Fri Sep 11, 2026 | 10:43 PM IST

Doctor Verified

வீக்கத்தைக் குறைக்க நீங்க பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்.. ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம்

பொதுவாக, வீக்கம் என்பது காயம், தொற்று அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு உடலின் இயற்கையான எதிர்வினையைக் குறிக்கிறது. இந்த வீக்கத்தைக் குறைப்பதற்கு அன்றாட வாழ்வில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதில் வீக்கத்தைக் குறைக்க ஆயுர்வேதத்தில் பின்பற்ற வேண்டிய பழக்கங்களைக் காணலாம்.

வீக்கம் என்பது இன்று பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இது தொற்று, காயம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு உடலின் இயற்கையான எதிர்வினையைக் குறிக்கிறது. வெப்பம், வீக்கம், வலி மற்றும் சிவத்தல் போன்றவை வீக்கத்தால் ஏற்படும் சில அறிகுறிகள் ஆகும். பொதுவாக, குறுகிய கால வீக்கம் குணப்படுத்துவதற்கு நன்மை பயக்கும் என்றாலும் நீண்ட கால வீக்கம் ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. இதனால் நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயமும் அதிகரிக்கலாம்.

நீடித்த வீக்கத்தின் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய், மூட்டுவலி மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற பல கடுமையான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மோசமான வாழ்க்கை முறை தேர்வுகளும் வீக்கத்தை அதிகரிக்கலாம். அது மட்டுமல்லாமல், இவை நீண்ட கால சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்த பழக்கங்களை அடையாளம் கண்டு மாற்றுவதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும். இதில் ஆயுர்வேத முறைப்படி, வீக்கத்தைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான அன்றாட பழக்கங்களைக் கையாள வேண்டும்.

இதில், ஆயுர்வேதத்தில் வீக்கத்தைக் குறைக்க உதவும் அன்றாட பழக்கங்கள் குறித்து PCOS & நீரிழிவு நோய் தலைகீழ் சிகிச்சை, எடையிழப்பு நிபுணரான டாக்டர். நிமர்ஜீத் எம்.டி அவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

வீக்கத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத வைத்தியங்கள்

நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, வீக்கம் ஏற்படுவதால் உடலை சோர்வடையச் செய்கிறது. இவ்வாறு உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதற்கு இந்த எளிய ஆயுர்வேத உணவுகளை 7 நாட்களுக்கு சேர்க்கத் தொடங்குங்கள் என்று விளக்குகிறார். இதில் அதைப் பற்றி இங்குக் காண்போம்.

நாள் 1

- காலையை வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு புதிய பருவகால பழத்துடன் தொடங்க வேண்டும்

- மதிய உணவில் கிச்சடியைச் சேர்த்துக் கொள்ளலாம்

- நாளின் முடிவில், இனிமையான மஞ்சள் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும் 10 சிறந்த மூலிகைகள் இதோ.. நிபுணர் தரும் டிப்ஸ்

நாள் 2

- CCF தேநீருடன் நாளைத் தொடங்க வேண்டும் (சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் நீர்)

- மதிய உணவாக சப்ஜியுடன் பாசிப்பருப்பு ரொட்டியைச் சேர்க்கலாம்

- சாதம் மற்றும் சிறிது நெய்யுடன், இரவு உணவை லேசாக வைத்திருக்கலாம்

நாள் 3

- காலையில் முதலில் இஞ்சி டீ பருக வேண்டும்

- மதிய உணவில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் பருப்பைச் சேர்க்கலாம்

- இரவில் ஒரு சிட்டிகை ஜாதிக்காயைச் சேர்த்த சூடான பால் குடித்த பிறகு தூங்கலாம்

நாள் 4

- உங்கள் நாளை பெருஞ்சீரகத் தண்ணீருடன் தொடங்க வேண்டும்

- மதிய உணவில் மூங் கிச்சடியைச் சேர்க்கலாம்

- இரவு உணவாக சப்ஜியுடன் ஜீரா சாதம் சாப்பிடலாம்

நாள் 5

- காலையில் வெதுவெதுப்பான எலுமிச்சை தேன் தண்ணீர் குடிக்க வேண்டும்.

- காலை உணவு அல்லது மதிய உணவாக தயிருடன் மேத்தி பரோட்டாவைச் சேர்க்கலாம்

- முளைத்த கிச்சடியுடன் இரவு உணவை லேசாக வைத்திருக்கலாம்

View this post on Instagram

A post shared by Dr.Nimarjeet| MD Ayurveda (@ayurveda.drnimarjeet)

நாள் 6

- துளசி தேநீருடன் நாளைத் தொடங்க வேண்டும்

- மதிய உணவிற்கு ஏதேனும் சூடான தானிய கிண்ணத்தைத் தேர்வுசெய்யலாம்

- படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கப் தங்கப் பால் அருந்தலாம்

நிபுணர் பகிர்ந்துள்ள இந்த ஆயுர்வேத உணவுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நம் உடலில் வீக்கத்தைக் கையாள முடியும். மேலும், அன்றாட வாழ்வில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சரியாக சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம் பெறுவது, மன அழுத்தத்தை நிர்வகிப்பது போன்ற பழக்கங்களைக் கையாள வேண்டும்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: பல நோய்களுக்கு முக்கிய காரணம் வீக்கம் தான்.. உங்க உடலில் வீக்கத்தின் அளவை சரிபார்ப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

செரிமானம் முதல் பளபளப்பான சருமம் வரை.. கிராம்பு தண்ணீர் தரும் அதிசய நன்மைகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 03, 2025 12:00 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content