Fri Sep 11, 2026 | 11:42 PM IST

Doctor Verified

கேன்சர் வரும் அபாயத்தைக் குறைக்க உதவும் சிறந்த 8 பானங்கள்.. நிபுணரின் கருத்து

புற்றுநோய் இன்று பலரும் சந்திக்கும் நாள்பட்ட நோயாக மாறிவிட்டது. எனினும், புற்றுநோய் ஆபத்து வராமல் தவிர்க்க அன்றாட உணவில் சில பானங்களைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். இதில் புற்றுநோய் அபாயம் தவிர்க்க உதவும் பானங்கள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் எழக்கூடும். இதில் புற்றுநோயும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில், இன்றைய காலத்தில் புற்றுநோய் இன்று நாள்பட்ட நோயாக மாறிவிட்டது. புற்றுநோயைப் பொறுத்த வரை பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. எனினும், புற்றுநோயைக் குறைக்க அன்றாட உணவில் சில பானங்களைச் சேர்க்கலாம்.

இதில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் பானங்கள் சிலவற்றைக் குறித்து இரைப்பை குடல் நிபுணராக விளங்கும் சௌரப் சேத்தி MD MPH அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: கேன்சரை விரட்டியடிக்கும் திராட்சை.! மருத்துவர் கூறும் உண்மை.. 

புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் பானங்கள்

கிரீன் டீ

கிரீன் டீயில் EGCG கேட்டசின்கள் நிறைந்துள்ளது. EGCG என்பது Epigallocatechin-3-gallate என்பதன் சுருக்கமாகும். இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகக் கருதப்படுகிறது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன. இந்த நன்மைகள் நிறைந்த கிரீன் டீயைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்தை 20 முதல் 30% குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

காபி

ஆராய்ச்சி ஒன்றில், காபி குடிப்பது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக மருத்துவர் கூறுகிறார். காபியில் பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. அவரின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கூடுதல் கப் காபி குடிப்பது தோராயமாக, 15% கல்லீரல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம் என மருத்துவர் கூறுகிறார். இது எண்டோமெட்ரியல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

நீரேற்றமாக இருப்பது

பொதுவாக, உடலை நீரேற்றமாக வைப்பதன் மூலம் சிறுநீர் புற்றுநோய்களை நீர்த்துப்போகச் செய்கிறது. அதிக நீர் உட்கொள்ளலின் மூலம் சிறுநீர்ப்பை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளைக் குறைக்க உதவுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

மாதுளை சாறு

மாதுளை சாற்றில் எலாஜிக் அமிலம் மற்றும் பாலிபினால்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை புற்றுநோய் செல் வளர்ச்சியை மெதுவாக்க பெரிதும் உதவுகின்றன. மேலும் புரோஸ்டேட் புற்றுநோய் நோய் கொண்ட நோயாளிகள் மாதுளை சாறு உட்கொள்வது PSA இரட்டிப்பு நேரத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

மஞ்சள் பால்

மஞ்சள் பால் கோல்டன் மில்க் என அழைக்கப்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கலவையானது டிஎன்ஏ சேதம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தினசரி மஞ்சளுடன் கூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்தக் குறிப்பான்கள் குறைக்கப்பட்டதாக மனித சோதனைகள் காட்டுவதாக மருத்துவர் கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த வயது வரை உள்ள பெண்களுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசிகள்.. இது ஏன் முக்கியம் தெரியுமா?

பெர்ரி ஸ்மூத்திகள்

பொதுவாக, பெர்ரி வகைகள் நார்ச்சத்துக்கள் மற்றும் அந்தோசயினின்கள் நிறைந்ததாகும். இது குறைந்த உணவுகள் உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையவையாகக் கருதப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் அதிகளவிலான வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்து காணப்படுகிறது. சிட்ரஸ் பழமான எலுமிச்சை உட்கொள்ளலின் மூலம் வயிறு மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்களின் அபாயத்தைத் தோராயமாக 10-15% குறைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், நெஞ்செரிச்சல் அல்லது அமில வீச்சு பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், எலுமிச்சை இதன் அறிகுறிகளை மேலும் தூண்டக்கூடும்.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர் வகைகளான கெமோமில், இஞ்சி, மிளகுக்கீரை போன்றவை பாலிபினால்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் நிறைந்ததாகும். இரைப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் குறைவதை அவதானிப்பு தரவு காட்டுகிறது.

இந்த வகை பானங்களின் உதவியுடன் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம் என மருத்துவர் குறிப்பிடுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: தக்காளி தோலில் புற்றுநோயை தடுக்கும் சக்தி..! மருத்துவர் சிவராமன் முக்கிய விளக்கம்..

Image Source: Freepik

Read Next

தக்காளி தோலில் புற்றுநோயை தடுக்கும் சக்தி..! மருத்துவர் சிவராமன் முக்கிய விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 29, 2025 18:57 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content