Fri Sep 11, 2026 | 10:20 PM IST

Doctor Verified

நடைபயிற்சி செய்கிறீர்களா.? இந்த மூன்று தவறுகளைத் தவிர்த்தால்தான் முழு நன்மை கிடைக்கும்.! மருத்துவர் ஷர்மிகா விளக்கம்..

நடைபயிற்சி உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை அளிக்கிறது. ஆனால் சரியாக செய்யவில்லை என்றால் பாதிப்பு ஏற்படும். மருத்துவர் ஷர்மிகா கூறிய நடைபயிற்சியின் நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகளை இங்கே படிக்கலாம்.

இன்றைய வேகமான வாழ்க்கையில், சீரான உடற்பயிற்சியை மேற்கொள்வது பலருக்கும் சிரமமாக உள்ளது. ஆனால், எளிதாக செய்யக்கூடிய மற்றும் அனைவருக்கும் ஏற்ற உடற்பயிற்சி என்று சொன்னால் அது நடைபயிற்சிதான். இதனை தொடர்ந்து செய்வதால் உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் ஷர்மிகா, டெய்ஸி ஹாஸ்பிடல் யூடியூப் சேனலில், நடைபயிற்சியின் நன்மைகள் மட்டுமல்லாமல், அதை மேற்கொள்ளும் போது நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றியும் எச்சரிக்கை செய்துள்ளார்.

video link: https://youtu.be/fWllt7ad1Fg

நடைபயிற்சியின் நன்மைகள்

இதய ஆரோக்கியம்:

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடப்பது, இதயத் துடிப்பை சீராக்கி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால், மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயம் குறைகிறது.

உடல் எடை கட்டுப்பாடு:

நடைபயிற்சி கலோரிகளை எரிக்க உதவுகிறது. அதிக எடை கொண்டவர்கள், தினசரி நடப்பதன் மூலம் உடல் எடையை குறைத்து, கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

mistakes-to-avoid-while-brisk-walking-main

சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்:

நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மேலும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

சீரான நடைபயிற்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது. இதனால் சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

மனநலம் மற்றும் தூக்கம்:

நடைபயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து, நல்ல உறக்கத்தைத் தருகிறது. தினசரி நடப்பவர்கள் அதிகம் சோர்வின்றி ஆழ்ந்த தூக்கம் பெறுவார்கள்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு 30 நிமிடம் நடப்பதால் என்ன ஆகும் தெரியுமா.? இது தெரிஞ்சா Shock ஆகிடுவீங்க.!

மருத்துவர் ஷர்மிகா கூறிய முக்கிய ஆலோசனைகள்

நிமிர்ந்து நடப்பது அவசியம்

பலர் நடைபயிற்சியின் போது கீழே பார்த்துக்கொண்டு நடக்கிறார்கள். இது நீண்டகாலத்தில் முதுகுவலியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, நேராக நிமிர்ந்து, முன்னே பார்த்துக்கொண்டு நடப்பது மிகவும் அவசியம்.

வெறும் வயிற்றில் நடைபயிற்சி செய்ய வேண்டாம்

பலர் தண்ணீர் குடித்துவிட்டு உடனே நடைபயிற்சிக்கு செல்கின்றனர். இது உடலின் நீர்ச்சத்து குறைய காரணமாகி, மயக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, வாழைத்தண்டு ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், கொத்தமல்லி ஜூஸ் போன்ற லேசான பானங்களை குடித்து பிறகே நடைபயிற்சிக்கு செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தினசரி பழக்கமாக்குங்கள்

உடல் நல நன்மைகள் கிடைக்க, நடைபயிற்சியை வாரத்தில் சில நாட்கள் மட்டும் அல்லாமல், தினசரி பழக்கமாக்க வேண்டும். தொடர்ந்து செய்வதன் மூலம் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்.

how-much-walking-should-i-do-a-week-to-lose-weight-main

இறுதியாக..

நடைபயிற்சி என்பது எளிய உடற்பயிற்சி என்றாலும், அதனை சரியான முறையில் மேற்கொள்வது மட்டுமே உடலுக்கு முழுமையான பலன்களை அளிக்கும். நிமிர்ந்து நடப்பது, வெறும் வயிற்றில் நடைபயிற்சி செய்யாமல் இருப்பது, தினசரி பழக்கமாக்குவது போன்ற முக்கிய குறிப்புகளை பின்பற்றினால், நடைபயிற்சியின் பயன்கள் இரட்டிப்பாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல்களுக்காக மட்டுமே. இதில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவர் ஷர்மிகா மற்றும் பிற நிபுணர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை. இங்கு கூறப்பட்ட பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு முன், உங்களின் தனிப்பட்ட உடல்நல நிலையைப் பொருத்து, உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது உடல்நல நிபுணரை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Read Next

வயது தடையல்ல! 70 வயது பாட்டி.. எடைத்தூக்கி முழங்கால் வலியை வென்ற கதை! டாக்டர் ரியாக்‌ஷன்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 23, 2025 22:06 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content