Top cancer-fighting foods to protect your stomach health: இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும். இதில் புற்றுநோயும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? புற்றுநோயைப் பொறுத்த வரை ஏராளமான புற்றுநோய் வகைகள் உள்ளன. இதில் இரைப்பைப் புற்றுநோய் என்றழைக்கப்படும் வயிற்றுப் புற்றுநோயும் அடங்குகிறது.
அதாவது வயிற்றின் புறணியில், குறிப்பாக சளியை உருவாக்கும் செல்களில் உருவாவதைக் குறிக்கிறது. உலகளவில் இது ஐந்தாவது மிகவும் பொதுவாகக் கண்டறியப்படும் புற்றுநோயாகக் கருதப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த வயிற்றுப் புற்றுநோய் பொதுவாக பிற்கால கட்டங்களில் மட்டுமே கண்டறியப்படுகிறது. இந்த வகை புற்றுநோய்களுக்கு வாழ்க்கை முறை, புகைபிடித்தல், குடிப்பழக்கம், மரபியல் போன்ற காரணிகளைத் தவிர, உணவுமுறையும் புற்றுநோயைப் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் புற்றுநோயைத் தடுக்க உதவும் சில உணவுகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Childhood Cancer Symptoms: குழந்தை பருவ புற்றுநோயின் அறிகுறிகளும் காரணங்களும்! மருத்துவர் தரும் விளக்கம்
வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கக்கூடிய உணவுகள்
பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள் போன்றவை அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். இது அல்லிசின் எனப்படும் ஒரு சேர்மத்தைக் கொண்டுள்ளது. இவை வயிற்றுப் புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ஹெலிகோபாக்டர் பைலோரி போன்ற எதிர்த்துப் போராட உதவுகிறது. இதற்கு அல்லிசினில் உள்ள வலுவான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளே காரணமாகும்.
இந்நிலையில், பூண்டு மற்றும் வெங்காயத்தை தொடர்ந்து உட்கொள்வது வயிற்றில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்க இதை அன்றாட சமையலில் சேர்க்கலாம். மேலும், அதிகபட்ச நன்மைகளைப் பெற இதை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.
இலை மற்றும் சிலுவை காய்கறிகள்
கீரை, காலே, ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை வயிற்று செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதன் மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம்.
முட்டைக்கோஸ் போன்ற சிலுவை காய்கறிகளில் குளுக்கோசினோலேட்டுகள் எனப்படும் சிறப்பு சேர்மங்கள் உள்ளது. இவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுத்து சேதமடைந்த டிஎன்ஏவை சரிசெய்யும் நொதிகளை ஆதரிக்கிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளது. இதில் வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இவை செல்களை சேதப்படுத்தி புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க வழிவகுக்கிறது.
இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் புற்றுநோய் செல்கள் பரவுவதைத் தடுக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது வயிற்றின் புறணியைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், இவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. புத்துணர்ச்சியூட்டும் நச்சு நீக்க பானத்திற்காக இதை புதிதாக சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Cancer: வயிற்றில் புற்றுநோய் இருந்தால் என்ன சாப்பிடக் கூடாது?
கிரீன் டீ
கிரீன் டீ அதன் கேட்டசின்கள் போன்ற பாலிபினால்களின் அதிக உள்ளடக்கத்திற்கு நன்கு பெயர் பெற்றதாகும். இந்த இயற்கை ஆக்ஸிஜனேற்றிகள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது புற்றுநோயின்வளர்ச்சியை மெதுவாக்கலாம் அல்லது தடுக்கலாம். இதைத் தொடர்ந்து குடிப்பது வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக புற்றுநோயின் அதிக விகிதங்களைக் கொண்ட மக்களில், தினமும் 2-3 கப் கிரீன் டீயை ஆரோக்கியமான பழக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்
ஓட்ஸ், தினை, பழுப்பு அரிசி, முழு கோதுமை மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்கவும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இந்த அதிகளவிலான நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களை நடுநிலையாக்குவதன் மூலம் வயிற்று புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் உள்ள முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cancer Prevention: இந்த 7 பழக்கத்தை ஃபாலோ பண்ணுங்க.. வயிறு புற்றுநோய் வர வாய்ப்பே இல்ல!
Image Source: Freepik