃபைப்ரோமியால்ஜியா நோயின் முக்கிய அறிகுறி நாள்பட்ட வலி ஆகும். இது ஒருவருக்கு பல்வேறு உடல் பகுதிகளையும் பலவீனப்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஃபைப்ரோமியால்ஜியா மூளை வலி சமிக்ஞைகளை செயலாக்கும் விதத்தை பாதிப்பதாக அமைகிறது. இது வலி உணர்வை அதிகமாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Frequent Cold and Cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!
மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அசாதாரணங்கள், லேசான தூண்டுதல்களுக்கு எதிர்வினையாகக்க் கூட இந்த வலிக்கு அதிக உணர்திறன் ஏற்படலாம் என ஷாலிமார் பேக், மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டு மருத்துவமனை, ருமாட்டாலஜி அசோசியேட் ஆலோசகர் டாக்டர் அலோக் கல்யாணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மிகை உணர்திறன் ஃபைப்ரோமியால்ஜியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாங்க முடியாத வலி ஏற்படும்.
ஃபைப்ரோமியால்ஜியா ஆபத்து காரணிகள்
ஃபைப்ரோமியால்ஜியாவின் சரியான காரணங்கள் சிக்கலாக இருப்பினும், சில காரணிகள் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. அதன் படி, ஃபைப்ரோமியால்ஜியாவின் ஆபத்து காரணிகள் உடல் அதிர்ச்சி அடைதல், மரபியல், நோய்த்தொற்றுகள், உணர்ச்சி மன அழுத்தம் போன்றவை ஆகும்.
மேலும், BMC தசைக்கூட்டு சீர்குலைவுகளில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், ஃபைப்ரோமியால்ஜியா நிலையில் குடல் நுண்ணுயிர் மற்றும் நாள்பட்ட அழற்சியின் மாற்றங்கள் போன்றவையும் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஃபைப்ரோமியால்ஜியா அறிகுறிகள்
ஃபைப்ரோமியால்ஜியாவில் பரவலான அறிகுறிகள் ஏற்படும். இது அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் காட்டாது. நபருக்கு நபர் மாறுபடலாம். இந்த நாள்பட்ட வலிக்குக் கூடுதலாக ஃபைப்ரோமியால்ஜியாவைக் கொண்டிருப்பவர்கள் தலைவலி, தூக்கம், சோர்வு, எரிச்சல் உணர்வு கொண்ட குடல் நோய்க்குறி, அறிவாற்றலில் குறைபாடுகள், மனச்சோர்வு, பதற்றம் போன்றவை அடங்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin B12 Deficiency: கவனிக்க வேண்டியவை இது தான்…
இந்த மாறுபட்ட அறிகுறிகளைக் கொண்ட ஃபைப்ரோமியால்ஜியா நோயறிதல் சவாலான ஒன்றாகும். எனவே இவற்றைக் கண்டறிய நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
மற்ற அறிகுறிகள்
ஃபைப்ரோமியால்ஜியா ஏற்படுவது உடல் ரீதியாக சோர்வடைவது மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் தனிமை, விரக்தி, உதவியற்ற உணர்வுகள் போன்றவை ஏற்படும். மேலும், கணிக்க முடியாத அளவிலான கவலை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

இந்த சிக்கலான நிலையான ஃபைப்ரோமியால்ஜியா மருத்துவ நிபுணர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் குழப்பத்திலேயே வைக்கிறது. நோய் கண்டறிதல் மற்றும் அறிகுறிகளில் சவால்கள் இருப்பினும், ஃபைப்ரோமியால்ஜியா பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதும், பாதிக்கப்பட்டவர்களுகு சிறந்த புரிதலை வழங்குவதும் அவசியமானதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version