Fri Sep 11, 2026 | 10:46 PM IST

Doctor Verified

யார் சீரகத் தண்ணீர் குடிக்கக் கூடாது? ஆயுர்வேத மருத்துவர் எச்சரிக்கை

சீரகத் தண்ணீர் எல்லோருக்கும் நல்லதா? அமிலத்தன்மை, அல்சர், மலச்சிக்கல், கர்ப்பம் போன்ற நிலைகளில் யார் இதை தவிர்க்க வேண்டும் என்பதை ஆயுர்வேத நிபுணர் விளக்குகிறார்.

இன்றைய காலத்தில், சமூக ஊடகங்களில் வைரலாகும் ஆரோக்கியப் போக்குகளைப் பின்பற்றும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக, காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பது பரவலாகப் பேசப்படுகிறது.

சீரகத் தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்று வாயுவை குறைக்கும், எடை குறைக்க உதவும் என பல நன்மைகள் கூறப்படுகின்றன. ஆனால் இது உண்மையில் அனைவருக்கும் நன்மை தருமா? இந்த கேள்விக்கு விளக்கம் அளிக்கிறார், ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே சர்மா.

ஆயுர்வேத பார்வையில் சீரகத் தண்ணீர்

ஆயுர்வேதத்தின்படி, ஒவ்வொருவரின் உடல் இயல்பு வாதம், பித்தம், கபம் என்பவற்றின் அடிப்படையில் மாறுபடும். அதனால், ஒருவருக்கு நல்லது, இன்னொருவருக்கு தீங்கு விளைவிக்கலாம். சீரகம் செரிமான நெருப்பை அதிகரிக்கும், வாயு குறைக்கும் என்றாலும், சில உடல் நிலைகளில் இது எச்சரிக்கையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

யார் சீரகத் தண்ணீர் குடிக்கக் கூடாது?

1. அமிலத்தன்மை (Acidity) உள்ளவர்கள்

டாக்டர் ஷ்ரே சர்மா கூறுவதுபடி, சீரகம் செரிமானத்தைத் தூண்டுவதால், அமில சுரப்பை அதிகரிக்கக்கூடும். இதனால் நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல், புளிப்பு வாந்தி அதிகரிக்கலாம். அமிலத்தன்மை உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை தவிர்க்க வேண்டும் அல்லது மிகக் குறைந்த அளவில் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. வயிற்றுப் புண் (Ulcer) உள்ளவர்கள்

ஆயுர்வேதத்தின் படி, சரகம் ஒரு காரத்தன்மை கொண்ட மசாலா. இது வயிற்றுப் புறணியை எரிச்சலடையச் செய்யும், அல்சர் வலியை அதிகரிக்கும், எனவே, வயிற்றுப் புண், குடல் புண் உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா.? ஆயுர்வேத நிபுணர் விளக்கும் உண்மை..

3. மலச்சிக்கல் (Constipation) உள்ளவர்கள்

பலருக்கு தெரியாத ஒன்று சீரகம் மலத்தை பிணைக்கும் தன்மை கொண்டது. இதனால் மலச்சிக்கல் அதிகரிக்கலாம், குடல் இயக்கம் மெதுவாகலாம். எனவே, அடிக்கடி மலச்சிக்கல், உடல் நீரிழப்பு உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை தவிர்க்க வேண்டும்.

4. கர்ப்பிணிப் பெண்கள்

ஆயுர்வேத நம்பிக்கையின்படி, அதிக அளவு சீரகம் கருப்பை இயக்கத்தை தூண்டும். இதனால் வயிற்று இறுக்கம், அசௌகரியம், குறிப்பாக, முதல் மூன்று மாத கர்ப்ப காலத்தில், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சீரகத் தண்ணீர் குடிக்கக் கூடாது.

யாருக்கு இது பொருத்தமாக இருக்கலாம்?

வாயு பிரச்சனை உள்ளவர்கள், மிதமான செரிமானக் கோளாறு உள்ளவர்கள், கபம் அதிகம் உள்ளவர்கள், குறைந்த அளவில், மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.

இறுதியாக..

சீரகம் ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், “அனைவருக்கும் ஒரே உணவு, ஒரே மருந்து பொருந்தாது”. இதுதான் ஆயுர்வேதத்தின் அடிப்படை. அமிலத்தன்மை, அல்சர், மலச்சிக்கல் அல்லது கர்ப்பம் போன்ற நிலைகளில் சீரகத் தண்ணீர் நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கலாம். எனவே, அறிவுடன் ஆரோக்கிய பழக்கங்களை தேர்வு செய்யுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான உடல்நலத் தகவல்களுக்காக மட்டுமே. நீண்டகால செரிமான பிரச்சனைகள், கர்ப்பம் அல்லது மருத்துவ நிலைகள் உள்ளவர்கள், சீரகத் தண்ணீரை தினசரி உணவில் சேர்ப்பதற்கு முன் ஆயுர்வேத மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.

Read Next

குளிர்காலத்தில் தினமும் மல்லி நீர் குடிக்கலாமா? ஆயுர்வேத மருத்துவர் கூறும் உண்மை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 14, 2025 20:03 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content