Vegetable Viagra: பீட்ரூட்டில் ஏராளமான நன்மைகள் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இதய செயல்பாடு, இரத்த ஓட்டம், செரிமான பிரச்சனை என பலவற்றுக்கு பீட்ரூட் வரப்பிரசாதமாகும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் பீட்ரூட் பிரதான ஒன்றாகும்.
பீட்ரூட்டில் ஏணைய சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் பி, வைட்டமின் சி, நார்ச்சத்து, தாது, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம். இத்தனை சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பீட்ரூட் உண்மையில் காய்கறி வயாகராவா?
காய்கறிகளில் வயகரா தன்மை கொண்ட காய்கறி என்றால் அது பீட்ரூட் தான். இதுகுறித்த உண்மைகளை சற்று ஆராய்ந்து பார்க்கையில், ரோமானியர்கள் பீட்ரூட்டையும் அதன் ஜூஸ்ஸையும் பாலுணர்வை தூண்டும் செயல்பாட்டுக்கு பயன்படுத்தி உள்ளார்கள். இது உண்மை என்றாலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபிக்க சான்றுகள் பெருமளவு இல்லை.

அதிகரிக்கும் பீட்ரூட் விற்பனை
சரி, பீட்ரூட்டில் இந்த நன்மைகளே இல்லை என்று முற்றிலும் மறுத்துவிடவும் முடியாது. கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் பீட்ரூட்டுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் நிலவரப்படி ஒரு டின் பீட்ரூட் சுமார் இந்திய ரூபாய் மதிப்புப்படி 3500க்கு விற்கப்பட்டு வருகிறது. இப்படி பீட்ரூட்டுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட காரணம் ஒரு மருத்துவர் தான்.
பீட்ரூட் பாலியல் நன்மை குறித்த தகவல்
இங்கிலாந்தின் மருத்துவர் ஒருவர் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது, பீட்ரூட்டை காய்கறிகளின் வையாகரா என குறிப்பிட்டுள்ளார். இதுதான் இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம். சரி இது உண்மை தானா என்பது இப்போது பார்க்கலாம்.
பீட்ரூட்டில் உள்ள தனித்துவ நன்மைகள்
பீட்ரூட்டை நீங்கள் எப்படி சமைத்தாலும் அதில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அப்படியே இருக்கும் என கூறப்படுகிறது. பீட்ரூட்டை நாம் சாப்பிடும்போது நமது வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் என்சைம்கள் இதில் உள்ள நைட்ரேட்டை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றிவிடுகிறது. இந்த நைட்ரிக் ஆக்சைடு ஆண்களில் உடலுறவுக்கு பயனுள்ளதாக செயல்படுகிறது.
உடலுறவுக்கு பீட்ரூட் எப்படி உதவும்?
உடலுறவுக்கான இரத்த ஒட்டத்தின் டெஸ்டோஸ்டிரோனுக்கு பெரும் உதவியாக இந்த நைட்ரிக் ஆக்சைடு இருக்கிறது. இந்த வகையில் பார்த்தால் பீட்ரூட் உடலுறவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பது உண்மைதான்.
பீட்ரூட்டை தாராளமாக சாப்பிடலாம்
எது எப்படியோ பீட்ரூட்டில் இருக்கும் நன்மைகளில் கூடுதலாக இதுவும் இருக்கிறது என்பதே உண்மை. எனவே தாராளமாக நீங்கள் பீட்ரூட்டை உங்கள் உணவில் தவிர்க்காமல் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Source: FreePik