Dates Benefits For Men: ஆண்கள் இந்த மாறி தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுங்க! அப்றம் என்ன நடக்கும் பாருங்க

  • SHARE
  • FOLLOW
Dates Benefits For Men: ஆண்கள் இந்த மாறி தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுங்க! அப்றம் என்ன நடக்கும் பாருங்க


What Are The Benefits Of Dates For Men: உடல் ஆரோக்கியத்திற்கு பேரீச்சம்பழம் மிகுந்த நன்மை பயக்கும். இதனை எடுத்துக் கொள்வது செரிமான சக்தியை மேம்படுத்துவதற்கும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதற்கு பேரீச்சம்பழத்தில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதே காரணமாகும்.

இது தவிர, பேரீச்சம்பழத்தில் இரும்பு, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்த பேரீச்சம்பழத்தை ஆண்கள் உட்கொள்வது அவர்களின் உடல் வலிமையை அதிகரித்து பலவீனத்தை நீக்குகிறது. மேலும் பேரீச்சம்பழத்தை ஆண்கள் உட்கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில், ஆண்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பது குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Watermelon Benefits: பாலியல் ஆரோக்கியத்தில் தர்பூசணியின் பங்கு என்ன தெரியுமா?

ஆண்களுக்கு பேரீச்சம்பழம் தரும் நன்மைகள்

மூளை சக்தியை அதிகரிக்க

பேரிச்சம்பழத்தை உட்கொள்வது மூளை ஆரோக்கியத்திற்கு சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் கோலின் போன்றவை காணப்படுகிறது. இது கற்றல் மற்றும் நினைவாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, அல்சைமர் போன்ற நரம்பியல் கடத்தல் நோய்களின் அறிகுறிகளைக் குறைக்க பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த

ஆண்கள் பேரீச்சம்பழத்தை உட்கொள்வதால், செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இது குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல்லை குறைக்கவும் உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. இவை வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தருகிறது.

எலும்புகளை வலுவாக்க

பேரீச்சம்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவை காணப்படுகிறது. இது அனைத்து வகையான எலும்பு பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. கூடுதலாக, பேரீச்சம்பழத்தை ஆண்கள் உட்கொள்வது அவர்களின் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உதவுவதுடன், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பு

ஆண்கள் பேரீச்சம்பழம் உட்கொள்வது, அவர்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் அதன் தரத்தை அதிகரிக்க உதவுகிறது. உண்மையில் இதில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் எஸ்ட்ராடியோல் போன்றவை காணப்படுகின்றன. இதன் தாக்கத்தினால், விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ashwagandha Benefits: அஸ்வகந்தாவால் ஆண்களுக்கு இவ்வளவு நன்மையா?

சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு

பேரீச்சம்பழத்தில் வைட்டமின் சி, டி மற்றூம் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது முடி மற்றும் சருமத்தில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இது அவற்றின் வளர்ச்சியும் வேகமாக நடக்கிறது.

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு

பேரீச்சம்பழத்தில் மிகவும் குறைவாக அளவிலான கிளைசெமிக் குறியீடுகள் நிறைந்துள்ளன. இதனை எடுத்துக் கொள்வது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை உட்கொள்ளலாம்.

ஆண்கள் பேரீச்சம்பழத்தை உட்கொள்ளும் முறை

  • பேரீச்சம்பழத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
  • பேரீச்சம்பழத்தை உலர் பழங்களுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • ஓட்ஸ், ஸ்மூத்தி போன்றவற்றுடன் சேர்த்து பேரீச்சம்பழத்தை சாப்பிடலாம்.
  • மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.
  • இரவில் பாலுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பாலில் கொதிக்க வைத்து குடிக்கலாம்
  • ஃபுரூட் சாலட்டில் பேரீச்சம்பழத்தை கலந்து சாப்பிடலாம்.
  • ஆண்கள் இந்த வழிகளில் பேரீச்சம்பழத்தை உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Vegetable Viagra: பீட்ரூட்டில் உள்ள வயாகரா தன்மை., மருத்துவர் உடைத்த சீக்ரெட்

Image Source: Freepik

Read Next

Sperm Foods: விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கம் அதிகரிக்க இதை சாப்பிடவும்

Disclaimer