Fri Sep 11, 2026 | 10:43 PM IST

Doctor Verified

5 ஆண்டுகளுக்கும் மேலாக கொலஸ்ட்ரால் மாத்திரைகள் எடுத்தால் என்ன ஆகும்? – மருத்துவர் யோக வித்யா எச்சரிக்கை!

கொலஸ்ட்ரால் மாத்திரைகளை நீண்ட காலம் எடுத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன? யோக வித்யா மருத்துவர் கூறும் உணவு மாற்றங்கள் மற்றும் இயற்கை கட்டுப்பாட்டு முறைகள்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பு தற்போது பலரிடமும் காணப்படும் பொதுவான பிரச்சனை. இரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த மருத்துவர்கள் பொதுவாக “ஸ்டாட்டின்” வகை மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். ஆனால் நீண்ட காலம் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என மருத்துவர் யோக வித்யா தனது யூடியூப் சேனல் வழியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினசரி மாத்திரை.. ஆனால் உணவு பழக்கங்கள் மாறவில்லையா.?

மருத்துவர் யோக வித்யா கூறுவதாவது, “பலர் கொலஸ்ட்ரால் மாத்திரை சாப்பிடுகிறோம் என்ற நிம்மதியுடன் வடை, பூரி, பிரியாணி, எண்ணெய் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுகின்றனர். உணவு முறையே மாறாத சூழலில், மாத்திரைகளின் மீது முழு நம்பிக்கை வைப்பதால், பல ஆண்டுகள் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது” என்கிறார்.

5 ஆண்டுகள் கடந்து மாத்திரை எடுத்தால் நினைவாற்றல் குறைவு!

நீண்ட காலமாக, குறிப்பாக 5 ஆண்டுகளுக்கும் அதிகமாக கொலஸ்ட்ரால் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால்,

  • ஞாபக மறதி பிரச்சனை
  • மனத் தெளிவு குறைவு
  • கவனக்குறைவு

போன்ற பக்க விளைவுகள் தோன்ற வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன என மருத்துவர் யோக வித்யா குறிப்பிடுகிறார்.

உணவு முறைதான் கொலஸ்ட்ராலின் மூல காரணம்

“கொலஸ்ட்ரால் எனும் பிரச்சனை நமது உணவும் வாழ்க்கை முறையும் தீர்மானிப்பது. மாத்திரைகளில் நம்பிக்கை வைக்கும் பதிலாக உணவை மாற்றினால் பல பிரச்சனைகள் இயற்கையாகவே குறையும்” என அவர் வலியுறுத்துகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ராலை வேகமாகக் கரைக்க காலை, மாலை, இரவு இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நிபுணர் தரும் கூடுதல் டிப்ஸ்

கொலஸ்ட்ராலை குறைக்கும் இயற்கை உணவுகள்

அன்றாட உணவில் பின்வரும் பொருட்களை சேர்த்தால்,
இயற்கையாகவே கொலஸ்ட்ரால் கரைய தொடங்கும்:

  • எலுமிச்சை
  • இஞ்சி
  • பூண்டு
  • மிளகு
  • சீரகம்
  • கருஞ்சீரகம்

எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை குறைத்தால், உடலில் சேகரித்திருக்கும் கொலஸ்ட்ராலும் குறைய ஆரம்பிக்கும் என அவர் கூறுகிறார்.

நடைபயிற்சி – மிக முக்கியமான மருந்து

தினசரி குறைந்தது 1 மணி நேரம் நடைபயிற்சி செய்வது,

  • மோசமான கொலஸ்ட்ராலை குறைக்க
  • நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று மருத்துவர் யோக வித்யா வலியுறுத்துகிறார்.

இறுதியாக..

கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு மருந்துகள் அவசியமானதாக இருந்தாலும், அவற்றை நீண்ட காலம் எடுத்து வருவதால் சில பக்க விளைவுகள் தோன்றும் அபாயம் உள்ளது. சரியான உணவு முறை, எண்ணெய் குறைந்த உணவு, நடைபயிற்சி, இயற்கை மூலிகைகள் ஆகியவை சேர்ந்து இயற்கையாகவே கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியும். மருத்துவ ஆலோசனையுடனும், வாழ்வியல் முறைகளில் மாற்றத்துடனும் இந்த பிரச்சனையை சமாளிப்பது மிக முக்கியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை, நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட பொது தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் ஏற்கனவே கொலஸ்ட்ரால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தாலும், மாற்றங்களை மேற்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

கால்களில் வீக்கம் ஏற்படுவது ஆபத்தானதா? அதன் காரணங்களும், அதற்கு நீங்க செய்ய வேண்டியதும்.. மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 28, 2025 20:12 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content