Early Symptoms Of Kidney Stones: உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாக விளங்கும் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனையே சிறுநீரகக் கற்கள். இவை அளவில் சிறியதாக இருப்பினும், அதிகளவு அசௌகரியத்தையும், வலியையும் ஏற்படுத்துகிறது. எனவே இதனை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் குணமடையலாம். சிறுநீரக் கற்கள் இருப்பதை உணர்த்தும் சில ஆரம்ப கால அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
“சிறுநீரகக் கற்கள் சிறுநீரகங்களில் ஏற்படும் சிறிய பந்தைப் போன்ற சிறிய கழிவுத் துகள்கள் ஆகும். இவை சிறுநீரகத்தில் சேகரிக்கப்பட்டு உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன” என லக்னோவில் உள்ள சஹாரா மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் டிஆர் ராகேஷ் தியாகி கூறியுள்ளார்.
சிறுநீரகக் கற்கள் ஆரம்ப கால அறிகுறிகள்
உடலில் சிறுநீரகக் கற்கள் இருந்தால் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
கூர்மையான வலி
சிறுநீரக் கற்கள் வலி பெரும்பாலும் கோலிக்கி என விவரிக்கப்படுகிறது. அதாவது இவை அலையாக வந்து செல்லும் போது கடுமையான வலியை அனுபவிக்கலாம். இதைத் தொடர்ந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும். எனினும், வலி குத்துவது போன்றும், கூர்மையாகவும் இருக்கும். இது நம்மை அசௌகரியத்தில் வைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Asthma During Monsoon: மழைக்காலத்தில் ஆஸ்துமாவை தடுக்கும் முறைகள்
சிறுநீரில் இரத்தம்
சிறுநீரக் கற்கள் இருந்தால், சிறுநீர் வெளியேறும் சமயத்தில் நுண்ணிய அல்லது காணக்கூடிய இரத்தத்தை ஏற்படுத்தும். சிறுநீரில் இளஞ்சிவப்பு, சிவப்பு, அல்லது பழுப்பு நிறமாற்றத்தை கவனித்தால், அது கவனம் செலுத்த வேண்டிய அறிகுறியாகும். எனினும், சிறுநீரில் இரத்தம் மற்ற நிலைமைகளாலும் ஏற்படலாம். எனவே, துல்லியமான நோயறிதலுக்கு சுகாதார நிபுணரை அணுகி பயன்பெறுவது நல்லது.
வலிமிகுந்த சிறுநீர் கழித்தல்
சிறுநீர்ப் பாதையில் சிறுநீர்க் கற்கள் நகரும் போது, அது அதிக எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இது சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வையும், வலியையும் ஏற்படுத்தும். இந்த அறிகுறி சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றைக் குறிக்கலாம். எனவே சரியான நோயறிதலுக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
வழக்கத்தை விட அதிகமான அளவில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். சிறுநீர் சிறிய அளவில் வெளியேறுவதும் சிறுநீரக் கல்லின் அறிகுறியாகும். கற்கள் இருப்பது, சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டுவதுடன், அதிகரித்த அவசரத்திற்கு வழிவகுக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Lower Blood Pressure: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
டெஸ்டிகுலர் அல்லது க்ரோயின் வலி
ஆன்களில் சிறுநீரக் கற்கள் வலி, க்ரோயின் மற்றும் விந்தணுக்களுக்குப் பரவி, அந்த பகுதிகளில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
அமைதியின்மை
சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலி அமைதியின்மையைத் தரும். மேலும், ஒரு வசதியான நிலையைக் கண்டுபிடிப்பதை சிரமமாக்குகிறது. இதனால், ஒருவர் அமைதியற்ற நிலையை அடையலாம் மற்றும் அசௌகரியத்தால் உட்காரவோ அல்லது படுக்கவோ முடியாத நிலை ஏற்படலாம்.
துர்நாற்றம் கொண்ட சிறுநீர்
சிறுநீரக் கற்கள் இருக்கும் போது வெளியேறும் சிறுநீரின் தோற்றம் மற்றும் துர்நாற்றங்களை ஏற்படுத்தலாம். மேலும் சிறுநீர் மேகமூட்டமாக இருப்பதை உணர்ந்தால், கடுமையான வாசனை அல்லது வழக்கத்திற்கு மாறானதாக இருப்பின், இதை ஒரு சாத்தியமான அறிகுறியாக கணக்கில் எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Liver Cirrhosis Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட காரணமாம்..
குமட்டல் மற்றும் வாந்தி
சிறுநீரகக் கற்களுடனான கடுமையான வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். இந்த அறிகுறிகள் வலிக்கு உடலின் எதிர்வினையின் விளைவாகவும் இருக்கலாம். இந்த மற்ற அறிகுறிகளுடன் குமட்டல் அல்லது வாந்தியை அனுபவித்தால், உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.
சிறுநீரகக் கற்கள் அபாயம்
சிறுநீரகக் கற்களின் குடும்ப வரலாறு இருப்பின் அல்லது ஏற்கனவே இவற்றை அனுபவித்திருப்பின், இவை மீண்டும் உருவாகும் அபாயம் அதிகமாக இருக்கலாம். எனவே இந்த சிறுநீரகக் கற்கள் ஆபத்து காரணிகளை அறிந்துகொள்வது சாத்தியமான அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருக்க உதவலாம்.
சிறுநீரகக் கற்களின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது, உடனடியாக மருத்துவ கவனிப்பைப் பெறுவது முக்கியமானது. மேலே கூறப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்திருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகி சிறுநீரக் கற்களால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brain Aneurysm: மூளை அனீரிசம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?
Image Source: Freepik