Fri Sep 11, 2026 | 11:09 PM IST

Doctor Verified

சும்மா தகதகன்னு முகம் பளபளக்க வேண்டுமா.? இந்த ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.! மருத்துவர் பரிந்துரை..

பாதாம் மற்றும் கசகசா பயன்படுத்தி வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை ஃபேஸ் மாஸ்க்,  சருமத்தை சுத்தம் செய்து பளபளப்பை அதிகரிக்கும் என்று மருத்துவர் கூறுகிறார். இது எப்படி உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இயற்கையான பொலிவு கொண்ட சருமத்தைப் பெற வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய ஃபேஸ் மாஸ்க் ஒன்றைப் பற்றி மருத்துவர் தீபா கூறியுள்ளார். பாதாம் மற்றும் கசகசா சேர்த்து தயாரிக்கும் இந்த ஹோம்மேடு பேஸ் பேக், சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, தேவையான ஈரப்பதத்தை தந்து, முகத்தில் இயற்கையான பிரகாசத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

பாதாம்–கசகசா ஃபேஸ் பேக்கின் முக்கிய நன்மைகள்

1. ஆழமான சரும சுத்தம்

பாதாம் மற்றும் கசகசாவில் உள்ள நுண் துகள்கள் சருமத் துளைகள் அடைப்பை நீக்கி, தூசி–அழுக்கை அகற்ற உதவுகின்றன.

2. இயற்கையான பொலிவு

பாதாமில் நிறைந்துள்ள வைட்டமின்–E சருமத்திற்கு ஊட்டமளித்து, dullness-ஐ குறைத்து glow-ஐ அதிகரிக்கிறது.

3. வறண்ட சருமம் மறையும்

கசகசா மற்றும் பாலின் ஈரப்பதத் தன்மை dry skin-ஐ மென்மையாக்கி, softness-ஐ அதிகரிக்கும்.

4. கருவளையம் குறையும்

பாதாமில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் சுற்று கருமையை தணிக்க உதவும்.

5. வயதான தோற்றம் தாமதமாகும்

சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை தோன்றுவதை தடுக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகும் கவலையா? நீரேற்றமாக இருக்க நீங்க பின்பற்ற வேண்டியவை

பாதாம் – கசகசா ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

* பாதாம் – 100 கிராம்

* கசகசா – 100 கிராம்

* பால் – தேவையான அளவு

செய்முறை

* பாதாம் மற்றும் கசகசாவை வெயிலில் லேசாக காயவைக்கவும்.

* இரண்டையும் மிக்சியில் சேர்த்து நன்றாக பொடி செய்து எடுக்கவும்.

* இரவில் இந்த பொடியை பாலில் கலந்து மூடி வைக்கவும்.

* மறுநாள் காலை மீண்டும் சிறிதளவு பால் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

* க்ரீம் போன்ற பதத்துடன் இருக்கும் இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.

* 60 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் முகம் இயற்கையாக பிரகாசிக்கத் தொடங்கும் என்கிறார் மருத்துவர் தீபா.

இறுதியாக..

வீட்டிலேயே எளிய பொருட்களால் செய்யக்கூடிய பாதாம்–கசகசா ஃபேஸ் மாஸ்க், சருமத்தை ஆரோக்கியமாக பேணி, பளபளக்கச் செய்யும் சிறந்த இயற்கை அழகு குறிப்பு ஆகும். தொழில்நுட்ப ரசாயனங்கள் இல்லாததால், நாள்தோறும் பயன்படுத்தும் போது எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நன்மை கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. எந்த விதமான சரும பிரச்சனைகள் இருந்தாலும் அல்லது புதிய beauty product/face pack பயன்படுத்தும் முன், தயவுசெய்து உங்கள் தோல் நிபுணரை அணுகவும்.

Read Next

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகும் கவலையா? நீரேற்றமாக இருக்க நீங்க பின்பற்ற வேண்டியவை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 02, 2025 08:48 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content