Doctor Verified

உங்க கிட்சனில் மறந்தும் வைக்கக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்

அன்றாட உணவில் சில உணவுகளைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பலதரப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில், எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையும், அதை எடுத்துக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உங்க கிட்சனில் மறந்தும் வைக்கக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்


அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் பசிக்காக சாப்பிடுவதைக் காட்டிலும் ருசிக்காக சாப்பிடுவதையே விரும்புகின்றனர். எனவே தான், உணவில் ஒவ்வொருவரும் காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்ற ஆரோக்கியமானவற்றைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், மக்கள் இந்த பிஸியான காலகட்டத்தில் வெளியில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர்.

உண்மையில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், இனிப்பு நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைகிறது. இந்த வகை உணவுகள் நீண்ட காலத்திற்கு நமது ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. இது மதுவைப் பற்றியது மட்டுமல்லாமல், பிரதானமான உணவுகளையும் குறிக்கக் கூடியதாகும். சில தினசரி நுகர்வு பொருட்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமைகிறது.

அவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் குறித்து ஆஷ்லோக் மருத்துவமனையின் இணை நிறுவனர், அலோக் சோப்ரா, எம்.டி., எம்.பி.பி.எஸ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 3 உணவு சேர்க்கைகளை உடனே நிறுத்துங்க.. இல்லாட்டி குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.! மருத்துவர் எச்சரிக்கை..

உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகள்

மருத்துவரின் கூற்றுப்படி,”உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த நான்கு பொருட்களும் உங்கள் வீட்டிற்குள் ஒருபோதும் வரக்கூடாது” என சமீபத்திய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் சமையலறையில் வைக்கப்படாத உணவுகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

தொத்திறைச்சிகள், சலாமிகள், ஹாட் டாக் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தவிர்க்க மருத்துவர் பரிந்துரைக்கிறார். ஏனெனில், இந்த வகை உணவுகளில் காணப்படும் ஆரோக்கியமற்ற பண்புகள் இதயம் மற்றும் குடல் ஆரோக்கியத்தைக் காயப்படுத்துவதாக அமைகின்றன. இவை இரண்டுமே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

பொதுவாக, இந்த வகை இறைச்சி உணவுகளில் சுவையை மேம்படுத்த அல்லது அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்க உப்பு, புகைத்தல், நொதித்தல், நைட்ரேட் போன்ற பாதுகாப்புப் பொருட்களைச் சேர்க்கின்றனர். ஆனால், இந்த வகை பாதுகாப்புப் பொருள்கள் இதயம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடும்.

சர்க்கரை பானங்கள்

கோலாக்கள், எனர்ஜி பானங்கள், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் கூட சர்க்கரை பானங்களில் அடங்குகிறது. இந்த வகை உணவுகளைக் கட்டாயம் தவிர்ப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. சர்க்கரை பானங்களைப் பொறுத்த வரை இனிப்புக்காக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமற்ற தேர்வாகக் கருதப்படுகிறது.

ஆனால், சர்க்கரை பானங்களை அதிகம் எடுத்துக் கொள்வது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கான மிக முக்கியமான காரணமாக அமைகிறது. மேலும் இது கணையம், கல்லீரல், செரிமான அமைப்பு போன்றவற்றையும் பாதிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உணவுப் பழக்கத்திற்கும் வறண்ட சருமத்திற்கும் உள்ள வலுவான தொடர்பு – நிபுணர் விளக்கம்!

உப்பு நிறைந்த சிற்றுண்டிகள்

நாம்கீன்கள், புஜியாக்கள், மசாலா சிப்ஸ் போன்றவை உப்பு நிறைந்த சிற்றுண்டிகளாகும். இதில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்துள்ளது. உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலின் திரவ சமநிலையை சீராக்கவும், இதய தாளத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இது தசை சுருக்கம் மற்றும் நரம்பு தூண்டுதல்களை நடத்த உதவும் தேவையான ஊட்டச்சத்து ஆகும்.

ஆனால், இதை அதிகளவு உட்கொள்வது இதயம் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

View this post on Instagram

A post shared by Alok Chopra (@dralokchopra)

பேக் செய்யப்பட்ட இனிப்புகள்

இது சுடப்பட்டு தயாரிக்கப்படும் இனிப்புகளைக் குறிக்கிறது. இந்த வரிசையில், சாக்லேட் பெட்டிகள், குக்கீகள், கம்மிகள் போன்றவை அடங்குகிறது. இதில், மறைக்கப்பட்ட சர்க்கரை நிறங்கள் மற்றும் உங்கள் உடலை அமைதியாக சேதப்படுத்தும் டிரான்ஸ் கொழுப்புகள் போன்றவை நிறைந்துள்ளது. எனவே பெரும்பாலும் பேக் செய்யப்பட்ட இனிப்புகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர், “இவற்றை ஒருபோதும் சாப்பிட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, ஆனால் ஒரு ஒழுக்கமாக, அவற்றை உங்கள் சமையலறைக்குள் கொண்டு வர வேண்டாம். ஏனென்றால், அவை உங்கள் சமையலறையில் இருந்தால், நீங்கள் ஆசைப்படுவீர்கள்” என்று கூறியுள்ளார். எனவே இவற்றைத் தவிர்ப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: நல்லதுனு சாப்பிடுறீங்களா.? இதுவே குடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள்.! மருத்துவர் எச்சரிக்கை..

Image Source: Freepik

Read Next

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடும் போது இந்த 5 தவறுகளை மட்டும் மறந்தும் செய்யாதீங்க.. அப்றம் பிரச்சனை உங்களுக்குத் தான்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 30, 2025 12:36 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

குறிச்சொற்கள்