Reduce Body Heat: உடல் சூட்டை உடனே குறைக்க சாலையோர கடைகளில் இதை வாங்கி சாப்பிடுங்க!

உடல் சூட்டை குறைத்தாலே ஆரோக்கியத்தின் பல்வேறு பிரச்சனைகளை  பேணி காப்பதற்கு சமம். உடல் சூட்டை குறைக்க பலர் பல வகையான உணவுகளை தேடித்தேடி சாப்பிட விரும்புகிறார்கள். சில சாலையோரக் கடைகளில் கிடைக்கும் குறிப்பிட்ட உணவுகளே உடலை சூட்டில் இருந்து உடனடியாக வெளியே கொண்டுவர உதவும்.
  • SHARE
  • FOLLOW
Reduce Body Heat: உடல் சூட்டை உடனே குறைக்க சாலையோர கடைகளில் இதை வாங்கி சாப்பிடுங்க!

Reduce Body Heat: உடல் சூட்டை குறைத்தாலே ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை சமாளித்து விடலாம். உடல் சூடு அதிகமாக இருப்பதால் உஷ்ணம், உடலின் உட்புற உறுப்புகளில் ஆபத்து, செரிமான பிரச்சனை, முகப்பருக்கள், சோர்வான உணர்வு, அதீத வியர்வை என பல பிரச்சனைகளை சந்திக்க நேரும்.

உடல் வெளிப்புற சூழ்நிலைக்கு ஏற்ப உடலை மாற்றிக் கொள்ளும். வெளிப்புறத்தில் குளிராக இருந்தால் உடல் தானாகவே சூட்டை வெளியேற்றும். இப்படியே தொடர்ந்து செய்யும் போதுதான் குளிர்காலத்தில் காய்ச்சலை சந்திக்க வேண்டி வருகிறது. அதேபோல் வெளிப்புறத்தில் சூடாக இருக்கும் போது உடல் அந்த சூட்டை அதிகரிக்கச் செய்கிறது. அதோடு மசாலா உணவு, வறுத்த உணவு போன்றவைகளும் உடல் பாதிப்புக்கு காரணமாகிறது.

உடல் சூட்டால் ஏற்படும் பல பிரச்சனைகள்

உடலின் சரியாக பராமரிப்பு இல்லாததே உடல் சூடு அதிகரிக்க முக்கிய காரணமாகும். உடலை சூட்டை தணிக்க பல உணவுகளும் வழிகளும் பேருதவியாக இருக்கும். ஏன் சாலையோர உணவுகளே இதற்கும் பெரும் உதவியாக இருக்கக்கூடும். சாலையோர உணவுகள் என்றாலே உடலுக்கு கேடு என்றுதான் நினைக்கிறார்கள்.

மேலும் படிக்க: Risks of Poor Sleep: தூக்கமின்மை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா?

பலர் சுத்தம் மற்றும் ஆரோக்கியமில்லாத உணவுகளை சாலையோரத்தில் விற்பதால் ஆரோக்கியமான சாலையோர விற்பனையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. சாலையோர உணவுகளில் பல ஆரோக்கியமான உணவுகளும் கிடைக்கிறது. இதில் உடல் சூட்டை குறைக்க உதவும் சிறந்த உணவு வகைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.

body heat reduce food list

உடல் சூட்டை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்

இளநீர்

  • உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் ஆகச்சிறந்த முக்கிய உணவாக இளநீர் இருக்கிறது.
  • கோடை காலம் மட்டுமின்றி உடல் சூடாக இருக்கும் போதெல்லாம் இளநீரை தாராளமாக உட்கொள்ளலாம்.
  • இளநீர் உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும் என்றாலும் உடல் சூடு என்பது பெருமளவு குறையும்.
  • உடல் சூட்டை குறைக்க இளநீர் குடிக்கலாம். மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இளநீர் பெரிய கடைகளை விட சாலையோர கடைகளில்தான் அதிகமாக விற்கப்படுகிறது.

வெள்ளரிக்காய்

நாம் பேருந்தில் செல்லும் போதும், சாலையோர வண்டிக் கடைகளிலும் கிடைக்கும் உணவு வெள்ளிரிக்காய். இது குறைந்த விலை உணவாகும். வெள்ளரிக்காயை கழுவிவிட்டு அப்படியே சாப்பிடலாம். மேலும் இதை வட்ட வடிவில் வெட்டி கண் இமைகளுக்கு வைத்தால் கண் மற்றும் முக குளிர்ச்சியை அப்படியே உணரலாம்.

புதினா வகை உணவு

இப்போதெல்லாம் பெரும்பாலான சாலையோரக் கடைகளிலும் கிடைக்கும் ஜூஸ்களிலும், உணவுகளிலும் பெருமளவு புதினா பயன்படுத்தப்படுகிறது. புதினா உடலுக்கு மிக நல்லது. இது உடல் சூட்டை குறைக்க பெருமளவு உதவியாக இருக்கும். மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் புதினாவில் வயிற்றுப்புண், குடல் புண் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

அனைவரும் நன்கு அறிந்த தர்பூசணி

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க உணவு என்னவென்றால் அனைவரும் அறிந்த தர்பூசணி பழமாகும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இது உடல் சூடாக இருக்கும் நேரத்தில் நீர்ச்சத்து அளித்து அதை தணிக்க உதவுகிறது. மேலும் இதை சாப்பிட்ட உடன் வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால் எடை இழப்புக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

healthy roadside foods

உடல் சூட்டை குறைக்கும் வாழைப்பழம்

  • வாழைப்பழத்தை கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் ஏராளம்.
  • விலை உயர்ந்தது என்பதால் ஏராளமானோர் ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களை குறிவைக்கிறார்கள்.
  • வாழைப்பழத்தின் அருமையை பலரும் அறிந்திருப்பதில்லை.
  • வாழைப்பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கிறது.
  • அதோடு ஒன்றுதான் வாழைப்பழத்தின் குளிரூட்டும் தன்மை.
  • உடலை நச்சு நீக்குவதோடு வெப்பத்தை எதிர்த்து போராடுவதற்கும் வாழைப்பழம் பெருமளவு உதவியாக இருக்கும்.

மோர்

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றாலும் இப்போதெல்லாம் மோர் பாக்கெட் வடிவில் தான் கிடைக்கிறது என்பதுதான். சில கடைகளில் மட்டுமே மோரை மண்பானையில் வைத்து விற்கிறார்கள். இத்தகைய மோர்தான் உடலுக்கு ஆரோக்கியமானது. இது செரிமான அமைப்பை மேம்படுத்தி, உடல் சூட்டை தணிக்கவும் பெருமளவும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: இரும்பு போல வலுவான எலும்பு வேணுமா? மருத்துவர் சொல்லும் குறிப்புகள் இதோ!

எலுமிச்சை ஜூஸ்

சிறிய கடைகள் முதல் ஜூஸ் கடைகள் வரை அனைத்து இடத்திலும் எலுமிச்சை ஜூஸ் கிடைக்கும். லெமன் சோடா, ஸ்வீட் லெமன் ஜூஸ், சால்ட் லெமன் ஜூஸ் என பல வடிவில் கிடைக்கிறது. இது சிட்ரஸ் பானமாகும், இதில் வைட்டமின் சி இருக்கிறது. இது உடல் சூட்டைக் குறைக்க பெருமளவு உதவியாக இருக்கும்.

pic courtesy: freepik

Read Next

Hydrating Tips: இப்பவே வெயில் கொளுத்த ஆரம்பிச்சிட்டு.. நீரேற்றமாக இருக்க இதை செய்யுங்கள்..

Disclaimer