Doctor Verified

நரை முடி கருமையாக மாற வேண்டுமா.? வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை ஹேர் டை முறைகள்.. மருத்துவர் தீபா விளக்கம்..

கசகசா, பாதாம், செம்பருத்தி, டீ-காபி போன்ற வீட்டுப் பொருட்களால் நரை முடியை கருமையாக்க இயற்கை ஹேர் டை செய்யும் முறையை மருத்துவர் தீபா விளக்கம். எந்தப் பக்கவிளைவுமின்றி செய்வது எப்படி? முழு தகவல்கள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
நரை முடி கருமையாக மாற வேண்டுமா.? வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை ஹேர் டை முறைகள்.. மருத்துவர் தீபா விளக்கம்..

நரை முடி, முடி உதிர்வு, பொடுகுத் தொல்லை என்று தலைமுடி பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், ரசாயனம் கலந்த ஹேர் டைகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஆனால் இவை தற்காலிக நிறத்தை மட்டும் அளிக்கிறதோ தவிர, நீண்ட காலத்தில் முடி வேர்களை பலவீனமாக்கி, முடி உதிர்வு மற்றும் அலர்ஜி பிரச்சனைகளை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இந்த நிலையில், வீட்டிலேயே எளிய பொருட்களைக் கொண்டு பக்கவிளைவு இல்லாமல் ஹேர் டை செய்வது எப்படி என்பதைக் குறித்து மருத்துவர் தீபா விளக்குகிறார்.


முக்கியமான குறிப்புகள்:-


Video Link: https://youtu.be/-jLcp_6L5vU

கசகசா–பாதாம் நேச்சுரல் ஹேர் பேக்

கசகசா மற்றும் பாதாம் இரண்டும் தலைமுடிக்கு ஊட்டச்சத்து வழங்கும் ஆற்றல் வாய்ந்த பொருட்களாகும்.

செய்முறை:

* 2 ஸ்பூன் கசகசா + 3 பாதாம் பருப்பு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

* காலையில் நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கவும்.

* அதனுடன் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி பால் சேர்த்து கலக்கவும்.

* தலைமுடி முழுவதும் பூசி 1 மணி நேரம் ஊறவைத்து கழுவினால், முடி மென்மையாகும், வேர்கள் பலப்படும், ஆரம்ப நிலையில் உள்ள நரை குறையும்.

* இந்த பேக் இயற்கையான ஹேர் குளோ வழங்கும்.

செம்பருத்தி ஹேர் பேக்

செம்பருத்திப் பூ தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர்.

செய்முறை:

* புதிதாகப் பறித்த செம்பருத்திப் பூக்களை நன்றாக அரைக்கவும்.

* பேஸ்ட்டை தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் வைக்கவும்.

* பின்னர் தலையை கழுவினால், முடி தீவிரமாக கண்டிஷனிங் செய்யப்படும், பளபளப்பு அதிகரிக்கும், வேர்கள் வலுப்படும்.

* செம்பருத்தி இயற்கையான நிறமூட்டும் தன்மையும் கொண்டது.

இந்த பதிவும் உதவலாம்: இனி வெங்காயத் தோலை தூக்கி போடாதீங்க.. முடிக்கு இது அவ்ளோ நன்மை தரும்!

டீ–காபி நேச்சுரல் ஹேர் டை

ரசாயன டைக்கு மாற்றாக உடனடி விளைவளிக்கும் நேச்சுரல் ஹேர் டை.

செய்முறை:

* 4 ஸ்பூன் டீ தூளை தண்ணீரில் கொதிக்க வைத்து திக்காக எடுத்து வடிகட்டவும்.

* அதனுடன் 4 தேக்கரண்டி காபி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* இந்த கலவையைத் தலையில் தடவி 1 மணி நேரம் வைக்கவும்.

* கழுவியவுடன் நரை முடி கருமையாகத் தோன்றும்.

* இது பாதுகாப்பானதும் எளிதிலும் செய்யக்கூடியதும்.

கூடுதலான தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்

பொடுகுத் தொல்லைக்கு

* தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து வேர்க்கால்களில் மசாஜ் செய்யலாம்.

* இது படிகட்டி இருக்கும் பொடுகை கரைத்து நீக்க உதவும்.

முடி உதிர்வைத் தடுக்க

* முட்டையின் வெள்ளைக் கரு + சிறிது தயிர் சேர்த்து பேக் தயாரிக்கவும்.

* 20–30 நிமிடங்கள் வைத்துப் பிறகு அலசினால் வேர்கள் வலுப்படும்.

முக்கிய எச்சரிக்கை: பேட்ச் டெஸ்ட் அவசியம்

மருத்துவர் தீபா கூறுவதாவது - எந்த ஹேர் பேக் அல்லது டையைப் பயன்படுத்துவதற்குமுன் பேட்ச் டெஸ்ட் செய்வது கட்டாயம்.

எப்படி?

* கலவையை காதின் பின்புறம் அல்லது மணிக்கட்டில் சிறிதளவு தடவவும்.

* 24 மணி நேரத்திற்கு ஏதேனும் சிவப்பு, அரிப்பு, எரிச்சல் இருந்தால் பயன்படுத்தக் கூடாது.

* இதனால் அலர்ஜி அபாயம் தவிர்க்கப்படும்.

இறுதியாக..

நரை முடி கருமையல்லாமல், ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் இருக்க வேண்டுமெனில், வீட்டில் உள்ள இயற்கை பொருட்களால் ஹேர் டை செய்வது சிறந்தது. கசகசா, பாதாம், செம்பருத்தி, டீ-காபி போன்றவை பக்கவிளைவு இல்லாமல் முடியை பாதுகாக்கும். இருப்பினும், ஒவ்வொரு முறை புதிய பேக் பயன்படுத்தும்போது பேட்ச் டெஸ்ட் செய்வதை மருத்தவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுத் தகவல் பகிர்வுக்காக மட்டுமே. அலர்ஜி, சென்சிட்டிவ் ஸ்கின், தலைமுடி நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த ஹேர் டையையும் பயன்படுத்தக் கூடாது.

Read Next

இனி வெங்காயத் தோலை தூக்கி போடாதீங்க.. முடிக்கு இது அவ்ளோ நன்மை தரும்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 24, 2025 12:20 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்