நாம் ஆரோக்கியமாக இருக்க சரிவிகித உணவை உட்கொள்வது போலவே உடற்பயிற்சியும் முக்கியம். ஆனால், இப்போதெல்லாம் பலர் பல்வேறு காரணங்களால் உடல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். இதனால் பல வகையான உடல்நலக் கோளாறுகள் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. எனவே, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் அரை மணி நேரம் நடக்க வேண்டும்.
நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்தை தவிர பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் வயதுக்கு ஏற்ப நடைபயிற்சி மாறும். எந்த வயதில் எவ்வளவு நடக்க வேண்டும் என்று இங்கே காண்போம்.

நடைபயிற்சியின் நன்மைகள்:
- வாரத்தில் ஐந்து நாட்கள் 30 நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை 27 சதவிகிதம் குறைக்கும் .
- நடைப்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது பல வகையான நோய்களைத் தடுக்கிறது.
- நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் வியர்வை மூலம் வெளியேறும்.
- உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நடைபயிற்சி செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் நடைபயிற்சி செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
- வழக்கமான உடற்பயிற்சி உடல் எடையை குறைக்க உதவும்.
- மன உளைச்சல், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: Lose Fat Naturally: கட கடன்னு உடல் எடையை குறைக்க எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்க!
வயதுக்கு ஏற்ப எவ்வளவு நடக்க வேண்டும்?
- ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். அரை மணி நேரம் நடப்பதன் மூலம் சுமார் 10,000 படிகள் எடுக்கப்படும்.
- 5 முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 12,000 முதல் 15,000 படிகள் நடக்க வேண்டும்.
- 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தினமும் 12,000 படிகள் நடக்க வேண்டும்.
- 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11,000 படிகள் நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10,000 படிகள் நடந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 8,000 படிகள் நடப்பதன் மூலம் பயனடையலாம்.

குறிப்பு
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 8,000 படிகள் நடப்பதன் மூலம் பயனடையலாம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.