Benefit of tigernut to the body: நட்ஸ் என்றாலே நாம் பெரும்பாலும் பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா, பிரேசில் கொட்டைகள் போன்றவற்றைப் பற்றியே பார்த்திருப்போம். ஆனால், டைகர் கொட்டைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. டைகர் நட்ஸ் ஆனது சூஃபா, மஞ்சள் நட்ஸெட்ஜ் அல்லது மண் பாதாம் என்றும் அழைக்கப்படுகிறது. இது உண்ணக்கூடிய கிழங்கு வகையாகும். சுருக்கமான தோற்றம், கொண்டைக்கடலை போன்ற அளவு, மெல்லும் அமைப்பு மற்றும் தேங்காய் போன்ற இனிப்பு நட் சுவை கொண்டது. இது பல நூற்றாண்டுகளாக உட்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில், அவை உணவு மூலமாகவும், அதன் மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இது மெல்லும் அமைப்பு மற்றும் இயற்கையாகவே இனிப்பு மற்றும் நட்ஸ் சுவையையும் கொண்டதாகும். டைகர் நட்ஸ் ஆனது பல்வேறு உணவுகளுக்கு பல்துறை சேர்க்கையாக அமைகிறது. மேலும் இது மெல்லுவதற்கு சற்று சவாலாக அமைகிறது. இதன் நட் மற்றும் கிரீமி சுவையை ருசிக்க முடியும் என்பதால் இது சிறந்த சிற்றுண்டியாகக் கருதப்படுகிறது. இதில் டைகர் நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Makhana for weight loss: மின்னல் வேகத்தில் உடல் எடையைக் குறைக்க மக்கானாவை இப்படி சாப்பிடுங்க
டைகர் நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
டைகர் நட்ஸ் பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியதாகும். இது எந்தவொரு உணவிற்கும் சத்தான கூடுதலாக அமைகிறது. இது வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். வைட்டமின் E, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளது. மேலும், இது தாவர அடிப்படையிலான புரதத்தை வழங்குகிறது.
முக்கிய கட்டுரைகள்
டைகர் நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இதன் தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் காரணமாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
டைகர் நட்ஸில் அதிகளவு கரையாத உணவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த வகை உணவு நார்ச்சத்துக்கள் உடல் வழியாக செரிக்கப்படாமல் சென்று, மலத்தை மொத்தமாக அதிகரிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கிறது. இது எடையைக் குறைக்க உதவும் பொதுவான காரணியாகும். மேலும், இதில் உள்ள மாவுச்சத்துக்கள் எதிர்ப்புத் திறன் கொண்டதாகும். இதன் நார்ச்சத்துக்கள் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்பட்டு, நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டிற்கு
டைகர் நட்ஸ்களின் அதிகளவிலான நார்ச்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுப்பதிலும் நன்மை பயக்கும். இது குடலின் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. மேலும், இதில் அர்ஜினைன் என்ற அமினோ அமிலமும் உள்ளது. இது இன்சுலின் உற்பத்தி மற்றும் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமான வரம்பில் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோய் இருக்கும் போது இது மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Nuts for Brain Health: நினைவாற்றலை மேம்படுத்துவதில் பாதாமை விட வால்நட்ஸ் சிறந்ததா?
இதய ஆரோக்கியத்திற்கு
ஆலிவ் எண்ணெயைப் போலவே, டைகர் நட் எண்ணெயிலும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை உடலில் கொழுப்பின் அளவை ஆரோக்கியமான வரம்பில் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், இந்த எண்ணெயில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், சபோனின்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் உள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.
எலும்புகளை வலுவாக்க
டைகர் நட்ஸ்களில் உள்ள புரதங்கள் 18 அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. எனவே இது தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல மூலமாக விளங்குகிறது. மேலும், இதில் லைசின் மற்றும் கிளைசின் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இவை அனைத்துமே ஆரோக்கியமான எலும்புகள், தசைகள் மற்றும் இணைப்பு திசுக்களுக்கு பெரிதும் உதவுகிறது.
நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட
டைகர் நட்ஸில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும், இவை முதுமை எதிர்ப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு நன்மைகளை வழங்ககுகிறது. பொதுவாக, வறுத்த டைகர் நட்ஸ்களில், பச்சையான அல்லது வேகவைத்த டைகர் நட்ஸை விட அதிகளவிலான ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Soap Nuts Benefits: தலைமுடிக்கு மட்டுமில்ல... பூந்திக்கொட்டை அள்ளி, அள்ளி கொடுக்கும் சீக்ரெட் நன்மைகள் பத்தி தெரிஞ்சிக்கோங்க...!
Image Source: Freepik