Fri Sep 11, 2026 | 11:16 PM IST

Protein for weight loss: மடமடனு உடல் எடை குறைய உங்க டயட்ல இது கட்டாயம் இருக்கணும்!

இன்று பலரும் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். உடல் எடையைக் குறைக்க முக்கியமாக ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் எடை குறைய புரோட்டீன் உணவுகளும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உடல் எடையைக் குறைக்க புரோட்டீன்கள் மிகவும் உதவுகிறது. இதில் எடை குறைய புரோட்டீன் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.

Can protein help you lose weight: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும் உணவுப்பொருள்களில் புரோட்டீன்களும் அடங்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், புரத உணவுகளை எடுத்துக் கொள்வது நீண்ட நேரம் முழுமையாக இருக்க உதவுகிறது. எனவே எடை இழப்புக்கான புரதத்தை உட்கொள்வது, வழக்கத்தை விட வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. புரதம் உட்கொள்ளல் எடையைக் குறைக்க உதவுவதாக இருப்பினும், ஒரு நாளைக்கு எவ்வளவு மற்றும் எப்படி புரதத்தை உட்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதே போல, மலச்சிக்கல் போன்ற பிற பிரச்சனைகளைத் தடுக்க ஊட்டச்சத்து மற்ற உயர் நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் இணைக்கப்பட வேண்டும். இதில் உடல் எடையிழப்புக்கு புரத உணவுகள் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Water For Weight Loss: உடல் எடையைக் குறைக்க தண்ணீரை இப்படி குடிச்சிப் பாருங்க!

உடல் எடையைக் குறைக்க புரதம் எவ்வாறு உதவுகிறது?

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க

கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கொழுப்புகளுடன் ஒப்பிடுகையில், புரத உணவுகள் செரிமானம் அடைய அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இவை வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. மேலும் ஓய்வில் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. அதிகளவிலான புரதம் உடலில் சேமிக்கப்படாமல், ஆற்றல் மூலமாக குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. ஆய்வு ஒன்றில், உணவில் காணப்படும் புரதம் ஆற்றல் செலவை அதிகரிக்கிறது. இது உணவை உட்கொண்ட பிறகு கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை விட புரத உணவுகள் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.

தசையிழப்பைக் குறைக்க

உடற்பயிற்சி செய்யும் போது, அதிலும் குறிப்பாக எதிர்ப்பு பயிற்சி, தசை சேதம் மற்றும் இழப்புக்கு வழிவகுக்கிறது. இதற்கு புரதத்தை சேர்த்துக் கொள்வது தசை திசுக்களை சரிசெய்து மீண்டும் உருவாக்க உதவுகிறது. மேலும் தசையிழப்பைக் குறைக்கவும், எடையிழப்பை ஆதரிக்கவும் உதவுகிறது. அதிகரித்த புரத உட்கொள்ளல், நாள் முழுவதும் சமமாக விநியோகிக்கப்பட்டால் எடையிழப்பு பயிற்சியின் போது ஏற்படும் தசையிழப்பைத் தடுக்க உதவுகிறது.

கொழுப்பு எரிவதை ஊக்குவிக்க

புரோட்டீன் ஆனது குளுகோகன் போன்ற பெப்டைட்-1 போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை கொழுப்பை எரிக்கவும், எடையிழப்பை ஆதரிக்கவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், அதிகரித்த புரத நுகர்வு மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளல், உடல் எடையைக் குறைக்கவும் மற்றும் கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cauliflower for weight loss: மளமளனு எடை குறையணுமா? இந்த ஒரு காய்கறியை சாப்பிடுங்க போதும்

வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதற்கு

புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், திருப்திகரமானதாக அமைகிறது. இது உடலின் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வழிவகுக்கிறது. ஏனெனில், கார்போஹைட்ரேட்டுகளை விட புரதம் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கிறது. எனவே இது உடலை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கிறது. ஆய்வு ஒன்றில், கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கொழுப்புகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களை விட புரத உணவுகள் அதிகளவு திருப்தியைத் தருகிறது. இது ஆற்றல் நுகர்வைக் குறைக்க உதவுகிறது.

புரதம் உட்கொள்வதற்கான சிறந்த வழி

நம் அன்றாட உணவில் முட்டை, தயிர், பனீர், பருப்பு வகைகள் அல்லது மெல்லிய இறைச்சிகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். உணவு மற்றும் சிற்றுண்டியாக புரதச்சத்துக்கள் நிறைந்த பருப்பு வகைகள், பால் பொருள்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு புரோட்டீன் சப்ளிமென்ட்ஸ்களான புரோட்டீன் ஷேக்குகளை எடுத்துக் கொள்ளலாம். எனவே சிறந்த உறிஞ்சுதல் மற்றும் தசை பராமரிப்புக்காக உணவு முழுவதும் புரத உட்கொள்ளலை சமமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Protein benefits: காலையில் புரோட்டீன் உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

Cauliflower for weight loss: மளமளனு எடை குறையணுமா? இந்த ஒரு காய்கறியை சாப்பிடுங்க போதும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content