Sat Oct 17, 2026 | 11:23 PM IST

சும்மா இல்ல 1685 பேர் பாதிப்பு., சரசரவென அதிகரிக்கும் டெங்கு பரவல், மறக்காம உடனே இதை பண்ணுங்க!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது, தற்போதைய நிலைப்படி 1685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு எப்படி டெங்கு வரும் என கவனக்குறைவாக இருக்காமல் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
சும்மா இல்ல 1685 பேர் பாதிப்பு., சரசரவென அதிகரிக்கும் டெங்கு பரவல், மறக்காம உடனே இதை பண்ணுங்க!சும்மா இல்ல 1685 பேர் பாதிப்பு., சரசரவென அதிகரிக்கும் டெங்கு பரவல், மறக்காம உடனே இதை பண்ணுங்க!

மழைக்காலம் வந்தாலே கொசுவால் பரவக் கூடிய வியாதிகள் என்பது பெரிய தலைவலியாக மாறக் கூடும். அப்படி மழைக்காலம் தொடங்கியதில் இருந்து பெங்களூருவில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 69 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமில்லை ஜூலை மாதத்தில் மட்டும் 442 பேர் எனவும், இந்த ஆண்டின் தற்போதைய நிலைப்படி மொத்தம் 1685 பேர் பெங்களூருவில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இதையடுத்து லார்வா கொசு உட்பட அனைத்து கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பெங்களூரு மாநகராட்சி இறங்கி இருக்கிறது.

மேலும் படிக்க: Chocolate Cause Acne: அதிகமா சாக்லேட் சாப்பிடுவதால் பருக்கள் வருமா? டாக்டர் பதில் இங்கே!

பெங்களூருவில் தான் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது என கவனக்குறைவாக இருக்க வேண்டும், தமிழகத்தில் விரைவாக மழைக்காலம் உச்சமாக உள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக இப்போது இருந்தே நாமும்பாதுகாப்பாக இருப்பது நல்லது. தமிழகத்தில் பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருவதால் பல சாலைகளும் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் எளிதாக தண்ணீர் தேங்கக் கூடும்.

dengue fever symptoms home treatmentdengue fever symptoms home treatment

தண்ணீர் தேங்கினால் என்ன என்று கடந்து செல்ல வேண்டும், கொசுக்கள் உற்பத்தியாக இதுபோன்ற தேங்கும் தண்ணீரே கொசுக்கள் உற்பத்திக்கு ஏசி பெட்ரூம் போன்ற இடமாகும். இப்படி பரவும் கொசுக்களால் எளிதாகடெங்கு பரவத் தொடங்குகிறது. அதேபோல் நம்மை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், வீட்டில் தேக்கி வைத்திருக்கும் பொருட்களிலும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று ஆகும், இது பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசுவின் கடி மூலம் பரவுகிறது. டெங்கு உடலை பலவீனப்படுத்தும், எனவே சரியான நேரத்தில் அறிகுறிகளை அடையாளம் காண்பது முக்கியம். அதிக காய்ச்சலுடன் உடல் வலி, சோர்வு, தடிப்புகள் மற்றும் பிற அறிகுறிகளும் இதில் அடங்கும்.

டெங்கு எவ்வாறு பரவுகிறது?

டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரை ஏடிஸ் கொசு கடித்து மற்றவரை கடிக்கும் போது இந்த தொற்று வேகமாக பரவுகிறது. இந்த ஏடிஸ் கொசு தேங்கியுள்ள தண்ணீர் உரல்கல், வீட்டில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் பாத்திரங்கள், பூந்தொட்டி, வீட்டு ஓரமாக எப்போது தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் எளிதாக வந்து குடியேறும்.

  • அதேபோல் டெங்குவைப் பரப்பும் கொசு பெரும்பாலும் பகலில் கடிக்கும்.
  • கொசுவின் சிறப்பு என்னவென்றால், இது குளிர்விப்பான்கள், பானைகள், வாளிகள் போன்ற சுத்தமான மற்றும் தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது.
  • டெங்கு காற்றின் மூலமாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ பரவாது.
  • இது கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவுகிறது.
  • டெங்கு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாகப் பரவாது.

dengue mosquitodengue mosquito

டெங்கு பாதிப்பு அறிகுறிகள்?

  • அதிக காய்ச்சல் - 102°F முதல் 104°F வரை உயரலாம்.
  • தலைவலி
  • தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி
  • சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறேன்
  • பசியின்மை
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • கண்களுக்குப் பின்னால் வலி
  • தோலில் தடிப்புகள்
  • கைகள் மற்றும் கால்களில் வீக்கம்
  • இரத்தத் தட்டுக்கள் குறைதல்

மேலும் சில கடுமையான அறிகுறிகளும் இதில் அடங்கும். காய்ச்சல் அதிகமாக தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து பிறருக்கு பரவாமல், பரவல் சங்கிலியை உடைக்கும் ஒரு நபராக நாமும் மாறுவோம்.

image source: meta

Read Next

→ மது குடித்தால் வாயில் வாசனை வர காரணம் என்ன? போதை எப்படி ஏறுது? உடலில் மது எவ்வளவு நேரம் இருக்கும்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.