சரும வறட்சி, பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளுக்கு இந்த மீன் சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
சரும வறட்சி, பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளுக்கு இந்த மீன் சாப்பிடுங்க


Salmon fish benefits for skin: உடல் ஆரோக்கியத்திற்கு சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். ஆனால், சில உணவுகளை உட்கொள்வது சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. அந்த வகையில், சால்மன் மீன் உட்கொள்வது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் சால்மன் மீன் எவ்வாறு சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பது குறித்து காணலாம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சால்மன் மீன்

சால்மன் மீன் ஒரு சுவையான இரவு உணவாக மட்டுமல்லாமல், இது ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்திற்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சால்மன் மீன், உடலில் நீரேற்றத்தை அதிகரிப்பது முதல் சருமத்தில் சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. எனவே, அன்றாட உணவில் சால்மன் மீன் உட்கொள்வதன் மூலம் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுத்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கழுத்து சுற்றி உள்ள கருமையை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி?

சால்மன் மீன் ஆனது, அதன் துடிப்பான இளஞ்சிவப்பு சாயல் மற்றும் வெண்ணெய் போன்ற அமைப்புடன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் நிறைந்துள்ளது. இது சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் இதன் ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தின் ஈரப்பதம் தடையை பராமரிப்பதுடன், மென்மையாக மற்றும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. கூடுதலாக, இந்த மீனில் நிறைந்துள்ள சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தைச் சேதப்படுத்தும் மாசு மற்றும் புற ஊதா கதிர்களிலிருந்து விடுபட வைத்து, சருமத்தைப் பாதுகாக்கிறது.

சருமத்திற்கு சால்மன் மீன் தரும் நன்மைகள்

அன்றாட உணவில் சால்மன் மீனைச் சேர்ப்பது சருமத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் சால்மன் மீன் உட்கொள்வது சருமத்திற்கு தரும் நன்மைகளைக் காணலாம்.

முகப்பருவைக் கட்டுப்படுத்த

சால்மன் மீன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த உணவாகும். இது சருமத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், இது எதிர்காலத்தில் முகப்பரு விரிவடைவதைத் தடுக்கிறது. இவை சருமத்தை தெளிவாக, அமைதியாக வைப்பதுடன் எரிச்சலூட்டும் பருக்களைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.

சருமத்தை ஈரப்பதமாக வைக்க

சால்மன் மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சிறந்த வளமான மூலமாகும். இவை சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் சருமத்திற்கு நீரேற்றத்தை அளிப்பதுடன், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: சருமத்தை ஜொலிஜொலிக்க வைக்கும் தேன் ஃபேஸ் மாஸ்க் செய்ய இந்த 5 பொருள்கள் போதும்!

சருமத்தை பிரகாசமாக வைக்க

இந்த மீன்கள் வைட்டமின் டி-ன் சிறந்த மூலமாகும். இவை சருமத்தை பிரகாசமாக வைக்கவும், சீரான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமப் பொலிவை மேம்படுத்துகிறது.

கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த

சருமத்தை இளமையாகவும் உறுதியாகவும் வைக்க கொலாஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், சால்மனில் நிறைந்துள்ள அதிகளவிலான புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சருமத்திற்கு இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர, சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற முதுமை அறிகுறிகளைத் தடுக்கிறது.

குணப்படுத்தும் பண்புகள்

சிலர் கறைகள், தழும்புகள் அல்லது பிற தோல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருப்பர். இதற்கு சால்மன் மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மிகுந்த நன்மை பயக்கும். இவை சருமத்தைப் பழுதுபார்க்க மற்றும் செல்களை மீளுருவாக்கம் செய்வதற்கும் உதவுகிறது. மேலும், இது குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தவும், மென்மையான சருமத்தையும் தருகிறது.

நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த

சால்மன் மீனில் நிறைந்திருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இவை சருமத்தை இறுக்கமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த சால்மன் மீனை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்கணுமா? வைட்டமின் ஈ-யை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

Image Source: Freepik

Read Next

Leg care: மழைக்காலத்தில் கால்களை பாதுகாக்க; இதை எல்லாம் பாலோப் பண்ணுங்க!

Disclaimer