How Intermittent Fasting Affects Your Eyes and Vision: ஆடி மாதம் என்றாலே நம்மில் பலர் அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கம். அதே போல வாடா இந்தியாவில் சிவபெருமானை வணங்கி விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். இந்நிலையில், விரதம் இருந்தால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதை மக்கள் கூகுளிலும் தேடியுள்ளனர்.
உண்மையில், உண்ணாவிரதம் உடலில் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது. உண்ணாவிரதம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், பல சமயங்களில், விரதத்தை தவறாகக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருந்தால், வயிற்றில் வாயு பிரச்சனை தொடங்கும். அல்லது நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காததால் பலவீனமாக உணரலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Vitamin D for Acne: வைட்டமின் டி குறைபாடு முகப்பரு மற்றும் முடி உதிர்வை ஏற்படுத்துமா? உண்மை இங்கே!
உண்ணாவிரதம் நம் கண்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று சிலர் நினைக்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது குறித்து கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்சஸ் எம்.டி டாக்டர் சீமா யாதவ் அவர்களிடம் பேசினோம். அவர் கூறியது பற்றி இங்கே பார்க்கலாம்.
விரதம் இருப்பது கண் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

டாக்டர் சீமா யாதவ் கூறுகையில், “விரதத்தால் கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அடிக்கடி மற்றும் நீண்ட நேரம் விரதம் இருப்பவர்களின் கண்களில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். சரியான உணவுப் பழக்கம் இல்லாததால், கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நீங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருந்தால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், கண்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். தண்ணீர் பற்றாக்குறையால் கண்களில் வறட்சி ஏற்படுகிறது. நீண்ட நேரம் கண்களில் வறட்சி நீடித்தால், கண்கள் பாதிக்கப்படலாம். அதே சமயம், உங்கள் உடலில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் குறைவாக உணவு உட்கொள்வதால், கண் பார்வையும் பாதிக்கப்படும். உணவுக் கோளாறு உள்ளவர்களுக்கு கண் பிரச்சனைகள் அதிகம்”.
இந்த பதிவும் உதவலாம் : Yellow Nail Syndrome: உங்க விரல் நகம் அடிக்கடி உடையுதா? கவனம் இந்த நோயாக கூட இருக்கலாம்!
இந்த உணவு தொடர்பான தவறுகளை செய்யாதீர்கள்
நல்ல கண் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவு முக்கியமானது. இங்கே நாம் சில பொதுவான தவறுகளைப் பற்றி பார்க்கலாம்_
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அவற்றின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
- போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க தொடர்ந்து தண்ணீர் குடிக்கவும்.
- உடலில் வைட்டமின் ஏ சத்து குறைவதால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வைட்டமின்-ஏ குறைபாடு இரவில் குருட்டுத்தன்மை மற்றும் பிற கண் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, வைட்டமின்-ஏ குறைபாட்டை சமாளிக்க, கேரட், கீரை, இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Ear Infections During Monsoon: மழைக்கால காது தொற்றுகளை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்.!
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடும் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. வால்நட்ஸ், ஆளி விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. ஆரஞ்சு, கிவி மற்றும் ப்ரோக்கோலி போன்ற வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Pic Courtesy: Freepik