Greek Yogurt Benefits: உணவில் கிரேக்க தயிர் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

  • SHARE
  • FOLLOW
Greek Yogurt Benefits: உணவில் கிரேக்க தயிர் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்


கிரேக்க தயிர் நன்மைகள்

கிரேக்க தயிரை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான குடல்

கிரேக்க யோகர்ட்டில் உள்ள புரோபயாடிக்குகள் நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை ஆதரிக்கிறது. இதன் மூலம் சிறந்த செரிமானம், நோய் எதிர்ப்புச் சக்தி, மனநிலை ஒழுங்குமுறை, மற்றும் ஆரோக்கியமான குடலமைப்பைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Green Tea: நலன் தரும் கிரீன் டீயின் அற்புத பயன்கள் என்னென்ன தெரியுமா?

எடை மேலாண்மை

கிரேக்க தயிரில் உள்ள புரதச் சத்துக்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தசை வலிமையை அதிகரித்து, ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

புரதம் நிறைந்த ஆதாரம்

கிரேக்க தயிரை புரதத்தின் சக்தி என்றே கூறலாம். எனவே இது புரத உட்கொள்ளலை அதிகரிக்க விரும்புவோர்க்கு சிறந்த தேர்வாக அமைகிறது. தசை பழுது, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு புரதம் அவசியமான ஒன்றாகும்.

சோடியம் உட்கொள்ளலைக் குறைத்தல்

வழக்கமான தயிருடன் ஒப்பிடுகையில், கிரேக்க தயிரில் சோடியம் குறைவாக உள்ளது. சோடியம் உட்கொள்ளலைக் குறைக்க விரும்புபவர்களுக்கு கிரேக்க தயிர் சிறந்த தேர்வாகும். இது இதயத்திற்கு பாதுகாப்பை அளிக்கக் கூடியதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!

சமையல் மூலப்பொருள்

கிரேக்க தயிர் சமையலுக்கு பல வகைகளில் கூடுதலாக இருக்கும். சமையலில் புளிப்பு கிரீம்க்கு மாற்றாக இந்த கிரேக்க தயிரை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு

கிரேக்க தயிர் குறைந்த சர்க்கரை மற்றும் அதிக புரதம் உள்ளடக்கியதாகும். எனவே இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தருகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு

கிரேக்க தயிர் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த மூலங்களாகும். இவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. இதன் வழக்கமான நுகர்வு ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இன்னும் பிற எலும்பு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

கிரேக்க தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேலே கூறப்பட்ட அனைத்து நன்மைகளையும் பெறலாம். இதனை சிற்றுண்டியாக காலை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடியதாக அமைகிறது.

இந்த புரதம் நிறைந்த ஊட்டச்சத்து குடல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. கிரேக்க தயிரை உட்கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமான நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

Capsicum Side Effects: கேப்சிகம் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு எவ்வளவு ஆபத்து தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்