Expert

திருமணம் நெருங்கிடுச்சா? எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ நீங்க பின்பற்ற வேண்டிய திட்டங்கள்

நாம் விரும்பும் உடல் எடையை அடைவதற்கான சிறந்த வழியாக, உண்ணும் உணவு அமைகிறது. இந்நிலையில், திடீர் எடை குறைப்புத் திட்டங்கள் பலனளிக்காதபோது, உங்கள் உணவுத் திட்டத்திற்கு ஒரு பிரத்யேக அணுகுமுறை தேவைப்படுகிறது. இதில் திருமணம் நெருங்கும் போது, உடல் எடை குறைய மற்றும் அதிகரிக்க உதவும் வழிகளைக் குறித்து நிபுணர் குறிப்பிட்டுள்ளார்
  • SHARE
  • FOLLOW
திருமணம் நெருங்கிடுச்சா? எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ நீங்க பின்பற்ற வேண்டிய திட்டங்கள்

திருமணம் என்றாலே பெண்கள் பலரும் தங்களின் உடல் மற்றும் சருமத்தைப் பராமரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். அதே சமயம், திருமணக் காலம் களைகட்டியுள்ள இந்த காலநிலையில் மணப்பெண்கள் பலரும் தங்கள் திருமண நாளில் கச்சிதமாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற அழுத்தத்தால் சிரமப்படுகிறார்கள். சிலர் தங்கள் உடலில் உள்ள கூடுதல் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது, இன்னும் சிலர் தங்களது மெல்லிய உடல் அமைப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். எந்தவொரு சிறந்த உடல் எடையை அடைவதற்கான பாதையும் நம் வயிறு மற்றும் உண்ணும் உணவின் மூலமாகவே செல்கிறது.


முக்கியமான குறிப்புகள்:-


வழக்கமான உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் பலனளிக்காதபோது, உங்கள் உணவுத் திட்டத்திற்கு ஒரு பிரத்யேக அணுகுமுறை தேவைப்படுகிறது. இதற்கு உதவும் விதமாகவே, ஊட்டச்சத்து நிபுணர் பாலாக் நாக்பால் வெவ்வேறு தேவைகளுக்காக இரண்டு வெவ்வேறு உணவுத் திட்டங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார். அவர் அந்தப் பதிவில் கூறியதாவது, "தசை வளர்ச்சி என்றால் 'சுகாதாரமற்ற/ குப்பை உணவுகளை' சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது என்றும், கொழுப்பைக் குறைப்பது என்றால் பட்டினி கிடப்பது அல்லது சாலடுகள் மற்றும் சூப்களை மட்டுமே சாப்பிடுவது என்றும் பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது," என்று குறிப்பிடுகிறார்.

நிபுணரின் கருத்து

ஊட்டச்சத்து நிபுணர் பாலாக் நாக்பால் அவர்கள் தனது பதிவில் கூறியதாவது, உடல் இலக்குகளைப் பொறுத்தவரை, உண்மையான ரகசியம், உணவை நீங்கள் எப்படித் தட்டில் பரிமாறுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும். தசை வளர்ச்சி, கொழுப்பு குறைப்பு, எடை அதிகரிப்பு - இவை அனைத்திற்கும் அடிப்படை ஒன்றுதான்: நீங்கள் ஒரு முழுமையான, திருப்திகரமான தட்டைச் சாப்பிடுகிறீர்கள், ஆனால் அந்தத் தட்டில் உள்ள பொருட்களின் விகிதாச்சாரம் மாறுகிறது.

image

pcos-weight-loss-1765263746999.jpg

தசை வளர்ச்சிக்கு

தசையையும் எடையையும் அதிகரிக்க விரும்புபவர்கள், அவர்களின் உணவுத் திட்டத்தில் போதுமான புரதம், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் அதிக கலோரிகள் இருக்க வேண்டும். மேலும், இதனுடன் மெலிந்த இறைச்சி, முட்டை, பால் பொருட்கள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்ரை உணவில் சேர்ப்பதன் மூலம் தசை வளர்ச்சியை மேம்படுத்தலாம்.

உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஊட்டச்சத்தில் புரத பானங்கள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும். அத்துடன் சீரான தன்மையைப் பராமரிப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. ஒரு மாதிரி நாளில், காலை உணவாக ஓட்ஸ் அல்லது முட்டை, மதிய உணவாக அரிசி மற்றும் காய்கறிகளுடன் கோழி இறைச்சி, இரவு உணவாக குயினோவாவுடன் மீன், மற்றும் தயிர், நட்ஸ் மற்றும் பழங்கள் போன்ற சிற்றுண்டிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Foods For Fertility: விரைவாக கருத்தரிக்க இந்த 6 உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

கொழுப்பு குறைப்புக்கு

அடுத்ததாக, எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், தட்டு முழுமையாகவே இருக்கும். ஆனால் விகிதாச்சாரம் மட்டுமே மாறுகிறது. எனவே, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளைச் சற்று குறைத்து, வயிறு நிறைந்திருக்க உதவும் புரதம் மற்றும் நார்ச்சத்து மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் படி, முட்டை, மீன், கோழி, பருப்பு வகைகள் மற்றும் பனீர் போன்ற மெலிந்த புரதங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நிறைய காய்கறிகள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியமாகும்.

அது மட்டுமல்லாமல், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரையைக் குறைப்பதும் அற்புதமான பலன்களைத் தருகிறது. மேலும் சமச்சீரான உணவுகளுக்கு, தட்டில் பாதி காய்கறிகள், கால் பகுதி புரதம் மற்றும் கால் பகுதி முழு தானிய கார்போஹைட்ரேட்டுகள் இருக்குமாறு இலக்கு வைக்க வேண்டும். காலை உணவாக முட்டை மற்றும் காய்கறிகள், மதிய உணவாக பருப்பு, ரொட்டி மற்றும் சாலட், இரவு உணவாக வறுக்கப்பட்ட புரதத்துடன் காய்கறிகள் சாப்பிடுவது எடை குறைப்புக்கு ஒரு சிறந்த உணவுத் திட்டமாக அமைகிறது.

image

nutritionist-shares-5-winter-foods-that-help-you-lose-weight-even-while-you-sleep-Main

View this post on Instagram

A post shared by Palak Nagpal - Clinical Nutritionist (@nutritionwithpalaknagpal)

குறிப்பு

இறுதியாக, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது என்பது இதன் நோக்கம் அல்ல. புத்திசாலித்தனமாகச் சாப்பிடுவதே இதன் நோக்கம் ஆகும். சத்தான உணவு என்பது சலிப்பூட்டுவதோ, கட்டுப்பாடுகள் நிறைந்ததோ அல்லது சிக்கலானதோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது சரியான நேரத்தில், சரியான அளவில், உடலுக்கு உண்மையில் தேவைப்படுவதை உண்பது மட்டுமே ஆகும்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: வெறும் 5 நாள் போதும்.. மணப்பெண் பொலிவோடு இருக்க உதவும் டயட் பிளான்.. நிபுணர் தரும் கூடுதல் டிப்ஸ் 

Image Source: Freepik

Read Next

தினமும் இந்த அளவு டார்க் சாக்லேட் சாப்பிடுங்க.. உடல் எடையை வேகமா குறைக்கலாம்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 21, 2025 12:58 IST

    Published By : கௌதமி சுப்ரமணி