Kondai Kadalai Nanmaigal: தினசரி காலை கொண்டைக்கடலை மட்டுமே போதும்!

  • SHARE
  • FOLLOW
Kondai Kadalai Nanmaigal: தினசரி காலை கொண்டைக்கடலை மட்டுமே போதும்!

கறுப்பு கொண்டைக்கடலையில் புரதம் அதிகம். இது இறைச்சிக்கு சிறந்த மாற்றாகவே கருதப்படுகிறது. காரணம், இதில் அந்தளவிற்கு பலன்கள் நிரம்பியுள்ளது. சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி என பல வகையான சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.

கொண்டைக்கடலை (சுண்டல்) நிரம்பியுள்ள நன்மைகள்

இதன் நுகர்வு செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் எடையையும் குறைக்கிறது. இதனை உட்கொள்வதால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி எலும்புகள் வலுவடையும். இதை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சிக் கூடும் செல்லும் பலரும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலரும் இரவில் கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊறவைத்து காலை சாப்பிடுவார்கள்.

கொண்டைக்கடலை சாப்பிடுவதால் தசைகள் வலுவடைவது மட்டுமின்றி வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். உங்கள் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், கொண்டைக்கடலையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் மற்ற நன்மைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

இதையும் படிங்க: வீட்டிலேயே சுவையான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடை குறைக்க உதவும்

ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதன் காரணமாக, நீங்கள் கூடுதல் உணவை உட்கொள்வதைத் தவிர்த்து, எடை இழப்புக்கு வழிவகை செய்யலாம்.

கண்களுக்கு நன்மை பயக்கும்

ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படுவதோடு, கண்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஊறவைத்த பருப்பில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது, இது கண் பிரச்சனைகளை நீக்குகிறது. கொண்டைக்கடலை சாப்பிடுவது விழித்திரை பிரச்சனைகளை தடுக்கிறது.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்

ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, மலத்தை மென்மையாக்கி வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. அதன் வழக்கமான நுகர்வு, அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை சரிசெய்கிறது.

வலுவான எலும்புகள்

ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிட்டால் எலும்புகள் வலுவடைவது மட்டுமின்றி, அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். கொண்டைக்கடலையில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எலும்பு வலியிலிருந்தும் நிவாரணம் தருகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலையும் பாதுகாக்கிறது.

அதிகம் படித்தவை: நீங்க கட்டாயம் தவிர்க்க வேண்டிய மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அன்றாட பழக்கங்கள்!

நோய் எதிர்ப்பு சக்தி

ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் பருவகால நோய்களின் அபாயத்தை பல மடங்கு குறைக்கிறது. கொண்டைக்கடலையில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு ஒவ்வாமை மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது. இது உடலை உட்புறமாக பலப்படுத்துகிறது.

ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகிய பின்னரே அதை உட்கொள்ளவும்.

Image Source: FreePik

Read Next

அருமையான சுவையில் ராகி பணியாரம்! காரம், இனிப்பு என இரு சுவையிலும் செய்யுங்க

Disclaimer

குறிச்சொற்கள்