Fri Sep 11, 2026 | 11:42 PM IST

Doctor Verified

தினசரி ஒரு சூப் போதும்.. உடல் எடையை குறைக்கலாம்.! மருத்துவர் உஷா நந்தினி விளக்கம்..

மருத்துவர் உஷா நந்தினி கூறும் உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப், முருங்கைக்கீரை சூப், தக்காளி சூப், வாழைத்தண்டு சூப், வெள்ளரி-சுரைக்காய் சூப் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் இங்கே.

உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் தங்களின் அன்றாட உணவில் எளிய மாற்றங்களைக் கொண்டு வந்தால் பெரிய பலன் கிடைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில், தினசரி ஏதாவது ஒரு சூப்பை சேர்த்துக் கொள்வதால் உடலின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு குறையும் என மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். இந்த சூப்புகள் உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பையும் கரைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.

1. கொள்ளு சூப் – கெட்ட கொழுப்பை கரைக்கும் மருத்துவர் அங்கீகரித்த பானம்

கொள்ளு உடலில் இருக்கும் LDL (கெட்ட கொழுப்பு) அளவை குறைக்கும் இயற்கை உணவாக கருதப்படுகிறது.

முறை:

* கொள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வேக வைக்க வேண்டும்.

* அதன் தண்ணீரை வடித்து, சீரகத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குடிக்கலாம்.

* உடல் எடையை குறைப்பதில் இது ஒரு சக்திவாய்ந்த சூப் என நிபுணர் கூறுகிறார்.

2. முருங்கைக்கீரை சூப் – வயிற்றுக் கொழுப்பு கரைக்கும் சத்து நிறைந்த சூப்

முருங்கைக்கீரை ஐரன், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்தது.

முறை:

* தண்ணீர் கொதிக்க வைத்து

* இரண்டு கைப்பிடி முருங்கைக்கீரை சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

* பின்னர் உப்பு சேர்த்து குடிக்கலாம்.

தினசரி இதை எடுத்தால் உடல் எடை வேகமாக குறையும் என மருத்துவர் கூறுகிறார்.

3. தக்காளி சூப் – இயற்கையான Fat Burner

தக்காளியில் இருக்கும் லைகோபீன், உடலின் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது.

முறை:

* தக்காளியை நன்றாக நசுக்கி சாறு எடுத்து

* உப்பு, மிளகு சேர்த்து குடிக்கலாம்.

* இது உடலின் கொழுப்பை இயல்பாக குறைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: BP குறைய உதவும் சின்ன வெங்காய தயிர் பச்சடி! – சித்த மருத்துவர் சிவராமன் சொல்வது என்ன?

4. வாழைத்தண்டு சூப் – நார்ச்சத்து நிறைந்த Detox சூப்

வாழைத்தண்டு - குடலை சுத்தப்படுத்தும், கொழுப்பை குறைக்கும், இன்சுலின் கிரகிப்பை மேம்படுத்தும் பலன்கள் கொண்டது.

முறை:

* வாழைத்தண்டை வேக வைத்து

* உப்பு, மிளகு சேர்த்து குடிக்கலாம்.

* கனமான வயிற்றுக்கொழுப்பு குறைவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

5. வெள்ளரி – சுரைக்காய் சூப் – குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து

இந்த சூப் உடனடி உடல் இலகுத்தன்மையை தரும்.

முறை:

* வெள்ளரி, சுரைக்காய் இரண்டையும் தோல் சீவி ஆவியில் வேக வைத்து

* உப்புடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

* குறைந்த கலோரி கொண்ட இந்த சூப் எடை குறைக்கும் டயட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இறுதியாக..

உடல் எடை குறைக்க வேண்டுமென நினைக்கும் அனைவரும் தினசரி ஒரு சூப்பை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த வழி என்று மருத்துவர் உஷா நந்தினி வலியுறுத்துகிறார். கொள்ளு, முருங்கைக்கீரை, தக்காளி, வாழைத்தண்டு, வெள்ளரி-சுரைக்காய் போன்ற சூப்புகள் உடலின் நச்சுகளை வெளியேற்றுவதோடு, கொழுப்பு சேமிப்பை குறைத்து உடல் எடையை இயற்கையாகக் குறைக்கும் சக்தி கொண்டவை.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான மருத்துவ தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள சூப்புகளை உடல்நலத்திற்காக பயன்படுத்துவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இங்கு வழங்கப்பட்ட தகவல் மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகாது.

Read Next

சப்ளிமெண்ட்ஸ் எடுத்தும் இரும்புச்சத்து இல்லையா? அதற்கான காரணங்களும், அயர்ன் லெவலை அதிகரிக்கும் வழிகளும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 27, 2025 19:39 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content