$
Benefits Of Surya Namaskar: அன்றாட வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் போன்றவை உடல் மற்றும் மனதிற்கு ஆரோக்கியத்தைத் தரும். அந்த வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல், ஆரோக்கியமான உணவைப் பேணுதல், போதுமான துக்கம் போன்றவை நன்மைகளைத் தரும். அதன் படி காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்வதாக அமைகிறது. சூரிய நமஸ்காரம் என்பது 12 படி வடிவத்தை உள்ளடக்கியதாகும். இது முழுமையான பயிற்சிக்கு சமமாக கருதப்படுகிறது. இந்த யோகாசனங்கள் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
சூரிய நமஸ்காரத்தின் ஆரோக்கிய நன்மைகள்
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் மற்றும் மனதிற்கு கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
உடல் எடை குறைய
சூரிய நமஸ்காரத்தில் உள்ள 12 படிகள், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. சூரிய நமஸ்காரத்தை அதிக வேகத்தில் செய்யப்படும் போது, உடல் எடையைக் குறைக்கலாம். இந்த உடற்பயிற்சி செய்வது உடலில் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. மேலும், உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்தவும், நல்ல தோரணையைத் தரவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Chandra Namaskar Benefits: சந்திர நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
செரிமான மேம்பாட்டிற்கு
சூரிய நமஸ்காரத்தில் உள்ள படிகள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் சேமிக்கப்படும் வாயுவைத் தடுக்கவும் உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
சூரிய நமஸ்காரம் உடலில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும், இது இதய தசைகளை வலுப்படுத்துகிறது. இது பல்வேறு இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.

உடலில் இருந்து நச்சுக்களை நீக்க
உடல் சிறப்பாக செயல்பட, உடலிலுள்ள நச்சுக்களை நீக்குவது அவசியம். இதற்கு சூரிய நமஸ்காரம் பெரிதும் உதவுகிறது. சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்தலாம். மேலும் உடலில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் பிற நச்சு வாயுக்களை உடலில் இருந்து அகற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga After Dinner: இரவில் நிம்மதியான உறக்கம் பெற வேண்டுமா? இந்த யோகாசனங்கள் செய்யுங்க
மாதவிடாய் ஆரோக்கியத்திற்கு
மாதந்தோறும் பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விடுபட சூரிய நமஸ்காரம் ஒரு இயற்கையான தீர்வாகும். இதில் ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாயின் போது ஏற்படும் தசைப்பிடிப்பு, வலி போன்றவற்றை நீக்கி மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முகப்பருக்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
உடல் அமைதிக்கு
சூரிய நமஸ்காரம் செய்வது மூளையைத் தளர்த்தவும், பதற்றத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
தோல் மற்றும் முடி நன்மைக்கு
அழகான சருமம் மற்றும் கூந்தலைப் பெறுவதற்கான வழிகளில் சூரிய நமஸ்காரம் செய்வதும் ஒன்று. சூரிய நமஸ்காரம் செய்வது உடல் முழுவதும் உள்ள உறுப்புகளுக்கு இரத்தத்தை சீராக வழங்குவதுடன், ஆக்ஸிஜன் சுழற்சியை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் இது முடி உதிர்தலைக் குறைப்பது, முடி நரைப்பதைத் தடுப்பது, சுருக்கங்களைத் தடுக்க மற்றும் இளமையாக மாற்ற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ashna Zaveri: சக்கராசனம் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள்!
சூரிய நமஸ்காரம் செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை
- சூரிய நமஸ்காரம் செய்யும் முன் உடலைத் தளர்வாக வைக்க வார்ம்-அப் செய்ய வேண்டும்.
- சூரிய நமஸ்காரத்தில் உள்ள ஒவ்வொரு படிகளைச் செய்யும் போது அதன் தோரணைகளுடன் சுவாசத்தை ஒத்திசைக்க வேண்டும்.
- சூரிய நமஸ்காரம் செய்யும் முன் அல்லது பின் உடனடியாக சாப்பிடுவதையோ, குடிப்பதையோ தவிர்க்க வேண்டும்.
- இதன் அதிகபட்ச பலன்கள் கிடைக்க தினமும் இதைச் செய்யலாம்.
மேலே கூறப்பட்ட ஏராளமான நன்மைகளைப் பெற தினமும் 10 நிமிடங்கள் ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உட்கார்ந்த வாழ்க்கை முறையைத் தவிர்த்து, சூரிய நமஸ்காரத்தைப் பயிற்சி செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Surya Namaskar For Weight Loss: எடை குறைப்புக்கு சூர்ய நமஸ்காரம்.! எத்தனை முறை செய்யலாம்.?
Image Source: Freepik