$
மழைக்காலத்தில் கால்கள் தண்ணீரில் அதிகம் நனையும். இந்த சீசனில் சாலைகளில் சேறும், சகதியுமாக இருக்கும் என்பதால், காலணிகள் அணிந்தாலும் கால்களில் அவை ஒட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. இத்துடன் ஆபத்தான கிருமிகளும் நம் கால்களை சென்றடையும். எனவே இந்த சீசனில் பாதங்களைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்:
பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மழையில் நனைத்த பிறகு வீட்டிற்குள் வரும் போது, கால்களை லிக்விட் வாஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில்தண்ணீரில் கழுவவும். அதன் பிறகு கால்ககள் மற்றும் கால் விரல்களுக்கு இடையே சுத்தமாகவும், உலர்வாகவும் துடைக்க வேண்டும்.

மேலும் கால் நகங்களை தவறாமல் ட்ரிம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவற்றின் மூலம் அழுக்கு மற்றும் அரிப்பு மற்றும் பிற தோல் தொடர்பான நோய்கள் வரலாம்.
காலணிகள் தேர்வில் கவனம்:
மழைக்காலத்தில் செருப்பு அணிவதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த சீசனில் ஷூ அணியாமல் இருப்பது நல்லது. அல்லது சாலையில் ஓடும் போது அவற்றில் தண்ணீர் சேர வாய்ப்பு உள்ளது.

நீரில் கால்கள் நீண்ட நேரம் இருந்தால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு பதிலாக, சுவாசிக்கக்கூடிய காலணிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
கண்டிப்பாக ஸ்க்ரப் செய்யுங்கள்:
மழைக்காலங்களில் தினமும் கால்களை ஸ்க்ரப் செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வெதுவெதுப்பான நீரில் சிறிது ஷாம்பூவைச் சேர்த்து, அதில் உங்கள் கால்களை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

அதன் பிறகு, புட் ஸ்க்ரப் மூலம் கால்களை நன்றாக கழுவவும். பியூமிஸ் ஸ்டோனைப் பயன்படுத்தி தினமும் உங்கள் பாதங்களை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
Image Source: Freepik