$
Is Drinking Too Much Coffee Affect Body Heat: கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் போதும் சிலர் காபி மற்றும் டீ எடுத்துக் கொள்வதை தவிர்க்க மாட்டார்கள். ஆனால் கோடைக்காலத்திலும் காபி, டீ உட்கொள்ளல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், இந்த உடல் சூட்டை அதிகரிக்கும் விதமாகவே காபி அமைகிறது.
ஆம். பொதுவாக காபி அதிகமாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அவ்வாறே இந்த கால கட்டத்தில் அதிகப்படியான காஃபின் உட்கொள்வது உடலில் வெப்பத்தின்பக்கவிளைவுகளை மோசமாக்குகிறது. காபி உட்கொள்வதால் எவ்வாறு உடல் சூடு அதிகமாகிறது என்பது குறித்து இதில் விரிவாக காண்போம் வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: Oil Bath Tips: எண்ணெய் குளியல் நல்லதா.? எப்படி குளிக்கனும்..
காஃபின் என்றால் என்ன?
இது ஒரு இயற்கை தூண்டுதலாகக் கருதப்படுகிறது. இது உலகளவில் பரவலாக நுகரப்படும் பானங்களில் ஒன்றாகும். இது பொதுவாக தேயிலை, காபி மற்றும் கொக்கோ செடிகளில் காணப்படுகிறது. காஃபின் உட்கொள்வது உடலுக்கு சில வழிகளில் நன்மைகளைத் தருகிறது. சோர்வு ஏற்படும் காஃபின் எடுத்துக் கொள்வது சுறுசுறுப்பைத் தருகிறது. இது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், விழிப்புடன் இருக்க வைக்கவும் உதவுகிறது.
காஃபின் உட்கொண்ட பிறகு, அது குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. அதன் பிறகு இது கல்லீரலுக்குச் செல்கிறது. கல்லீரலிலிருந்து இது பல்வேறு கலவைகளாக உடைந்து, பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. காஃபின் முக்கியமாக மூளை செயல்பாட்டில் வேலை செய்கிறது. அதாவது அடினோசினின் விளைவுகள், மூளையைத் தளர்த்தி சோர்வடையச் செய்யும் நரம்பியல் கடத்தியாக அமைகிறது. ஆனால் காஃபின் உட்கொள்ளல் அடினோசின் வேலை செய்வதைத் தடுத்து சோர்வு மற்றும் மந்தத்தன்மையைத் தவிர்க்க உதவுகிறது.

உடல் வெப்பத்தை காஃபின் எவ்வாறு பாதிக்கிறது?
எப்போதாவது காஃபினேட்டட் பானங்களை உட்கொள்வது ஆபத்தானதாக இருக்காது. ஆனால், கோடை மாதங்களில் காஃபின் உட்கொள்ளலை கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம். கோடையில் காஃபின் உட்கொள்ளலை ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காணலாம்.
நீரிழப்பு
பொதுவாக காஃபின் உட்கொள்வது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். காஃபின் ஒரு டையூரிடிக் அமிலமாக இருப்பதால், இவை உடலில் இருந்து அதிக சிறுநீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம், சர்க்கரையுடன் கூடிய காபி மற்றொரு மோசமான கலவையாக அமைகிறது. இது கோடை வெப்பத்தில் நீரிழப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Heatwave: நமது உடல் எவ்வளவு வெப்பத்தைத் தாங்கும் தெரியுமா? உங்களுக்கான பதில் இங்கே!
மோசமான தூக்க முறைகள்
கோடைக்காலங்களில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, அது தூக்க முறைகளை சீர்குலைத்து விடலாம். மேலும், கோடையில் அறையின் வெப்பநிலையும் அதிகமாக இருப்பதால் தூங்குவது கடினம். இந்த நேரத்தில், காஃபின் எடுத்துக் கொள்வது அது உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால், எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும்.
அதிகரித்த இதயத்துடிப்பு
அதிகளவிலான காஃபின் உட்கொள்ளலால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டும் அதிகரிக்கப்படும். குறிப்பாக, கோடையில் காஃபின் உட்கொள்வது இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் இதய பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இது உடல் அசௌகரியம் அல்லது பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

வெப்பம் தொடர்பான நோய் ஆபத்து
காஃபின் உட்கொள்ளல் உடல் வெப்பநிலையின் ஒழுங்குமுறையை சீர்குலைக்கிறது. இதனால், வெப்ப சோர்வு அல்லது வெப்ப பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கலாம். இதனைத் தவிர்க்க காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
நாள்பட்ட கவலை
அதிகப்படியான காஃபின் நுகர்வு கவலை மற்றும் எரிச்சல் உணர்வுகளை தூண்டுகிறது. இது பதட்டைத் தூண்டும் காரணியாக அமைகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் காஃபினைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் அமைதியான மனநிலையை பெறுவதுடன், வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்கலாம். ஆய்வு ஒன்றில் காஃபின் அதிகமாக உட்கொள்வது கவலைக் கோளாறுகள், தூக்க பிரச்சனைகள், மனநோய் அறிகுறிகள் போன்ற மன ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
கோடைக்காலத்தில் அதிகளவிலான காஃபின் உட்கொள்ளல் இவ்வாறு உடல் வெப்பத்தை அதிகரிப்பதுடன், பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க, கோடையில் முடிந்தவரை காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Brown Rice Side Effects: பழுப்பு அரிசி நல்லது தான்! ஆனா இந்த பிரச்சனைகளையும் தரும்
Image Source: Freepik