Cooker Rice Vs Boiled Rice: அரிசியை பொறுத்தவரை அதன் மேற்பரப்பில் 10 முதல் 15 சதவீதம் மாவுச்சத்துகள் உள்ளது. மீதம் உள்ள 80 முதல் 90 சதவீத மாவுச்சத்து அரிசியின் உள் பகுதியில் உள்ளது.
நீங்கள் சாதத்தை வடிக்கும் போது 10 முதல் 15 சதவீதம் மாவுச்சத்துகள், அதனை வடிகட்டும் போது வெளியேறி விடும். இதே நீங்கள் சாதத்தை குக்கரில் வைக்கும் போது, முழு மாவுச்சத்தும் அதிலேயே இருக்கும். இதனால் குக்கர் சாதத்தை விட வடித்த சாதம் நல்லது.
இருப்பினும் இவை இரண்டும் வெவ்வேறு நிலைத்தன்மை மற்றும் நன்மைகளை கொண்டுள்ளது. இது குறித்து விரிவாக இங்கே காண்போம்.
குக்கர் சாதத்தின் தன்மை
குக்கரில் நாம் சாதம் வைக்கும் போது 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றினால் போது. சாப்பாடு விரைவில் ரெடி ஆகி விடும். இதில் உள்ள மொத்த மாவுச்சத்தும் அப்படியே இருக்கும். நமக்கு வேலை மிச்சம் என்றாலும், இதில் உள்ள நன்மைகள் குறைவு தான்.
குக்கரில் வைத்த சாதத்தை நாம் உட்கொள்ளும் போது, அதில் உள்ள மாவுச்சத்து நமது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும் இது உடல் எடையை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமனாக உள்ளவர்கள், குக்கர் சாதத்தை சாப்பிட வேண்டாம்.
இதையும் படிங்க: Roti Or Rice For Weight Loss: உடல் எடை குறைய ரொட்டி அல்லது சாதம்! எது சாப்பிடலாம்?
ஆதற்காக, தங்களுக்கு சர்க்கரை வியாதி இல்லை, நாங்கள் ஒல்லியாக இருக்கிறோம், எங்களுக்கு எந்த உடல் நல பிரச்னைகளும் இல்லை என்று கூறி இதனை சாப்பிடக்கூடாது. இது இல்லாத பிரச்னைகளை நீங்களே கூப்பிடும் வகையாக அமையும்.
இன்றைய பரபரப்பான காலத்தில், சமைக்க நேரம் இல்லாததால், பலர் குக்கரை நாடுகிறார்கள். ஏதேனும் ஒரு நாள் என்றால் சரி. ஆனால் இதுவே பழக்கமாக மாறும் போது, பல நோய்களுக்கு நாமே டிக்கெட் கொடுப்பதற்கு சமம்.
வடித்த சாதத்தின் தன்மை
நாம் சாதத்தை வடிக்கும் போது, அதில் உள்ள மாவுச்சத்து பாதி வெளியேறிவிடும். மீதம் உள்ள மாவுச்சத்து நம் உடலுக்கு தேவையானவையாக இருக்கும். இது நம் உடலுக்கு போதுமான நன்மைகளை கொடுக்கும்.
வடித்த சாதத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும், இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். மேலும் பல உடல் நல பிரச்னைகள் தீரும். அதனால் முடிந்த வரை அரிசியை வடித்து சாப்பிட முயற்சிக்கவும்.
பின் குறிப்பு
எந்த செயல் முறையில் நாம் சாப்பிட்டாலும் அளவு கட்டுப்படு என்பது அவசியம். வடித்த சாதம் நல்லது தான் என்பதற்காக அதிகமாக சாப்பிட்டால், அதுவே உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். இதனால் பல பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் அளவு கட்டுப்பாடு அவசியம். இது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உணவியல் நிபுணரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik