மருந்தே வேண்டாம்.. உணவு மட்டும் போதும்.!

  • SHARE
  • FOLLOW
மருந்தே வேண்டாம்.. உணவு மட்டும் போதும்.!


Calcium Rich Foods: உடலுக்கு எல்லாவிதமான சத்துக்களும் கிடைத்தால் மட்டுமே சரியான ஆரோக்கியம் சாத்தியமாகும். அதில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியமாகின்றன. இதில் கால்சியம் நமக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. எலும்புகள் வலுவாகவும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், உடலுக்கு போதுமான அளவு கால்சியம் தேவைப்படுகிறது. 

கால்சியம் குறைபாடு ஏற்படும் போது, அதனை மருந்து மூலம் தான் குணப்படுத்த முடியும் என்பதை தவிர, இதனை உணவு மூலமும் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இங்கே. 

பால் பொருட்கள்

கால்சியத்தின் சிறந்த மூலமாக பால் திகழ்கிறது. நீங்கள் தினமும் பால், தயிற், காட்டேஜ் சீஸ் மற்றும் பனீர் போன்ற பால் பொருட்களை உங்கள் உணவில் இணைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் கால்சியத்தை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. 

இலை காய்கறிகள்

ஊட்டச்சத்துகள் நிறைந்த இலை காய்கறிகளில், கால்சியம் மிக அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருந்தால், நீங்கள் முட்டைகோஸ், கீரை மற்றும் ப்ரக்கோலி போன்ற இலை காய்கறிகளை உங்கள் உண்வில் இணைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலில் கால்சியம் அதிகரிக்கும். மேலும் உங்கள் எலும்பு வலுவாகும். 

இதையும் படிங்க: சரியா தூங்கலைன்னா சுகர் வந்துடுமாம்! பெண்களே உஷார்..

கொண்டை கடலை

நீங்கள் கால்சியம் பற்றாக்குறையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ திமனும் ஒரு கப் கொண்டை கடலை சாப்பிடுங்க. இது உங்கள் உடலுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கும். மேலும் இதில் இரும்புச்சத்துக்களும் நிறைந்துள்ளன. 

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி,ஏ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. இது உங்களுக்கு போதுமாக அளவு கால்சியம் சத்தை கொடுப்பதுடன், உங்கள் சருமத்தை பொலிவாக்க உதவும். 

சோயா பால்

நீங்கள் VEGAN-ஆக இருந்தால், பாலுக்கு மாற்றாக சோயாவில் இருந்து பெறப்படும் பாலை எடுத்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு தேவையான அளவு கால்சியத்தை கொடுக்கும்.

இந்த உணவுகள் உங்களின் கால்சியம் குறைபாட்டை தீர்க்கும். இருப்பினும் இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். 

Image Source: Freepik

Read Next

Coffee: இந்த பிரச்னை இருந்தா காப்பி குடிக்கக்கூடாது.!

Disclaimer

குறிச்சொற்கள்