வேர்க்கடலை சாப்பிடுவதால் அசிடிட்டி ஏற்படுமா? இதைக் கட்டுப்படுத்த சில குறிப்புகள் இதோ

Does eating peanuts cause acidity: பொதுவாக வேர்க்கடலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. ஆனால், வேர்க்கடலை சாப்பிடுவது அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் வேர்க்கடலை சாப்பிடுவதால் அமிலத்தன்மையை ஏற்படுத்துமா என்பது குறித்து நிபுணர் தரும் குறிப்புகளைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
வேர்க்கடலை சாப்பிடுவதால் அசிடிட்டி ஏற்படுமா? இதைக் கட்டுப்படுத்த சில குறிப்புகள் இதோ


Can peanuts increase acidity: அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதில் வேர்க்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக வேர்க்கடலை சாப்பிடுவது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இதில் நல்ல அளவிலான வைட்டமின்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உடல் எடையிழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், இரத்த சர்க்கரையை நிர்வகிக்கவும் உதவுகிறது. ஆனால், வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு சிலருக்கு வாயு ஏற்படுவதாக பெரும்பாலான மக்கள் புகார் கூறுகின்றனர்.

உண்மையில், வேர்க்கடலையை சாப்பிட்ட பின் வாயு பிரச்சையைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். குறிப்பாக, இது செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளவர்களுக்கு முதன்மையாக ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு இவர்களுக்கு அசிடிட்டி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால், அது மலச்சிக்கல் அல்லது வாயு உருவாவதற்கு வழிவகுக்கும். இது குறித்து டெல்லியைச் சேர்ந்த உணவியல் நிபுணர் பிராச்சி சாப்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Soaked peanuts benefits: யாரெல்லாம் தினமும் ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடலாம்!

வேர்க்கடலை சாப்பிடுவதால் வாயு பிரச்சனை ஏற்படுமா?

நிபுணர் பிராச்சி அவர்களின் கூற்றுப்படி, வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் காணலாம். ஆனால், இதை அதிகளவு சாப்பிடுவது சில நேரங்களில் வாயுவை ஏற்படுத்தக்கூடும். உண்மையில் வேர்க்கடலையில் நல்ல அளவிலான கொழுப்பு நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான கொழுப்புகள் என்றாலும், இதை அதிகளவு உட்கொள்வது வாயு மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

வேர்க்கடலையை சாப்பிட்ட பிறகு அனைவருக்கும் வாயு வர வேண்டிய அவசியமில்லை. செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பின், அதிக அளவில் வேர்க்கடலையை உட்கொண்டிருந்தால் வாயு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேர்க்கடலையை சாப்பிட்ட பிறகு வாயு ஏற்பட்டால், அதை அதிகளவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வேர்க்கடலை சாப்பிடுவதால் வாயுப் பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு வாயு உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உண்மையில், வேர்க்கடலையில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவற்றைச் சாப்பிடும் போது வாய்வு மற்றும் சில நேரங்களில் வாயு போன்றவை உருவாவதற்கு வழிவகுக்குகிறது. அது மட்டுமல்லாமல், இதில் பைடிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை வீக்கத்தை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் வாயு உருவாவதற்கு வழிவகுக்கக்கூடும்.

வயிற்றுப் பிடிப்புகள்

இவை வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், அது வாயு உருவாவதை ஏற்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில் அதிகளவு வேர்க்கடலை சாப்பிடுவது மலம் கழிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உணவுக்குழாய் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Peanuts for diabetes: சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால்... சுகர் ஏறவே ஏறாது!

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு வாயு உருவாகினால் என்ன செய்யலாம்?

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு வாயு பிரச்சனை ஏற்பட்டால், சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.

  • வாயு ஏற்பட்டால், பெருஞ்சீரகம் அல்லது செலரி தண்ணீரைக் குடிப்பது நன்மை தரும்.
  • வாயுத்தொல்லையிலிருந்து நிவாரணம் பெற, பெருஞ்சீரகம் மற்றும் செலரியை பச்சையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
  • வேர்க்கடலையை சாப்பிட்ட பிறகு வாயு உற்பத்தி இருப்பின், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • சில சமயங்களில் வாயு உருவாவதிலிருந்து நிவாரணம் பெற வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் நன்மை பயக்கும்.
  • மேலும் வயிறு வீங்கியிருப்பின் அல்லது பிடிப்புகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

யார் வேர்க்கடலையை சாப்பிடக்கூடாது?

சிலர் வேர்க்கடலை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

  • வாயு அல்லது அமிலத்தன்மை இருப்பின் வேர்க்கடலை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
  • எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ள நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது
  • ஒவ்வாமை அல்லது செரிமானம் தொடர்பான பிற பிரச்சினைகள் இருப்பின், வேர்க்கடலை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்
  • யூரிக் அமில நோயாளியாக இருப்பின், வேர்க்கடலை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது
  • வேர்க்கடலையில் அதிக கலோரிகளாக இருக்கலாம். எனவே உடல் பருமனாக இருப்பின், வேர்க்கடலை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் வேர்க்கடலை சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.? ஸ்டாக் வச்சிக்கோங்க மக்களே..

Image Source: Freepik

Read Next

சோளம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது - ஏன் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்