$
Bitter Truth: பாகற்காய் கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும் அதனை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதேசமயம் பாகற்காயை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பண்டைய காலம் தொட்டு தற்போதைய ஆயுர்வேத வைத்தியம் வரை சில உணவுகளை சிலவற்றுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, சில உணவுகள் நல்ல ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டிருந்தாலும், அவற்றை மற்ற பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் எந்தப் பலனும் கிடைக்காது.
இதையும் படிங்க: கவர்ச்சியான மார்பகங்கள் வேண்டுமா?… அப்போ இதைச் சாப்பிடுங்கள்!
உதாரணத்திற்கு கீரையுடன் பன்னீர், தயிருடன் முட்டை, பிற இறைச்சியுடன் மீன் ஆகியவற்றை சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது எனக்கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது பாகற்காயுடன் என்னென்ன மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என அறிந்து கொள்ளுங்கள்…
பால் குடிக்கக் கூடாது:
பால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரக்கூடியது, ஆனால் பாகற்காய் சாப்பிட்ட பிறகோ அல்லது அதன் ஜூஸைகுடித்த பின்னரோ பால் உட்கொண்டால், உங்கள் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம்.

பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதால், மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றெரிச்சல், குமட்டல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
வெண்டைக்காய் வேண்டவே வேண்டாம்:

வெண்டைக்காய், பாகற்காய் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது செரிமானத்தை பாதிக்கும். ஏனெனில் வெண்டைக்காயின் வளவளப்பு தன்மையும், பாகற்காயின் கசப்பும் ஜீரணத்தை கடினமாக்கிறது. இதனால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
மாம்பழம் சாப்பிடக்கூடாது:

பாகற்காயுடன் மாம்பழம் சாப்பிட்டால் உடல் நலம் கெடும். இதன் காரணமாக, வாந்தி, நெஞ்செரிச்சல், குமட்டல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இவை இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.
முள்ளங்கியுடன் பரிமாற வேண்டாம்:
கசப்பான காய்கறியை சாப்பிட்ட பிறகு முள்ளங்கி அல்லது முள்ளங்கியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். முள்ளங்கியின் காரமும், பாகற்காயின் கசப்பும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது உங்கள் தொண்டையில் அமிலத்தன்மை மற்றும் சளியை ஏற்படுத்துகிறது.

பாகற்காய் காய்கறிகளை சாப்பிட்ட பிறகு முள்ளங்கி சாப்பிடக்கூடாது. உண்மையில், முள்ளங்கி மற்றும் பாகற்காயின் விளைவு வேறுபட்டது. இதன் காரணமாக சளி மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படலாம்.
தயிருடன் கடினம்:

தயிருடன் பாகற்காயை சேர்த்து சாப்பிடக்கூடாது. பாகற்காய் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு பிரச்சனை ஏற்படக்கூடும்.