Fri Sep 11, 2026 | 09:50 PM IST

Doctor Verified

குளிர்காலத்தில் நெய் எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும்? ஆயுர்வேதம் & ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம்

குளிர்காலத்தில் தினமும் நெய் சாப்பிடுவது பாதுகாப்பானதா? எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்? ஆயுர்வேத மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கங்களுடன் முழு தகவல்.

குளிர்காலம் தொடங்கியவுடன், தமிழர் வீடுகளில் நெய்யின் வாசனை அதிகரிப்பது வழக்கம். சூடான கிச்சடி, பருப்புச் சாதம், சப்பாத்தி, பரோட்டா – எல்லாவற்றிலும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் சுவை மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூடும் என்பது பாட்டி காலத்து நம்பிக்கை.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை, உடற்பயிற்சி குறைவு, உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்னைகள் ஆகியவை அதிகரித்துள்ள நிலையில், “தினமும் நெய் சாப்பிடலாமா?”, “எவ்வளவு நெய் பாதுகாப்பானது?” என்ற கேள்விகள் பலரிடமும் எழுகின்றன.

இதற்கு விடை அளிக்கிறார்கள் சிர்சாவின் ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ஷ்ரே சர்மா மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள Angelcare-A Nutrition & Wellness Centre இயக்குநர், ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின்.

நெய் குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின் படி,

  • நெய் வாதம், பித்தம், கபம் என மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்தும் சக்தி கொண்டது.
  • குறிப்பாக குளிர்காலத்தில், உடலை உஷ்ணமாக வைத்திருக்க நெய் உதவுகிறது.
  • செரிமான நெருப்பை (Agni) தூண்டி, உணவு சரியாக ஜீரணமாக உதவுகிறது.
  • மூட்டு வலி, வறண்ட சருமம், உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நெய் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆனால், “நெய் எல்லோருக்கும் ஒரே அளவில் பொருந்தாது. வயது, செரிமான சக்தி, வாழ்க்கை முறை, உடல் இயக்கம் ஆகியவற்றைப் பொறுத்து அளவு மாறும்” என்று டாக்டர் ஷ்ரே சர்மா விளக்குகிறார்.

நெய் சாப்பிட சிறந்த நேரம் எது?

ஆயுர்வேதத்தின் படி, காலை நேரமே நெய் சாப்பிட சிறந்த நேரம். இரவு முழுவதும் உண்ணாவிரதத்திற்குப் பிறகு, காலை நேரத்தில் உடலின் செரிமான சக்தி (Agni) மிகச் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நெய் உட்கொண்டால், நாள் முழுவதும் நன்றாக ஜீரணமாகும், உடலுக்கு ஆற்றல் கிடைக்கும், வளர்சிதை மாற்றம் (Metabolism) மேம்படும். வெறும் வயிற்றில் சிறிதளவு அல்லது காலை உணவுடன் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

நெய் அதிகம் vs குறைவு – என்ன நடக்கும்?

நெய் ஒரு ஆரோக்கியமான கொழுப்பு என்றாலும், அளவுதான் முக்கியம்.

சரியான அளவில்:

  • செரிமானம் வலுப்படும்
  • உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

அளவுக்கு அதிகமாக:

  • செரிமான நெருப்பு குறையும
  • வாயு, அஜீரணம் ஏற்படும்
  • உடல் பருமன் அதிகரிக்கும்
  • கொழுப்பு பிரச்னைகள் உருவாகலாம்

“அதிகம் சாப்பிட்டால் அதிக நன்மை” என்ற எண்ணம் தவறானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் பளபளப்பான சருமம் வேண்டுமா.? நெய்யை இந்த 3 வழிகளில் பயன்படுத்தினால் போதும்.!

ஒரு நாளைக்கு எவ்வளவு நெய் பாதுகாப்பானது?

ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ஷ்ரே சர்மா கூறும் பாதுகாப்பான அளவு:

  • குழந்தைகள்: 1 – 1.5 கிராம்
  • பெரியவர்கள்: 10 – 15 கிராம்
  • பெண்கள்: சுமார் 5 கிராம்

உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு உள்ளவர்கள் இதைவிட குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

யாருக்கு நெய் தவிர்க்க வேண்டும்?

  • உடற்பயிற்சி செய்யாதவர்கள்
  • நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை செய்வோர்
  • உடல் இயக்கம் குறைவானவர்கள்

இவர்கள் தினசரி நெய் எடுத்தால், அது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும் என்று டாக்டர் ஷ்ரே சர்மா எச்சரிக்கிறார். ஆனால், மருத்துவர் மருத்துவ காரணங்களுக்காக பரிந்துரைத்தால் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் கருத்து

“குளிர்காலத்தில் நெய் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (A, D, E, K) உடலில் உறிஞ்சப்பட உதவுகிறது. ஆனால், கலோரி தேவையும் உடல் இயக்கமும் கணக்கில் எடுத்தால் மட்டுமே நெய் உணவில் சேர்க்கப்பட வேண்டும்” என்று அர்ச்சனா ஜெயின் தெரிவிக்கிறார்.

இறுதியாக..

குளிர்காலத்தில் நெய் நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு உதவும். ஆனால், சரியான நேரம், சரியான அளவு, உங்கள் உடல்நிலையைப் பொருத்து. நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம். ஆயுர்வேதமும் ஊட்டச்சத்தும் ஒன்று சேர்ந்து கூறுவது ஒன்று தான் – நெய் ஒரு மருந்து போல பயன்படுத்தப்பட வேண்டியது; அதிகமாக அல்ல.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. உங்களுக்கு சர்க்கரை, கொலஸ்ட்ரால், உடல் பருமன் அல்லது பிற உடல்நலப் பிரச்னைகள் இருந்தால், தினசரி நெய் உட்கொள்ளும் முன் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை கட்டாயம் பெறவும்.

Read Next

யார் சீரகத் தண்ணீர் குடிக்கக் கூடாது? ஆயுர்வேத மருத்துவர் எச்சரிக்கை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 14, 2025 23:14 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content