Fri Sep 11, 2026 | 10:44 PM IST

Doctor Verified

முட்டையை விட அதிக புரதச்சத்து நிறைந்த சைவ உணவுகள்.. மருத்துவர் பரிந்துரை..

முட்டையை விட அதிக புரதம் தரும் 5 முக்கிய சைவ உணவுகளை டாக்டர் பால் மாணிக்கம் பரிந்துரைக்கிறார். முளைகட்டிய பாசிப்பருப்பு முதல் டெம்பே வரை, குடல் நலனுக்கான சிறந்த புரத மூலங்களை அறிந்து கொள்ளுங்கள்.

ஜிம் கலாச்சாரம் “சிக்கன் சத்து”, “முட்டை புரதம்” என்று மட்டுமே வலியுறுத்தும் இந்த காலத்தில், அமெரிக்காவில் பணியாற்றும் மதுரைச் சேர்ந்த காஸ்ட்ரோ நிபுணர் டாக்டர் பால் மாணிக்கம் பகிர்ந்த புதிய தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குடல் ஆரோக்கியத்திற்காக முட்டையை விட சைவ உணவுகளே சத்தானதும், செரிமானத்திற்கு எளிமையானதும் என அவர் விளக்குகிறார்.

கலிபோர்னியாவில் பணிபுரியும் டாக்டர் பால், மருத்துவ விளக்கங்களை நகைச்சுவையுடன் கலந்து பேசும் தனித்துவத்திற்காக அறியப்படுகிறார். குடல் மைக்ரோபையோம், செரிமான செயல்பாடு, நோய் தடுப்பு ஆரோக்கியம் போன்ற தலைப்புகளை எளிமையாக மக்களுக்கு புரிய வைக்கும் அவர், தனது சமீபத்திய வீடியோவில் குடல்–நலனுக்கு சிறந்த 5 சைவ புரத மூலங்களை பகிர்ந்துள்ளார்.

புரதம் நிறைந்த சைவ உணவுகள்

1. முளைகட்டிய பாசிப்பருப்பு

முளைகட்டிய பாசிப்பருப்பில் 100 கிராமுக்கு சுமார் 7 கிராம் புரதச்சத்து உள்ளது. முளைக்கச் செய்தால் நார்ச்சத்து மற்றும் சத்துகள் கூடும். இதனால் குடல் எரிச்சல் குறைந்து, சத்துகள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த காலை உணவாகவும் இது கருதப்படுகிறது.

2. டோஃபு

சோயாவால் தயாரிக்கப்படும் டோஃபுவில் 100 கிராமுக்கு 8 கிராம் புரதம் கிடைக்கிறது. கொழுப்பு அளவு குறைவானதால் வயிற்று எளிதில் செரிக்கும். தாவர அடிப்படையிலான அனைத்துவித அமினோ அமிலங்களையும் இதில் பெற முடியும். சைவ உணவுகளில் புரதம் மிக அதிகமாகக் கிடைக்கும் பாதுகாப்பான தேர்வாக இது அறியப்படுகிறது.

3. கிரீக் தயிர்

100 கிராமுக்கு 10 கிராம் புரதம் சூழ, கிரீக் தயிர் குடல் பாக்டீரியாக்களை சீரமைக்கும் ப்ரோபயாட்டிக்ஸ் நிறைந்த உணவாக விளங்குகிறது. செரிமானத்தை தூண்டி, வயிற்றுப் புளிப்பு மற்றும் bloating குறைய உதவுகிறது. பால் பொருட்கள் செரிக்கும் நபர்களுக்கு தினசரி உணவில் சேர்க்க ஏற்றது.

4. குறைந்த கொழுப்பு பனீர்

100 கிராமுக்கு 18 கிராம் புரதம் கொண்ட பனீர், சைவ உணவுகளில் மிக உயர்ந்த புரத மூலங்களில் ஒன்றாகும். மிதமான அளவில் எடுத்துக்கொண்டால் வயிற்றில் சுமை ஏற்படுத்தாமல், தசை வளர்ச்சிக்கும், நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

5. டெம்பே

காய்ச்சப்பட்ட சோயாபீன்களால் தயாரிக்கப்படும் டெம்பே, 100 கிராமுக்கு 19 கிராம் புரதம் வழங்குகிறது. இது ஒரு fermented food என்பதால் குடல் நுண்ணுயிர்களை அதிகரித்து, செரிமானத்தை சிறப்பாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. புரதமும் ப்ரோபயாட்டிக்ஸும் ஒரே உணவில் கிடைக்கும் அரிய தேர்வு இது தான் என டாக்டர் பால் கூறுகிறார்.

View this post on Instagram

A post shared by Dr. Pal Manickam (@dr.pal.manickam)

இறுதியாக..

சைவ உணவு புரதம் குறைவாக இருக்கும் என்ற தவறான நம்பிக்கையை இந்த பட்டியல் முறியடிக்கிறது. குடல் செயல்பாடும், கல்லீரல் ஆரோக்கியமும், தசை வளர்ச்சியும்—all-in-one—இந்த 5 சைவ உணவுகளிலேயே கிடைக்கிறது. செரிமானத்தை சுமையாக்காத புரதங்கள் தேவைப்படுபவர்களுக்கு, டாக்டர் பால் பரிந்துரைக்கும் இந்த “குடல்–நண்பன் புரத பட்டியல்” பெரும் உதவியாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. தனிப்பட்ட உடல்நிலை, செரிமான பிரச்சனைகள், லாக்டோஸ் ஒவ்வாமை அல்லது சோயா ஒவ்வாமை உள்ளவர்கள் உணவில் மாற்றம் செய்வதற்கு முன் தங்களுடைய மருத்துவரை அணுகவும்.

Read Next

பிளாக் காபி முதல் பெர்ரி வரை.. குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்காக தினமும் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் இங்கே..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 17, 2025 11:25 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content