Homemade drinks to improve gut health: நல்ல குடல் ஆரோக்கியம் என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவக்கூடியதாகும். ஆனால், இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்த வரிசையில் செரிமானப் பிரச்சனையும் அடங்கும். அதாவது இது குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. பொதுவாக காலையில் எழுந்தவுடன் மலம் கழித்தால் மட்டுமே, நாம் பெரும்பாலான நேரங்களில் நிம்மதியாக உணர்கிறோம்.
ஆனால், பலரும் தினமும் சிலர் மலம் கழிப்பதில் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். இது அவர்களின் அன்றாட செயல்பாடுகளைப் பாதிக்கலாம். எதோ கனமான உணர்வு போல காணப்படும். இவை பசி மற்றும் செரிமானத்தைத் தொந்தரவு செய்கிறது. இதனால் நகர்வது கூட சிரமமாகத் தோன்றலாம். இந்நிலையில், காலையில் எழுந்ததும் மலம் கழிப்பதை எளிதாக்குவதற்கு இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக இந்த பானத்தைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். இதன் மூலம் காலையில் எளிதாக மலம் கழிக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Bowel Health: மலத்தை மொத்தமாக வெளியேற்றி குடலை காலி செய்ய ஒரு பழம் சாப்பிட்டால் போதும்!
மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
மலச்சிக்கல் என்பது அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான ஆனால் எரிச்சலூட்டும் பிரச்சனை ஆகும். குறிப்பாக, காலையில் வயிறு சரியாக சுத்தம் செய்யப்படாத போது வயிற்றில் கனத்தன்மை, உடல் சோர்வு மற்றும் நாள் முழுவதும் எரிச்சல் ஏற்படலாம். இந்த பிரச்சனைகள் சமநிலையற்ற உணவு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உடல் செயல்பாடு இல்லாதது போன்றவற்றால் ஏற்படக்கூடியதாகும். எனினும், சில வீட்டு வைத்தியங்கள் மூலம், இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும். இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சில பொருட்களை உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்தவும், குடலியக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்திற்கு காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்
வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சை
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சையை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு சிட்டிகை உப்பு அல்லது ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கலாம். இதை படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாகக் குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது காலையில் எளிமையாக மலம் கழிக்க உதவுவதுடன், சுத்தமான வயிற்றைப் பெற உதவுகிறது.
சீரகம் மற்றும் வெந்தய நீர்
ஒரு கிளாஸ் நீரில் ஒரு டீஸ்பூன் அளவிலான வெந்தயம் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு சீரகம் இரண்டையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்க வேண்டும். இது வாயு மற்றும் அஜீரணத்தை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது.
இசப்கோல் உமி
1-2 டீஸ்பூன் அளவிலான இசப்கோல் பொடியை ஒரு கிளாஸ் பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. இது குடலைச் சுத்தப்படுத்தி, குடலியக்கத்தை எளிதாக்குகிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Food for constipation: குடலில் சிக்கியிருக்கும் மலத்தை சுத்தமாக வெளியேற்ற இந்த 5 உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுங்க!
சூடான பாலுடன் நெய்
ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு டீஸ்பூன் அளவிலான நெய்யைக் கலந்து இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்க வேண்டும். இது குடலியக்கத்தை மென்மையாக்கவும், காலையில் குடலியக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது.
திரிபலா பொடி
ஆயுர்வேதத்தின் படி, திரிபலா பவுடர் செரிமானத்தை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு 1 முதல் 2 டீஸ்பூன் அளவு திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்க வேண்டும். இது குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கலை நீக்கு உதவுகிறது.
மலச்சிக்கலைப் போக்க உதவும் மற்ற வீட்டு வைத்தியங்கள்
- யோகா மற்றும் தியானம் செய்வது மன அமைதியை வழங்குவது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எனவே நாள்தோறும் 30 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- ஆப்பிள், பப்பாளி, வெண்டைக்காய், கீரை, கேரட், பேரிக்காய் மற்றும் ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
- நாள் முழுவதும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- லேசான உடற்பயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: நிம்மதியாக அமர்ந்தவுடன் மலம் வெளியேற தவறாமல் சாப்பிட வேண்டிய 7 அற்புத உணவுகள்!
Image Source: Freepik