Doctor Verified

Blood Sugar Ayurvedic Remedy: இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க இந்த ஆயுர்வேத முறைகளைப் பயன்படுத்துங்க

  • SHARE
  • FOLLOW
Blood Sugar Ayurvedic Remedy: இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க இந்த ஆயுர்வேத முறைகளைப் பயன்படுத்துங்க

Ayurvedic Remedies For Blood Sugar Management: உலகளவில் பெரும்பாலானோர் பாதிக்கப்படும் பொதுவான சுகாதார நிலைகளில் ஒன்றாகவே நீரிழிவு நோய் அமைகீறது. இது உடல் உணவை ஆற்றலாக மாற்றுவதையும், இன்சுலின் பயன்பாட்டைப் பொறுத்தும் ஏற்படுவதாகும். இந்த நீரிழிவு நோய் சரியான நேரத்தில் நிர்வகிக்கப்படா விட்டால், இதய நோய்கள், நரம்பு பாதிப்பு, கண் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். இந்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சில ஆயுர்வேத தீர்வுகள் உள்ளன. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையாக நிர்வகிக்க உதவும் ஆயுர்வேத தீர்வுகள் குறித்து பீகார், தர்பங்கா, PHC, இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS) நிபுணர், மருத்துவர் கணேஷ் சவுத்ரி அவர்கள் விளக்கியுள்ளார்.


முக்கியமான குறிப்புகள்:-


இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஆயுர்வேத வைத்தியம்

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க சில ஆயுர்வேத வைத்திய முறைகள் உதவுகின்றன.

வெந்தயம்

வெந்தய விதைகள் ஆல்கலாய்டுகள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. முந்தைய நாள் இரவிலேயே ஊறவைத்த வெந்தய விதைகளின் தண்ணீரைக் குடிக்கும் போது பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ayurvedic Weight Gain: ஒல்லியா இருக்கீங்களா? எடை அதிகரிக்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை முயற்சி செய்யுங்க

ஆம்லா

மருத்துவர் கணேஷ் அவர்களின் கூற்றுப்படி, நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நிறைந்துள்ளது. இது கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது இரத்த சர்க்கரை ஒழுங்குபடுத்த உதவுகிறது. தினமும் நெல்லிக்காய் சாறு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.

பாகற்காய்

நீரிழிவு நோய்க்கான நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத தீர்வாக பாகற்காய் உள்ளது. இதில் இன்சுலின் விளைவுகளைப் பிரதிபலிக்கக் கூடிய கலவைகள் உள்ளன. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு குறைக்கப்படுகிறது. இவற்றை காய்கறியாகவோ, சாறு வடிவிலோ எடுத்துக் கொள்வது சாத்தியமான நன்மைகளைத் தரும்.

துளசி

துளசி அடாப்டோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது இன்சுலின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இவற்றை தேநீராக உட்கொள்ளலாம். இந்தியன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் பயோகெமிஸ்ட்ரி நடத்திய ஆய்வின் படி, 30 நாள்களுக்கு 2 கிராம் / கிலோ BW என்ற அளவில் உணவில் சேர்க்கப்படும் துளசி இலைகள், இரத்த சர்க்கரை அளவில் கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Curd Benefits Ayurveda: தயிரின் அனைத்து நன்மைகளையும் பெற நீங்கள் பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத வழி

கிலோய்

ஆயுர்வேத மூலப்பொருளான கிலோய், தொற்று நோய் காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவை இரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

கற்றாழை

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் கற்றாழை ஜெல் பெரிதும் உதவுகிறது. கற்றாழை சாறு குடிப்பது, நீரிழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கையான வழியாக உள்ளது.

ஷிலாஜித்

மருத்துவர் சவுத்ரி அவர்களின் கூற்றுப்படி, ஷிலாஜித் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இது இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை மேலாண்மைக்கும் உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், நீரிழிவு நோயின் நாள்பட்ட அழற்சியை எதிர்க்கக் கூடியதாக அமைகிறது.

வேப்பிலை

வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதுடன், உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வேப்ப இலைகளை தூள், தேநீர் அல்லது காப்ஸ்யூல்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ayurvedic Bathing Tips : ஆயுர்வேத முறைப்படி எப்படி குளிக்க வேண்டும் தெரியுமா?

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

மருத்துவர் கணேஷ் சௌத்ரி, எந்தவொரு ஆயுர்வேத மூலப்பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

சுகாதார நிபுணரை அணுகுதல்

நீரிழிவு மேலாண்மை திட்டத்தில் ஏதேனும் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன், சுகாதார வழங்குநருடன் கலந்தாலோசிக்க வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே நீரிழவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் கட்டாயம் சுகாதார நிபுணரை அணுக வேண்டும்.

நபருக்கு நபர் மாறுபடுதல்

ஆயுர்வேத மூலிகைகளின் செயல்திறன் நபருக்கு நபர் மாறுபடுவதால், ஒரு நபருக்கு பயனுள்ள தாக்கத்தை ஏற்படின், மற்றொருவருக்கும் அதே தாக்கத்தை ஏற்படுத்தாது.

சரியான வாழ்க்கை முறை

நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு அதற்கான சப்ளிமென்ட்ஸ் அல்லது மூலிகைகள் எடுப்பதற்கு அப்பாற்பட்டதாகும். சீரான உணவு, வழக்கமான உடல் செயல்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, போதுமான தூக்கம், மன அழுத்த மேலாண்மை போன்றவை இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Menstruation Ayurvedic Tips: மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சில ஆயுர்வேத முறைகள்

Image Source: Freepik

Read Next

Ayurveda: ஆயுர்வேத மருந்துகள் உண்மையில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாதா? உண்மை என்ன?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்