Fri Sep 11, 2026 | 11:16 PM IST

Doctor Verified

ஒரே கஞ்சி போதும்! உடல் பலம்.. தசை வளர்ச்சி.. எடை அதிகரிப்பு.. எல்லாம் நடக்கும்.!

கேழ்வரகு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து தயாரிக்கும் கஞ்சி உடல் பலத்தை, தசை வளர்ச்சியை, எடை அதிகரிப்பை மேம்படுத்தும் என்று சித்த மருத்துவர் எஸ். காமராஜ் விளக்கம். முழு செய்முறை மற்றும் நன்மைகள் இங்கே.

உடல் பலவீனமாக இருப்பவர்கள், வளர்ந்து வரும் குழந்தைகள், தொடர்ந்து சோர்வாக உணரும் ஆண்கள் - பெண்கள் அனைவருக்கும் உடல் வலிமை சேர்க்கும் மூன்று முக்கிய உணவுப்பொருட்கள் நம்மிடையே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. கேழ்வரகு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை - இந்த மூன்றையும் சேர்த்து எப்படி உடலை நிறைவும் வலிமையுமாக வைத்திருக்கலாம் என்பதைக் குறித்து தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் விவரித்துள்ளார் சித்த மருத்துவர் எஸ். காமராஜ்.

உடலை பலப்படுத்தும் 3 முக்கிய பொருள்கள்

  • கேழ்வரகு – 1 கிலோ
  • பொட்டுக்கடலை – 1/2 கிலோ
  • வேர்க்கடலை – 1/2 கிலோ

இந்த மூன்றும் மலிவான விலையில் கிடைக்கும், ஊட்டச்சத்து நிறைந்தவை, உடல் வளர்ச்சிக்கு அவசியமானவை.

செய்முறை – வீட்டிலேயே தயாரிக்கலாம்

1. கேழ்வரகு (முளைகட்டுதல்)

  • கேழ்வரகை ஒரு நாள் முளைக்கட்டவும்
  • நிழலில் உலர்த்தி, ஈரம் இல்லாமல் சற்று வறுக்கவும்

2. பொட்டுக்கடலை

வாணலியில் லேசாக வறுக்கவும்

3. வேர்க்கடலை

தோலுடன் லேசாக வறுத்து எடுக்கவும்

4. கலவை

  • மூன்றையும் சேர்த்து மிஷினில் அரைத்து மா எடுக்கவும்
  • சலித்துப் பாதுகாப்பாக வைக்கவும்

எப்படிச் சாப்பிடுவது?

  • ஒரு நாள் 1 முதல் 3 டீஸ்பூன் வரை உங்கள் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம்
  • தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  • இனிப்பு தேவைப்பட்டால்: பனங்கருப்பட்டி / நாட்டுச்சர்க்கரை
  • உப்பு சேர்த்தும் குடிக்கலாம்
  • நாள் ஒன்றுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வரை எடுத்துக்கொள்ளலாம்

மருத்துவர் காமராஜ் கூறுவதுபடி, நீர்க்கஞ்சி வடிவில் குடிப்பதே அதிவேகமாக உறிஞ்சி உடலுக்கு பலம் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: ஹெல்த்தியான தினை கலவை ரெசிபியை எப்படி செய்வது? இதை குளிர்காலத்தில் ஏன் சாப்பிட வேண்டும்?

இந்த கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் பலம் அதிகரிக்கும்

மேலும் சோர்வில்லாமல் தினமும் சுறுசுறுப்புடன் இருக்கும் சக்தி கிடைக்கும்.

தசை வளர்ச்சி மேம்படும்

குறிப்பாக உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த புரத ஆதாரம்.

எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும்

குப்பை உணவுகளால் இல்லாமல், இயற்கையாக எடை உயரும்.

எலும்புகள் வலுவாகும்

கேழ்வரகின் அதிக கால்சியம், வேர்க்கடலையின் மாங்கனீசு, பொட்டுக்கடலையின் இரும்புச்சத்து–எலும்புகளை வலுப்படுத்தும்.

ஆற்றல் மிகுந்த உணவு

குழந்தைகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை எல்லோருக்கும் பொருத்தமான ஆற்றல் கலவை.

View this post on Instagram

A post shared by Dr S Kamaraj BSMS, DIP in Yoga (@drskamaraj)

மருத்துவர் குறிப்பிடும் ஒவ்வொரு பொருளின் முக்கிய நன்மைகள்

கேழ்வரகு நன்மைகள்

* தானியங்களில் அதிக கால்சியம்

* முளைக்கட்டினால் இரும்புச்சத்து 10 மடங்கு உயர்வு

* செரிமானத்திற்கு மிகவும் இதமாக செயல்படும்

* உணவை விரைவாக சக்தியாக மாற்றும்

பொட்டுக்கடலை நன்மைகள்

* புரதம் + நார்ச்சத்து + தாதுக்கள் நிறைந்து

* குறைந்த கிளைசெமிக் (diabetic-friendly)

* இரும்புச்சத்து, B வைட்டமின்கள் அதிகம்

* எலும்பு ஆரோக்கியம் & எடை மேலாண்மைக்கு சிறந்தது

வேர்க்கடலை நன்மைகள்

* நல்ல கொழுப்பு (மோனோ & பாலிசாச்சுரேட்டட்)

* இதய ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பானது

* குறைந்த GI – இன்சுலின் கட்டுப்பாடு

* மாங்கனீசு, பாஸ்பரஸ் – திசு வளர்ச்சியை ஊக்குவிக்கும்

இறுதியாக..

இயற்கையான மூன்று பொருட்கள் - கேழ்வரகு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை - வேறு எந்த விலையுயர்ந்த சப்ளிமென்ட்களையும் தேவைப்படாமல், உடலுக்கு தேவையான வலிமை, தசை வளர்ச்சி, ஆற்றல் மற்றும் எடை அதிகரிப்பை வழங்குகின்றன. சித்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்த எளிய கஞ்சி குடும்பம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய ஒரு முழுமையான ஆரோக்கிய உணவாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. உடல் நலநிலை, நோய், மருந்து பயன்பாடு போன்ற விஷயங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

Read Next

பனங்கற்கண்டு + சுக்கு = குழந்தைகளின் சளிக்கு மாய வைத்தியம்.! ஆயுர்வேத நிபுணர் சொல்லும் எளிய ரெசிபி..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 11, 2025 13:19 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content