Sat Sep 12, 2026 | 02:00 AM IST

Diabetes Treatment: மருந்து இல்லாமல் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? விஷயம் இருக்கு!

Diabetes Treatment: வாழ்க்கை முறை நோய்களில், சர்க்கரை நோயும் முக்கியமான ஒன்றாகும். உலகம் முழுவதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பெரியவர்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் கூட இந்த சர்க்கரை நோய் விட்டு வைப்பதில்லை. உடலால் இன்சுலினை முழுமையாக உற்பத்தி செய்ய அல்லது பயன்படுத்த முடியாமல் போகும் நிலையில் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

இதன் விளைவாக, பக்கவாதம், சிறுநீரகம் அல்லது இதயம் சார்ந்த நோய்களும் ஏற்படலாம். சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகுறித்து பல தவறான வதந்திகள் பரவி வருகின்றன.ஒருபோதும் சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்று சிலர் நம்புகிறார்கள். இதற்கு எதிர்மறையாக, ஒரு சிலர் சர்க்கரை நோயை மருந்துகள் மற்றும் உணவு முறைகளால் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்.

மருந்துகளின்றி சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா?

உண்மையில், மருந்துகளின்றி சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா?இக்கேள்விக்கான விடையை, பாராஸ் மருத்துவமனையின் உள் மருத்துவத் துறை டாக்டர் பி.வெங்கட கிருஷ்ணன் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

டாக்டர் வெங்கட் அவர்களின் கருத்துப்படி, வாழ்க்கை முறை, வயது, இரத்த சர்க்கரை அளவு மற்றும் வயது போன்ற காரணிகளால் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்புகள் ஏற்படலாம். சர்க்கரை நோயைச் சில நாட்களில் குணபடுத்தி விடலாம் என்று கோரும் பல விளம்பரங்களையும், சுவரொட்டிகளையும் பார்த்திருப்போம். ஆனால் இது உண்மை தானா என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சர்க்கரை நோய் காலப்போக்கில் தொடரலாம்

காலப்போக்கில், தொடரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கலாம். மருந்துகளின்றி அது தானாகவே குணமாகிவிடும் என்று எண்ணுவது தவறு.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால், அது முதல் கட்ட சர்க்கரை நோயாக இருந்தாலும் சரி, உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்தாவிட்டால், அது குணமாகாது, தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் முக்கியம்

இன்றைய மோசமான வாழ்க்கை முறை, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மேலும் நோய்களும் அதிகரிக்கின்றன. சரியான வாழ்க்கை முறை மாற்றங்கள்மூலம், இந்த நோயின் தாக்கங்களைக் குறைக்கலாம். ஒரு நபரின் பெற்றோருக்குச் சர்க்கரை நோய் இல்லாத பட்சத்தில், அவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

வாழ்க்கை முறை மாற்றாங்களை செய்யாமல் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது

நீங்கள் அதிக எடை கொண்டவராகவும், சர்க்கரை நோயின் முதல் கட்டத்தில் இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்கள்மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

கலோரிகள் நிறைந்த உணவு மற்றும் அதிக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை நிறைந்த உணவை உட்கொள்பவர்களின் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது.இதனால் அவர்களின் உடலில் அதிகப்படியான கொழுப்பு தங்கி, உடல் எடையும் அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகளின் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?

உடல், இன்சுலின் எதிர்ப்பு நிலையை அடையும்பொழுது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த சூழலில் கணையத்தில், இன்சுலினை உற்பத்தி செய்ய அதிக அழுத்தம் ஏற்படும்.இதன் காரணமாக, சர்க்கரை நோயாளிகள் மிகவும் சோம்பலாக உணர்கிறார்கள்.மேலும் அதிக பசியையும் உணரத் தொடங்குகிறார்கள்.

அதிக பசியினால், அதிகமாகச் சாப்பிடுவதும், சோம்பலினால் எடையும் அதிகரிக்க தொடங்குகிறது. இதனுடன், கணையத்தின் பீட்டா செல்கள் சேதமடையத் தொடங்குகின்றன. இதனால் உடலால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம். இதன் காரணமாக, இரத்த சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.இதுவே சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, மருந்துகளை உட்கொள்வது பெரிதும் உதவுகிறது.எனவே சர்க்கரை நோய் தானாகவே குணமாகும் என்ற நம்பிக்கையில் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தாதீர்கள், அதை நிறுத்துமாறு மருத்துவர் அறிவுறுத்தும் வரை உங்கள் சிகிச்சையைத் தொடருங்கள்.

image source: freepik

Read Next

Snacks for Diabetes: சர்க்கரை நோயாளிகள் இந்த 4 ஸ்நாக்ஸை தாராளமா சாப்பிடலாம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content