Sat Sep 12, 2026 | 12:03 AM IST

Doctor Verified

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள்.. மருத்துவர் பரிந்துரை..

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுகள், தவிர்க்க வேண்டிய பழங்கள், 50 கிராம் மாவுச்சத்து விதி, இன்சுலின் கட்டுப்பாட்டுக்கான உணவு முறைகள் குறித்து டாக்டர் இளவரசி வழங்கிய முக்கிய மருத்துவ ஆலோசனைகள்.

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலிருந்தே சர்க்கரை நோய் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகள் உணவில் கடுமையான கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக மருத்தவர்கள் வலியுறுத்துகின்றனர். சர்க்கரை நோயாளி எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதில் பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து மருத்துவர் இளவரசி தனது மருத்துவ ஆலோசனைகளைப் பகிர்ந்து உள்ளார். சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக பாகற்காய் மிகச் சிறந்த உணவாக கருதப்படுகிறது. ஆனால் அதோடு மட்டுப்படுத்திக்கொள்ளாமல், இரத்த சர்க்கரையை குறைக்கும் பல இயற்கை உணவுகளும் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

what-are-the-complications-of-diabetes-main

இரத்த சர்க்கரை + இன்சுலின் — இரண்டும் சமநிலைப்பட வேண்டும்

பல நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதே முக்கியம் என நம்புகின்றனர். ஆனால் டைப்–2 சர்க்கரை நோய் என்பது இரத்த சர்க்கரை அதிகரிப்பால் மட்டுமே ஏற்படும் பிரச்சனை அல்ல. உடலில் இன்சுலின் சரியாக வேலை செய்யாததும், அதிகமான இன்சுலின் அளவு திரண்டு இருப்பதும், நீண்டகால சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர் இளவரசி எச்சரிக்கிறார்.

“சர்க்கரை அளவை மட்டும் குறைப்பது சிகிச்சை அல்ல; இன்சுலின் எதிர்ப்பு சக்தியும் குறைய வேண்டும்” என்பதே அவர் வலியுறுத்தும் முக்கிய கருத்து. இது சரியாக சிகிச்சை செய்யப்படாவிட்டால், கிட்னி பிரச்னை, கண் பார்வை குறைவு, கால்களில் படரும் காயங்கள் போன்ற கடுமையான சிக்கல்கள் உருவாகக் கூடும்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை கொண்ட எந்த உணவும் தவிர்க்கப்பட வேண்டும். இதில்

* வாழைப்பழம்

* மாம்பழம்

* திராட்சை

* சப்போட்டா

* தேன்

அனைத்தும் அடங்கும்.

இந்த பதிவும் உதவலாம்: எகிறும் சுகர் லெவைக் கட்டுக்குள் வைக்க தினமும் ஒரு பின்ச் அளவு இலவங்கப்பட்ட எடுத்துக்கோங்க..

சாப்பிடக்கூடிய ‘குறைந்த சர்க்கரை கொண்ட பழங்கள்’

சில பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவை:

* கொய்யா

* நெல்லிக்காய்

* அவகேடோ

* ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகைகள்

இவை இரத்த சர்க்கரை உயர்வை தடுக்கின்றன.

‘50 கிராம் மாவுச்சத்து விதி’ – டாக்டர் இளவரசி ஆலோசனை

நோயாளிகள் ஒரு நாளில் 50 கிராமிற்கு குறைவான மாவுச்சத்து (carbs) மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் ரத்த சர்க்கரையின் திடீர் உயர்வு தடுக்கப்படும். அதாவது,

* சாதம்

* ரொட்டி

* இட்லி

* தளி உணவுகள்

இதனை குறைத்து, காய்கறிகள் மற்றும் புரத உணவுகளை அதிகரிக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

1

இறுதியாக..

சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றினால், இரத்த சர்க்கரை மட்டுமின்றி, இன்சுலின் செயல்பாடும் கட்டுப்பாட்டில் இருக்கும். குறைந்த சர்க்கரை கொண்ட பழங்கள், காய்கறிகள், மற்றும் குறைந்த கார்ப் உணவுகள் ரத்த சர்க்கரை நிலைமைக்கு உதவும். டாக்டர் இளவரசி பரிந்துரைத்த தினசரி 50 கிராம் மாவுச்சத்து விதி, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிக முக்கியமான வழிகாட்டுதலாகும்.

Disclaimer: இந்த கட்டுரை நிபுணர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. எந்த உணவு மாற்றத்தையும் மேற்கொள்ளும் முன் உங்கள் மருத்துவர் அல்லது போஷக நிபுணரின் ஆலோசனையைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

Read Next

எகிறும் சுகர் லெவைக் கட்டுக்குள் வைக்க தினமும் ஒரு பின்ச் அளவு இலவங்கப்பட்ட எடுத்துக்கோங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 01, 2025 23:46 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content