Fri Sep 11, 2026 | 10:45 PM IST

Doctor Verified

முடி கொட்டுதா? மருத்துவர் சொல்வது இந்த 2 அயில்தான் – வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!

முடி உதிர்வு பிரச்சனைக்கு மருத்துவர் தீபா பரிந்துரைக்கும் இரண்டு சக்திவாய்ந்த இயற்கை எண்ணெய் ரெசிபிகள். நல்லெண்ணெய், குன்றிமணி, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் உள்ளிட்ட மூலிகைகளால் வீட்டிலேயே தயாரிக்கும் முடி அடர்த்தி வளர்க்கும் அயில். முழு விவரங்கள் இங்கே.

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என அனைத்து வயதினருக்கும் பொதுவாகவே முடி உதிர்வு அதிகரித்துள்ளது. உணவு பழக்கம், மனஅழுத்தம், தூக்கமின்மை, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், முடி உதிர்வை தடுக்கவும், புதிய முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் இரண்டு அற்புதமான எண்ணெய் ரெசிபிகளை மருத்துவர் தீபா பகிர்ந்து உள்ளார்.

Source: https://youtu.be/Uv2QMR91PGg

நல்லெண்ணெய் – முடிக்கான பழமையான மருந்து

பல்வேறு தலைமுறைகளாக பயன்பட்டு வரும் நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), முடிக்கு இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த எண்ணெயாகும். மருத்துவர் தீபா கூறுவதாவது, “வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தலையில் தடவி 30 நிமிடங்கள் விட்டு குளிப்பதால் - முடி வேர்கள் பலப்படும், உதிர்வு குறையும், தலைச்சருமத்திற்கு இயற்கையான குளிர்ச்சி கிடைக்கும்.”

ரெசிபி 1: குன்றிமணி – கரிசலாங்கண்ணி – நெல்லிக்காய் அயில்

தேவையானவை:

* குன்றிமணி – 50 கிராம்

* கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி

* காய வைத்த நெல்லிக்காய் – தேவையான அளவு

* நல்லெண்ணெய் – 1 லிட்டர்

* பால் – தேவையான அளவு

செய்முறை:

* குன்றிமணியை வெள்ளை துணியில் கட்டி பால் கொதிக்கும் போது அதற்குள் போடவும்.

* 15 நிமிடங்கள் காய்ச்சி குன்றிமணியை எடுத்து விடவும்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய்யில் பால் காய்ந்த குன்றிமணி, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு காய்க்கவும்.

* ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் சேமிக்கவும்.

இந்த அயில் முடி வேகமாக வளர உதவும் என்றும் மருத்துவர் கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: நரை முடி கருமையாக மாற வேண்டுமா.? வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை ஹேர் டை முறைகள்.. மருத்துவர் தீபா விளக்கம்..

ரெசிபி 2: 12 மூலிகை அயில் – சூப்பர் கூட்டு ரெசிபி

தேவையானவை (அனைத்தும் 1 லிட்டர் நல்லெண்ணெய்க்கு):

* அவுரி பொடி – 50 கிராம்

* கரிசலாங்கண்ணி – 50 கிராம்

* காட்டு நெல்லிக்காய் – 6

* கற்றாழை ஜெல் – 1 பெரிய கற்றாழையிலிருந்து

* வெந்தயம் – 3 tbsp

* செம்பருத்தி பூ – 10

* கறிவேப்பிலை – 1 கைப்பிடி

* மருதாணி இலை + பூ – தேவையான அளவு

* கருஞ்சீரகம் – 50 கிராம்

* பூண்டு – 6 பல்

* சின்ன வெங்காயம் – 10

செய்முறை:

* இரும்புக் கடாயில் நல்லெண்ணெயை சூடு செய்யவும்.

* மேலுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில் சேர்க்கவும்.

* புகை வரும் வரை காய்க்கவும்.

* ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் வடித்து சேமிக்கவும்.

இந்த எண்ணெய்யை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் முடி உதிர்வு குறையும், புதிய முடி வளரும், முடி அடர்த்தியாக ஆகும் என்று மருத்துவர் தீபா தெரிவித்தார்.

இறுதியாக..

முடி உதிர்வு பிரச்சனைக்கு அதிகமான செலவு செய்யாமல், வீட்டிலேயே இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கும் அயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு எண்ணெய்களும் முடி வேர்களை வலுப்படுத்தி, தலைச்சருமத்திற்கு ஊட்டச்சத்தையும் ஈரப்பதத்தையும் வழங்குகின்றன. நிரந்தரமாக பயன்படுத்தினால் உறுதியான மாற்றங்களை காணலாம்.

Disclaimer: இக்கட்டுரை பொதுத் தகவல் மற்றும் நிபுணர்களின் விளக்கத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உங்கள் உடல்நலக் கோளாறுகள், அலர்ஜி, தோல் பிரச்சனைகள் போன்றவை இருந்தால், பயன்படுத்தும் முன் மருத்துவரை அணுகவும்.

Read Next

நரை முடி கருமையாக மாற வேண்டுமா.? வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை ஹேர் டை முறைகள்.. மருத்துவர் தீபா விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 25, 2025 09:33 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content