$
Risks of Eating Fish: மீன் சாப்பிடுவதால் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கின்றன. இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், அயோடின் ஆகியவை மீன்களில் உள்ளன. மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மீன் சாப்பிடுவதால் உடலுக்கு வைட்டமின் டி, பி2, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைக்கிறது. இந்நிலையில், வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன் சாப்பிட வேண்டும் என பல நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இருப்பினும், ஒரு சமீபத்திய ஆய்வு மீன் சாப்பிடுவதால் உடல்நல அபாயங்கள், குறிப்பாக தோல் புற்றுநோய் ஏற்படும் என எச்சரிக்கிறது.
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

அமெரிக்க வல்லுநர்கள் மீன்களில் வீரியம் மிக்க மெலனோமா புற்றுநோயை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்துள்ளனர். தினமும் 43 கிராம் மீன் சாப்பிடுபவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. மீன்களை அரிதாக உண்பவர்களை விட, தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. கடல் உணவுகளில் உள்ள மாசுபடுத்தும் காரணிகளே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்
இந்த மீன் சாப்பிடலாம்
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் ஆரோக்கியமாக இருக்க ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு வேளை 140 கிராம் மீன் சாப்பிட வேண்டும். அந்த மீன் சால்மனாக இருந்தால் இன்னும் சிறந்தது.
கர்ப்பிணிப் பெண்கள்
கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கானது
உடலில் மீனின் தாக்கம் தெளிவாக உள்ளது. அதிக மீன் சாப்பிட்டால் அது சூடு பிடிக்கும். எனவே, கர்ப்பிணிப் பெண்களும் குறைந்த அளவே மீன் சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் மீன் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்த அளவு மீன் சாப்பிடுவது தாய் மற்றும் குழந்தைக்கு நன்மை பயக்கும், ஆனால் அதை உட்கொள்வதற்கு முன் ஒரு மருத்துவர் அல்லது நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
அதிக மீன் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்
மூளையில் ஏற்படும் விளைவுகள் அதிக மீன் சாப்பிடுவதால் உடலில் பாதரசம் அல்லது பிசிபி அளவு அதிகரிக்கும். அது மூளை அல்லது நரம்பு மண்டலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் நம்புகின்றனர். இது டிமென்ஷியா அபாயத்தையும் கொண்டுள்ளது. எனவே குறைந்த அளவு மீன்களை உட்கொள்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் நிபுணர்களின் கூற்றுப்படி, மீன்களை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் சேரும் நச்சு பொருட்கள் நீரிழிவு நோயை ஏற்படுத்தும். அதுவும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வாமை உணர்வு
மீன்கள் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பிரதான ஒன்று ஒவ்வாமை உணர்வு. மீன்களை சாப்பிடும் போது ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டால் உடலுக்கு பல வகையில் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் சில சமயம் மரணம் கூட நிகழலாம்.

நச்சு தன்மை ஏற்பட காரணம்
கடலில் அதிக பாதரச தன்மை கலந்துள்ளதாக ஆராய்ச்சி தகவல் தெரிவிக்கிறது. தொழிற்சாலை போன்ற கழிவுகளால் கடலில் நச்சுத்தன்மை கலப்பதாக கூறப்படுகிறது. ஆங்காங்கே ஆற்றில் கலக்கப்படும் அனைத்து நச்சுக்களும் நேரடியாக சேருவது கடலில் தான்.
இதையும் படிங்க: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது
நடவடிக்கை எடுப்பது நல்லது
பொதுவாக மீன்கள் சாப்பிடும் போது எந்தெந்த மீன்கள் நல்லது என்பதை அறிந்து சாப்பிடுவது நல்லது. உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் எதில் நிறைந்துள்ளதோ அதை தேர்வு செய்து சாப்பிடுவது நல்லது. மீன் மட்டுமல்ல எந்தவொரு உணவும் அளவுக்கு மீறினால் அது நஞ்சுதான். உண்ணும் உணவே மருந்தாக மாற, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வாசகத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
image source: freepik