Food After Abortion: கருக்கலைப்பிற்குப் பிறகு பெண்கள் தங்களது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சமீப காலமாக கருக்கலைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, கருக்கலைப்பு வலி விவரிக்க முடியாதது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில கர்ப்பம் இழக்கப்படுகிறது. இக்காலத்தில் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் பலவீனமாக உணர்வார்கள்.

கருக்கலைப்பின் போது, அதிக இரத்தப்போக்கு காரணமாக பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இது இரத்த சோகை பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. மேலும் தலைச்சுற்றல், தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
இதையும் படிங்க: Green tea vs Coffee: காபியை விட கிரீன் டீ நல்லதா? - உண்மை இதோ!
அதுபோன்ற சமயங்களில் பெண்களின் உணவுமுறை அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. கருக்கலைப்புக்குப் பிறகு பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்க்கலாம்…
கால்சியம் நிறைந்த உணவு:

கருக்கலைப்புக்குப் பிறகு கால்சியம் அளவு குறைகிறது. எனவே கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு உலர் பழங்கள், கடல் உணவுகள், பால், பால் பொருட்கள், பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
டீஹைட்ரேட்டாக இருங்கள்:
கருக்கலைப்புக்குப் பிறகு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெண்கள் வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த நேரத்தில் செரிமான பிரச்சனைகளும் ஏற்படும்.
இது போன்ற நேரங்களில் பெண்கள் நிறைய தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். கருச்சிதைவிற்கு பிந்தைய உணவில் சூப்,ஜூஸ் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஃபோலிக் ஆசிட்:

ஃபோலிக் அமிலம் மன அழுத்தம் மற்றும் சிவப்பு அணு வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளது. இரத்த சோகை போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. எனவே, கருக்கலைப்புக்குப் பிறகு ஃபோலிக் ஆசிட் நிறைந்த அவகேடோ, பாதாம், வால்நட்ஸ் போன்ற உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.
இதையும் படிங்க: மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் இயற்கை வழிகள் இதோ!
பிடித்த உணவுகளை உண்ணுங்கள்:

கருக்கலைப்பிற்கு பிறகு பெண்கள் தங்களது மனதையும், உடலையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக அவர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை உண்ணலாம். அதேசமயம் பிடித்த உணவுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிடவும் மறந்துவிடாதீர்கள்.
எதை சாப்பிடக்கூடாது?

கருக்கலைப்புக்குப் பிறகு தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் ஜுங்ஃபுட்ஸ் மற்றும் ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளை சாப்பிட வேண்டாம். அதேபோல் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சர்க்கரை கலந்த உணவுகள், செயற்கை இனிப்புகள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
Image Source: Freepik