Bowel Health: இப்போதெல்லாம் மலச்சிக்கல் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மலச்சிக்கலை எதிர்கொள்கிறார்கள். நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டால், வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவீர்கள்.
இது தவிர, மலம் கழிப்பதில் சிரமம், மலம் கடினமடைதல், மலம் கழிக்கும் போது சிரமப்படுதல் போன்றவை மலச்சிக்கலின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை மற்றும் உணவில் நார்ச்சத்து இல்லாதது ஆகியவை மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களாகும்.
ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்படும்போது, முதலில் அவர் பல்வேறு வகையான வீட்டு வைத்தியங்களை மேற்கொள்ளத் தொடங்குகிறார்கள். மேலும் சந்தையில் கிடைக்கும் சில உணவுகளை வீட்டு வைத்தியம் என நம்பி வாங்கி சாப்பிடுகிறார்கள், அது குடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு கொய்யாப்பழம் பெரும் உதவியாக இருக்கும். இது இயற்கையான வைத்தியமும் கூட. விதைகள் அதிகம் உள்ள கொய்யாப்பழம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவது போல், மலச்சிக்கலை போக்கவும் குடலை சுத்தப்படுத்தி மலத்தை மொத்தமாகவும் எளிதாகவும் வெளியேற்ற பெரும் உதவியாக இருக்கும்.
பயனுள்ள மற்றொரு விவரம்: Head Whorl: தலையில் ஒற்றை சுழி, இரட்டை சுழி அர்த்தம் என்ன? எத்தனை சுழிகள் வாழ்க்கைக்கு நல்லது?
குடலை காலி செய்ய கொய்யா எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
- கொய்யாப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். 100 கிராம் கொய்யாவில் சுமார் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது
- நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. நார்ச்சத்து உட்கொள்வது மலச்சிக்கல் மற்றும் அஜீரணப் பிரச்சினையிலிருந்து விடுபட உதவுகிறது.
- மலச்சிக்கலால் அவதிப்பட்டால், கொய்யாவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான குடல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க கொய்யாவை எப்படி சாப்பிடுவது?
உணவுக்கு முன் கொய்யா சாப்பிடுங்கள்
- வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், உணவு உண்பதற்கு முன் கொய்யாப்பழத்தை உட்கொள்வது நன்மை பயக்கும்.
- தினமும் உணவு உண்பதற்கு முன் கொய்யா சாப்பிட்டால், அது உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- உணவுக்கு முன் கொய்யா சாப்பிடுவதும் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
- எனவே, நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டால், உணவு உண்பதற்கு முன் கொய்யாவை உட்கொள்ளத் தொடங்குங்கள். இதன் மூலம் நீங்கள் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள்.
சிவப்பு கொய்யா மற்றும் கருப்பு உப்பு
சிவப்பு கொய்யா உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதேபோல் விதைகள் நிரம்பியுள்ள சிவப்பு கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பெருமளவு உதவியாக இருக்கும். மேலும் கொய்யாவை கருப்பு உப்பு தடவி சாப்பிட்டால் ருசியாக இருப்பதோடு கூடுதல் ஆரோக்கியத்தையும் வழங்கும்.
கொய்யா சாறு குடிக்கவும்
ஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், கொய்யா சாற்றை உட்கொள்ளலாம். கொய்யா சாறு குடிப்பதால் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்குகிறது மற்றும் வயிற்றில் படிந்திருக்கும் நச்சுக்கள் எளிதில் அகற்ற உதவுகிறது.
வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிடலாம்
மலச்சிக்கலைப் போக்க, கொய்யாவை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். ஆனால் நீங்கள் வெறும் வயிற்றில் நன்கு பழுத்த கொய்யாவை மட்டுமே சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் பச்சை கொய்யாவை சாப்பிட்டால், அது வயிற்று வலி அல்லது பிடிப்பை ஏற்படுத்தும்.
தினமும் காலையில் பழுத்த கொய்யாவை சாப்பிட்டால், அஜீரணம் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால் உங்களுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்தால், வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மேலும் படிக்க: Frontal Baldness: ஆண்களின் முன் வழுக்கையில் உடனே முடி வளர இதை செய்தால் போதும்!
கொய்யாவில் நிரம்பியிருக்கும் நன்மைகள்
கொய்யாவில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. மேலும், இது உணவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது மட்டுமல்லாமல், கால்சியம், வைட்டமின் பி6, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்தும் கொய்யாவில் ஓரளவு காணப்படுகின்றன.
- எடையை குறைக்க கொய்யாப்பழம் பெரும் உதவியாக இருக்கும்
- முன்னதாக கூறியது போல் மலச்சிக்கல் பிரச்சனைய தீர்க்க உதவும்
- செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பெருமளவு உதவும்
- மூல நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
- வயிற்று எரிச்சலை தணிக்க தாராளமாக கொய்யா சாப்பிடலாம்
மலச்சிக்கலை போக்க கொய்யாப்பழம் பெரும் உதவியாக இருக்கும் என்றாலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களுக்கு பிரச்சனை தீவிரமாக இருந்தால் சிந்திக்காமல் மருத்துவரை கண்டிப்பாக சந்தித்து ஆலோசனை பெற்று அதை பின்பற்றவும்.
image source: freepik