Sat Sep 12, 2026 | 12:55 AM IST

குடல் ஆரோக்கியத்திற்கு தினமும் செய்ய வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள்

Daily habits you need to follow for a great gut health: உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் குடலுறுப்பும் அடங்கும். இன்றைய மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றின் காரணமாக பலரும் மோசமான குடல் ஆரோக்கியத்தைச் சந்திக்கின்றனர். இதனால் சோர்வு, சரும நிலைகள், வயிற்று வலி போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. இதில் பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இது நீடித்தால், பல்வேறு வகையான தன்னுடல் தாக்க நோய்கள், மனநலப் பிரச்சனைகள், புற்றுநோய் அதிலும் குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படலாம். இதனைச் சரி செய்யவும், உயர்நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும் எளிய மற்றும் தினசரி வாழ்க்கை முறை தேர்வுகளைத் தேர்வு செய்யலாம்.

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியம் என்பது செரிமான மண்டலத்தில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு மற்றும் வகையைப் பொறுத்ததாகும். அதன் படி, செரிமான மண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை பராமரிப்பதைக் குறிக்கிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும், வலுவான நோயெதிர்ப்புச் சக்திக்கும் இன்றியமையாததாகும். இந்த நுண்ணுயிரிகள் சீரான செரிமான செயல்முறையை ஆதரிக்கும் வெவ்வேறு ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின்களை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் சரியான அளவு நுண்ணுயிரிகளை பராமரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Causes of Vomiting: அடிக்கடி வாந்தி எடுப்பது எந்த நோய்களின் அறிகுறி தெரியுமா?

செரிமான மண்டலத்திலிருந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கான செல்கள் வருகிறது. நல்ல குடல் ஆரோக்கியத்தின் உதவியுடன் நோய்வாய்ப்படுதல் மற்றும் ஒவ்வாமை அபாயத்தைக் குறைக்கிறது. உடலில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் மட்டும் செரிமான ஆரோக்கியத்தைப் பெற முடியாது. இது தவிர, சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபட வைப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது குடல் நுண்ணுயிரியை மேம்படுத்துவதற்கு அவசியமாகிறது. இதில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆரோக்கியமான பழக்கங்களைக் காணலாம்.

குடல் ஆரோக்கியத்திற்கான தினசரி பழக்கங்கள்

தவறாமல் உடற்பயிற்சி செய்வது

எந்த வயதிலும் குடலியக்கங்களை மேம்படுத்த உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது அவசியமாகும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் உடலை செயல்பாட்டில் ஈடுபட வைப்பது வீக்கத்தைப் போக்க உதவுகிறது. மேலும், நடைபயிற்சி செய்வது வயிற்று தசைகளை ஈடுப்படுத்த உதவுகிறது. குடல் வாயுவை வெளியே தள்ள உதவும் பெருங்குடலில் உள் அழுத்தத்தை உருவாக்குகிறது. இது தவிர, உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது குடலின் இயக்கத்தைத் தூண்ட உதவுகிறது. இது உணவை சரியாக உடைப்பதற்கு இன்றியமையாததாகும்.

சரியாக உணவு உண்பது

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அதிக கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், காய்கறிகள், பழங்கள், பால் பொருள்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளுடன், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிக்கு பங்களிக்கும் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

குடலில் பில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் காணப்படுகிறது. இதில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. அதில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சரியான வகையான நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும். ஆரம்பகால குடல் புற்றுநோயானது குடல் பாக்டீரியாக்களால் தொடங்கப்படுவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. அதிலும் குறைந்த நார்ச்சத்து மற்றும் அதிக சர்க்கரை உணவு எடுத்துக் கொள்பவர்களில் இது அதிகம் காணப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Gut Health: குடல் ஆரோக்கியமும்… மேம்படுத்தும் முறையும்…

நீரேற்றமாக இருப்பது

தினமும் போதுமான அளவு நீர் அருந்துவது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் பல்வகைத்தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும், நீர் ஆதாரமும் முக்கியமானதாகும். எனவே ஒரு நாளைக்கு 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் படி, உணவுமுறை, வளர்ச்சிதை மாற்றம், வானிலை மாற்றங்கள், உடல் அளவு போன்றவற்றைப் பொறுத்து நீரேற்றத்தின் தேவைகள் மாறுபடும் என்றாலும், உடலில் போதுமான திரவங்கள் இருக்கும்போது நல்ல செரிமானம் இருக்கும் என கூறப்படுகிறது.

குடல் இயக்கங்களைக் கண்காணிப்பது

செரிமான பிரச்சினைகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தைக் கவனமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு குடலியக்கங்களைக் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். அதன் படி, அடிக்கடி வயிற்றுப்போக்கு மற்றும் மெல்லிய மலம் போன்றவைக்கு குடலியக்கம் ஒரு தீவிர காரணமாக இருக்கலாம். குடலியக்கங்களின் அமைப்பு, அதிர்வெண்ணில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை என்றாலும், மலத்தில் இரத்தம், தொடர்ந்து பல நாட்கள் நீடிக்கும் வயிற்றுப்போக்கு, எடையிழப்பு போன்றவை குடலியக்கம் பாதிப்படைவதைக் குறிக்கிறது. எனவே, குடல் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பது அவசியமாகும்.

இந்த ஆரோக்கியமான பழக்க வழக்கங்களின் உதவியுடன் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Gut Health: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த பேரீச்சம்பழ ஸ்மூத்தியை குடியுங்கள்!

Image Source: Freepik

Read Next

Monsoon Eye Care: மழைக்கால தொற்றிலிருந்து கண்களை பாதுகாக்க இத செய்யுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content