Fri Sep 11, 2026 | 11:07 PM IST

Exclusive: IUI முறையில் 100% குழந்தை பெற முடியுமா? - மருத்துவர் ரம்யா ராமலிங்கம் விளக்கம்!

மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடல் பருமன், போதைவஸ்துகள் பயன்பாடு என பல்வேறு காரணங்களால் குழந்தைப் பிறப்பு தள்ளிப் போய், பின்னர் அதுவே பெரும் மன அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது. குழந்தைப்பேறுக்காக பல்வேறு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்று, கருப்பையக கருவூட்டல் எனப்படும் Intrauterine insemination (IUI).

திருமணமான ஒரிரு ஆண்டுகளில் தம்பதியினர் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்விகளில் ஒன்று. "வீட்ல ஏதும் விசேசமா?" என்பது தான். குழந்தைப் பிறப்பை சில தம்பதியினர் உண்மையாகவே சில ஆண்டுகள் தள்ளிப் போட்டிருந்தாலும் பல தம்பதிகளுக்கு இக்கேள்வி அச்சமூட்டுவதாக இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடல் பருமன், போதைவஸ்துகள் பயன்பாடு என பல்வேறு காரணங்களால் குழந்தைப் பிறப்பு தள்ளிப் போய், பின்னர் அதுவே பெரும் மன அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது. குழந்தைப்பேறுக்காக பல்வேறு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்று, கருப்பையக கருவூட்டல் எனப்படும் Intrauterine insemination (IUI).

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கருப்பையக கருவூட்டல் (Intrauterine Insemination) என்றால் என்ன?

பெண்களுக்கு கரு முட்டை உருவாவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு, கருமுட்டைகள் நன்றாக உருவாகிறதா என ஸ்கேனில், ஃபாலிக்குலர் மானிட்டரிங் (Follicular monitoring) செய்யப்படும். கருமுட்டைகள் வளர்ந்து நன்கு பெரிதான பின்பு, அது வெடிப்பதற்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி, கருமுட்டைகள் வெடிக்கும் சமயத்தில், கணவரின் விந்தணுக்களைப் பெற்று இயக்கம் (motility) மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்டு கருப்பைக்கு அனுப்பப்படுகிறது. கணவனும், மனைவியும் இயற்கையாகச் சேரும் போது யோனியில் விந்து தங்கும். ஆனால் தயார் செய்யப்பட்ட விந்துவை (semen) கர்ப்பப்பையில் கொண்டு போய் செலுத்தப்படும் முறை IUI சிகிச்சை எனப்படுகிறது.

இதையும் படிங்க: தம்பதியின் வயது IVF சிகிச்சையைப் பாதிக்குமா? – IVF ஸ்பெஷலிஸ்ட் சொல்லுறத கேளுங்க!



 

View this post on Instagram

A post shared by Jeevan Mithra Fertility & Women Care Centre (@jeevanmithramark)

IUI சிகிச்சை யாருக்கெல்லாம் பரிந்துரைக்கப்படுகிறது?

விந்துப் பரிசோதனையில் வழக்கத்தை விட எண்ணிக்கை சற்றே குறைவாகவும் விந்து இயக்கத்தன்மை சற்றே குறைவாகவும் இருப்பவர்கள் IUI சிகிச்சை மேற்கொள்ளலாம். ஓவுலேசன் இன்டெக்சன் (ovulation induction) சிகிச்சையை ஐந்தாறு முறை செய்தும் வெற்றியடையாதவர்களுக்கு, சரியான நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள இயலாதவர்களுக்கு, IUI சிகிச்சைமுறை பரிந்துரைக்கப்படுகிறது. லேசான எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) உள்ள பெண்களுக்கும், திருமணமாகி சில ஆண்டுகளாகி என்ன காரணம் என்றே தெரியாமல் கருத்தரிக்காமல் (Unexplained infertility) உள்ள பெண்களுக்கும் IUI சிகிச்சை அளிக்கலாம். IUI சிகிச்சை முறை என்பது இயற்கையான கருத்தரித்தலை விட ஒருபடிநிலை முன்பானதே அன்றி, மிக மேம்பட்ட ஒன்றாக நினைக்க முடியாது.

IUIக்கு முன் என்னென்ன பரிசோதனைகள் அவசியம்?

இயற்கையான முறையில் இக்கருத்தரித்தல் நிகழ்வதால் பெண்களுக்கான இரு கருக்குழாய்களில் ஒன்றாவது திறந்திருப்பது அவசியம். கருக்குழாய் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். கர்ப்பபை இயல்பாக இருக்கிறதா என்பதை அறிய TVS ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். IUI க்கு முன் TVS பரிசோதனையில் கருமுட்டையின் வளர்ச்சியையும் உறுதி செய்து கொள்வது நல்லது. இதைத்தாண்டி உடலின் பொதுவான ஆரோக்கியம், ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தைராய்டு எல்லாம் இயல்பாக இருக்கிறதா என்பதையும், கருத்தரித்தலுக்குத் தேவையான அளவு ஹீமோகுளோபின் இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து கொள்வது நல்லது.

இதையும் படிங்க: #Exclusive பெண்களே PCOS பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி? கருத்தரித்தல் சிக்கல் குறித்து Dr.ரம்யா ராமலிங்கம் விளக்கம்..!

IUI யின் வெற்றி விகிதம் எப்படி இருக்கும்?

வெற்றி விகிதம் என்பது வயதின் தன்மைக்கேற்ப மாறுபடும். 30 வயதிற்குள்ளாகவும், திருமணமாகி மூன்றாண்டுக்குள்ளாகவும், விந்தணுக்கள் இயல்பான அளவில் இருக்கும் போது IUI சிகிச்சையின் வெற்றி விகிதம் 20% முதல் 25% வரை இருக்கலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு, விந்தணு பிரச்சனை அதிகம் உள்ளவர்களுக்கு, திருமணமாகி பத்தாண்களுக்கு மேலானவர்களுக்கு வெற்றி விகிதம் குறையவே வாய்ப்புண்டு.

Read Next

கருச்சிதைவுக்குப் பிறகு எவ்வளவு காலம் கழித்து மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்கலாம்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content