Weight Loss at Home: வீட்டில் இருந்தே 37 கிலோ எடை குறைத்த 36 வயது பெண்.. 85 கிலோ டூ 48 கிலோ- எப்படி தெரியுமா?

உடல் எடையை குறைக்க வேண்டும் என பலர் பல முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் வீட்டில் இருந்தே 37 கிலோ எடை குறைத்த 36 வயது தாயின் பயண அனுபவத்தையும் அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதையும் பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
Weight Loss at Home: வீட்டில் இருந்தே 37 கிலோ எடை குறைத்த 36 வயது பெண்.. 85 கிலோ டூ 48 கிலோ- எப்படி தெரியுமா?


Weight Loss at Home: உடல் எடையை குறைக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் சிலருக்கு பலன் கிடைக்கிறது, பலருக்கு பலன் கிடைப்பதில்லை. மேலும் உடல் எடை குறைப்பதில் ஏணையோர் தோற்றுப்போவதற்கு முக்கிய காரணம் உடல் எடை குறைக்கும் பயணத்தை பாதியிலேயே கைவிட்டுவடுவது தான்.

இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையை பலர் எதிர்கொள்கிறார்கள். தேசத்தின் பிரதமர் மோடியே இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் உடல் பருமன் எனப்படும் Obesity பிரச்சனை அதிகமாகி வருகிறது. இதை குறைக்க நாட்டு மக்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: முடி வளர்ச்சிக்கு கருப்பு எள் செய்யும் அற்புதங்களும்.. பயன்படுத்தும் முறைகளும்..

வீட்டில் இருந்தே உடல் எடை குறைப்பது எப்படி?

இப்படி உடல் எடையை குறைக்க பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சிரமப்படும் நிலையில், உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து அதிவேகமாக உடல் எடையை குறைத்து 36 வயது தக்க ஒரு பெண் அசத்தி இருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த பெண் தனது எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்துள்ளார். ஒருவேளை நீங்களும் எடை குறைக்கும் பயணத்தில் இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

37 kilo எடை குறைத்து அசத்திய பெண்

மிகவும் கொழுப்பம் அடைய வேண்டாம், இன்ஸ்டாகிராம் பயனரான தனுஸ்ரீ தான் அந்த பெண். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வீட்டில் இருந்தபடியே அந்த பெண், ஆரோக்கியமான முறையில் 37 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.

தனது எடையை எப்படி ஆரோக்கியமான முறையில் குறைத்தேன், அதற்கு என்னவெல்லாம் செய்தேன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பார்க்கலாம்.

Weight-Loss-at-Home-in-tamil

36 வயதில் 37 கிலோ எடையை குறைத்தது எப்படி?

தனுஸ்ரீ என்ற 36 வயது பெண் தாயாக இருக்கும் நிலையில், தனது உடல் எடை குறித்து பெரிதும் கவலைக் கொண்டுள்ளார். சுமார் 85 கிலோ எடையுள்ள அந்த பெண் 48 கிலோவாக தனது எடையை வீட்டில் இருந்த படியே மாற்றி இருக்கிறார். இதற்கு என்ன செய்தால் என அந்த பெண் கூறிய விளக்கத்தை பார்க்கலாம்.

குறைந்தது 30 நிமிடங்கள் நடக்கவும்

நடைபயிற்சி என்பது உங்கள் எடையைக் குறைக்க உதவும் ஒரு எளிய மற்றும் பயனுள்ள உடற்பயிற்சி ஆகும். இந்த வீடியோவில் தனுஸ்ரீ தினசரி 30 நிமிடம் நடப்பதை விளக்கம் அளித்துள்ளார்.

நடப்பதற்கு வெளியே சென்று தூரம் தான் கணக்கிட வேண்டும் என அவசியமில்லை. வீட்டுக்குள்ளேயே நீண்ட தூரம் நடக்கலாம், நேரத்தை மட்டும் கணக்கில் வைத்து வீட்டுக்குள்ளேயே இதை செய்யலாம். இது செய்தும் நிரூபித்தும் காட்டியிருக்கிறார் தனுஸ்ரீ.

வயது முதுமை மற்றும் விரைவான எடை இழப்புக்கு நடைபயிற்சி பெருமளவு உதவியாக இருக்கும்.

புரதம் நிறைந்த உணவுகள்

  • புரதம் என்பது உடல் எடையை திறம்பட குறைக்க உதவும் ஒரு அத்தியாவசிய மக்ரோனூட்ரியண்ட் ஆகும்.
  • ஆராய்ச்சியின் படி, புரதம் என்பது முழுமையை ஊக்குவிக்கிறது மற்றும் பசியைக் குறைக்கிறது.
  • புரதத்துடன், போதுமான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும்.
  • நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும் மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை உறுதி செய்கிறது.

நீரேற்றமாக இருங்கள்

  • நிறைய தண்ணீர் குடிப்பது பசியைக் கட்டுப்படுத்த உதவும், ஏனெனில் சில நேரங்களில் தாகம் பசி என்று தவறாகக் கருதப்படுகிறது.
  • ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • போதுமான தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.

weight-loss-at-home-tips

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்

  1. வழக்கமான உடல் செயல்பாடு நீங்கள் எரிக்கும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பை ஆதரிக்கிறது.
  2. பயனுள்ள முடிவுகளுக்கு ஏரோபிக் மற்றும் வலிமை பயிற்சிகள் இரண்டையும் உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  3. நிபுணர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் 150-300 நிமிடங்கள் மிதமான தீவிர உடற்பயிற்சியை பரிந்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க: உட்கார்ந்து கொண்டே உங்க பெரிய தொப்பையைக் குறைக்கலாம்! எப்படி தெரியுமா?

அதிவேகமாக இரவு உணவு

மாலை 6-7 மணிக்குள் இரவு உணவு சாப்பிடுவது எடை இழப்பைத் தவிர பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.

இந்த எளிய பழக்கம் செரிமானத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை ஊக்குவிக்கவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவும்.

எடை இழக்க முயற்சிக்கும்போது உந்துதலாக இருப்பது சவாலானது, இந்த நேரத்தில் நேர்மறையான மனநிலையோடு இருப்பது மிகவும் முக்கியமானதாகும். உங்கள் மனநிலையை எப்போதும் தவறவிட வேண்டாம்.

View this post on Instagram

A post shared by Tanusree Srcd (@livefitwithtanu)

36 வயதில் 37 கிலோ எடையை குறைத்த தாய், எப்படி செய்தார் தெரியுமா?

  1. தினசரி 30-45 நிமிடம் வீட்டுக்குள் நடைபயிற்சி செய்யவும்.
  2. உடலுக்கு போதுமான புரோட்டின் மற்றும் ஃபைபர் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  3. தினசரி 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
  4. வீட்டிலேயே எடை பயிற்சி செய்யுங்கள்.
  5. முடிந்தவரை வேகமாக அதாவது 7 மணி அளவில் உங்கள் தூங்கும் நேரத்தை கணக்கு வைத்து இரவு உணவு உண்ணுங்கள்.
  6. தினசரி காலையை உடற்பயிற்சியோடு தொடங்குங்கள். இது பெரிதும் உதவியாக இருக்கும்.

Read Next

உட்கார்ந்து கொண்டே உங்க பெரிய தொப்பையைக் குறைக்கலாம்! எப்படி தெரியுமா?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version