Benefits of evening walks during winter: பொதுவாக நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியின் எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் அளவற்றதாகும். இது அனைத்து உடற்பயிற்சி நிலைமைகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். உடல் ரீதியாக, நடைபயிற்சி மேற்கொள்வது எடை மேலாண்மை, இதய ஆரோக்கியம், தசைகள் மற்றும் எலும்பு ஆரோக்கியம் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. மேலும், இது மன ரீதியான நன்மைகளாக மன அழுத்தத்தைக் குறைக்கவும், நல்ல மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஆனால், எல்லா நேரங்களிலும் எல்லோரும் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்கள் என்பது கூறமுடியாத ஒன்றாகும். ஏனெனில், குளிர்ந்த காலநிலையின் போது பெரும்பாலும் நடைபயிற்சியை விரும்ப மாட்டார்கள். இந்தக் காலநிலையின் போது காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. அதன் படி, குளிர்காலத்தில் மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 10000 Steps Walking: தினசரி 10,000 நடைகள் என்பது சாத்தியமா? இதற்கு என்ன செய்ய வேண்டும்?
குளிர்காலத்தில் மாலை நடைபயிற்சி செய்வதன் நன்மைகள்
உடல் எடையை நிர்வகிக்க
குளிர் மாதங்களில் மாலை நடைபயிற்சி மேற்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். பெரும்பாலும் குளிர்ந்த மாதங்களில் எடை இலக்குகள் பூர்த்தி செய்யப்படுவதும், கூடுதல் கலோரிகளைக் குறைப்பதும் சற்று கடினமான ஒன்று தான். எனினும், குளிர்காலத்தில் உடல் எடையைக் குறைக்க மாலை நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்த தேர்வாக அமைகிறது. நடைபயிற்சி செய்வது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுவதுடன், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
குளிர்காலத்தில் நோய்த்தொற்றுக்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த பருவமானது சளி, இருமல் மற்றும் வைரஸ் தொற்றுக்கள் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில், ஒருவரின் செயல்திறன் மற்றும் உற்பத்தித் திறன் பாதிக்கப்படலாம். எனவே, சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருவர் மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இது அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களின் அபாயத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு
குளிர்காலத்தில் உடல் இயக்கம் குறைந்து காணப்படுகிறது. இதனால், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பு ஏற்படுகிறது. எனவே குளிர்ந்த காலநிலையின் போது எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தில் ஒருவர் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். இதற்கு எளிதான வழியாக நடைபயிற்சி அமைகிறது. எனவே குளிர்கால மாதங்களில் மாலை நேரத்தில் நீண்ட நடைப்பயணம் மேற்கொள்ளலாம். இது மூட்டுகளை நெகிழ்வாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Water Walking Benefits: நீரில் நடைபயிற்சி செஞ்சிருக்கீங்களா? இது தெரிஞ்சா நீங்களும் நடப்பீங்க
தூக்க சுழற்சியை மேம்படுத்துவதற்கு
மாலை நேர நடைப்பயிற்சிக்கு செல்லும் போது, உடலிலிருந்து அதிக கலோரிகள் எரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால், உடல் ரீதியாக சற்று சோர்வை உணரலாம். இவ்வாறு இருப்பது, ஒரு நபர் சரியான நேரத்தில் தூங்குவதற்கும் நன்றாக தூங்குவதற்கும் வழிவகுக்கிறது. அதாவது, நடைப்பயிற்சியானது சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்துகிறது. சர்க்காடியன் தளத்தை ஒழுங்குபடுத்துவது, இயற்கையாகவே நாம் இயற்கையோடு ஒத்திசைந்து சிறந்த வாழ்க்கை முறையை வழிநடத்தலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த
குளிர்காலத்தில் நீண்ட நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, இது இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. பொதுவாக, குளிர்காலத்தில் நமது உடலில் இரத்த நாளங்கள் சுருங்கி, நமது ஆரோக்கியத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனினும், நாம் தினமும் நடைபயிற்சி செய்வதை தேர்ந்தெடுக்கும் போது, நமது இதயம் உகந்த அளவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மனநிலை மேம்பாட்டிற்கு
குளிர்ந்த காலநிலையில் உற்சாகமற்றதாக இருப்பது பொதுவான ஒன்று தான். உடலில் உள்ள இந்த மந்தமான தன்மையானது உற்பத்தித்திறனை எளிதில் குறைக்கலாம். எனவே, எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதை உறுதிசெய்ய, நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மேலும், நடைபயிற்சி செய்வது உடலில் எண்டோர்பின்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. என்டோர்பின்கள் நல்ல ஹார்மோன் ஆகும். இது குளிர்கால மனநல பாதிப்புகளை எளிதாகவும், திறமையாகவும் வெல்ல உதவுகிறது. இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மன அழுத்த அளவைக் குறைப்பதுடன், நிர்வகிக்கவும் முடியும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இவ்வாறு குளிர்காலத்தில் மாலை நடைபயிற்சி மேற்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Types of Walking: நடைபயிற்சியில் இத்தனை வகைகள் இருக்கா? இது தெரியாம போச்சே
Image Source: Freepik