பொதுவாக கண் துடிப்பதை வைத்து நன்மைகள், தீமைகள் நடக்கும் என்ற நம்பிக்கைகளைக் கொண்டிருப்பர். ஆனால், கண் துடிப்பதற்கும் இது போன்ற நம்பிகைகளுக்கு எந்த வித தொடர்பும் இல்லை. கண்கள் துடிப்பது உடல் ரீதியாக ஏற்படும் சில மாற்றங்களைப் பொறுத்ததாகும். இவ்வாறு கண்கள் துடிப்பது ப்ளெபரோஸ்பாசம் என அழைக்கப்படுகிறது. இந்த கண் துடிப்பானது நொடிக்கு ஒரு முறை ஏற்படும். இது ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை நீடிக்கும்.
கண் துடிப்புக்கான காரணங்கள்
கண் துடிப்பு அல்லது கண் இழுப்புகளை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணங்கள் சில உள்ளன. இவற்றிற்கு சிறந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் கண் இழுப்புகளின் தூண்டுதலை நிறுத்த முடியும். கண் துடிப்புக்கான முக்கிய காரணங்கள் தூக்கமின்மை, அதிக அளவிலான கஃபைன் உட்கொள்ளுதல், மன அழுத்தம், கண் வறட்சி போன்றவை ஆகும். கண் துடிப்பதற்கு சாத்தியமான காரணங்கள் சிலவற்றை இதில் காண்போம்.
ஊட்டச்சத்து குறைபாடு
உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பின், அவை கண்களில் உள்ள தசைகளைத் துடிக்க வைக்கிறது. குறிப்பாக, மெக்னீசியம் குறைபாடுகள் கண் துடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, சரியான அளவிலான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கண் துடிப்பதைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!
கண் வறட்சியடைதல்
அதிக நேரம் கணினி, மொபைல் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு கண்கள் விரைவாக வறட்சியடைந்து விடும். இது கண்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் அமைகிறது. இந்த நேரங்களில் ஏற்படும் கண் துடிப்புகளை கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம். கான்டாக்ட் லென்ஸ் அணிபவராக இருப்பின் சரியான லென்ஸை உபயோகிக்கலாம்.
புகையிலை, மது, காஃபின் பயன்படுத்துதல்
ஆல்கஹால் அருந்துதல், புகையிலை பயன்படுத்துதல், காஃபின் பயன்பாடு போன்றவை காரணமாக கண் இழுப்பு ஏற்படலாம். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
ஒவ்வாமை ஏற்படுதல்
கண்களில் ஒவ்வாமை ஏற்படும் போது ஹிஸ்டமைன்களை வெளியேற்றுகிறது. இது கண் இழுப்பை உண்டாக்குகிறது.
மேலும் சில மருந்துகளின் பக்கவிளைவுகள், சரியாகத் தூங்காமல் இருப்பது, சோர்வு போன்ற பல்வேறு காரணங்களால் கண்கள் துடிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Lower Blood Pressure: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
Image Source: Freepik